(Reading time: 15 - 30 minutes)

ணவு இடைவேளையின் மணி அடிக்கவும் எல்லோரும் எழுந்து வெளியே சென்று கொண்டிருந்தனர்.  வேதிக்கும் கிளம்பி சென்றான்.  காலையிலிருந்து அவனுக்கு இருந்த பிரச்சனையில் சஞ்சய் அங்கேயே உட்கார்ந்திருக்கவும் சரயூ அவனிடம் நகர்ந்தவளாக

“என்னாச்சு சஞ்சு? இன்னைக்கு டல்லா இருக்க.  உடம்பு சரியில்லையா?” என்று கேட்டபடி அவனது நெற்றியை தொட்டுப் பார்த்தவள்

“சூடா இல்லையே!  என்ன பிரச்சனை?”

அவன் பதிலேதும் சொல்லமலிருக்கவும்

“ஏதாவது பர்சனல் ப்ராப்லமா? எங்கிட்ட ஷேர் பண்ணலாம்னா சொல்லு.  இல்லைனா வேணாம்” என்றபடி எழுந்துகொண்டாள்.

“இல்லை சரூ! உங்கிட்ட சொல்லாமலா.  நான் சொன்னா நீ தப்பா எடுத்துப்பியோனு தான் யோசனையாயிருக்கு” என்று வேகமாக மறுத்தவனின் குரல் மெல்ல தேய்ந்து தன் தயக்கத்தை தெரிவித்தது.

“தப்பா நினைக்கிற மாதிரி, நீ எதுவும் சொல்லமாட்டன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு.  என்ன விஷயம்னு தயங்காம சொல்லு மச்சா” எழுந்திருந்தவள் இப்போது அவனருகே உட்கார்ந்தாள்.

“நேத்தைக்கு நீ வந்த பஸ்ஸில் தான் நானும் வந்தேன்.  ஒருத்தனை நீ அடிச்சதைப் பாத்தேன்.  அவ…” என்று அவன் முடிக்கும் முன் இடையிட்டாள் சரயூ “ஆமாம்! அவன் தப்பு பண்ணினான்னு அடிச்சேன்.  ஒரு தப்பை தட்டிக் கேட்டேன்.  அதனால இப்போ என்ன ஆச்சு?!” என்றவளின் குரலிலும் முகத்திலும் ஆச்சரியம் இருந்தது.

“இன்னைக்கு நீ பஸ் ஸ்டாப் வராமலிருக்கவும் அந்த அறை வாங்கினவனால் உனக்கு ஏதாவது பிரச்சனையாகிருக்குமோன்னு ரொம்ப கவலையாயிருந்தது.  வேறேதாவது காரணத்தினால் நீ அங்க வரலைனாலும் காலேஜ் வந்திருப்பன்னு தான் உடனே இங்க வந்தேன்.  அந்த டென்ஷன் இன்னும் குறையலை”

“சாரி மச்சா!  எனக்காக நீ எவ்வளவு யோசிச்சிருக்க.  ஆனாலும்…. அவனெல்லாம் ஒரு ஆள்னு நினைச்சு பயந்தா வாழவே முடியாது. அவனால எதையும் செய்யவும் முடியாது.  எங்கப்பா சொல்லுவாங்க நல்லது செய்றவங்களுக்கு நல்லதே நடக்கும்னு… எனக்கு எந்த கெடுதியும் வராது.  சரி விடு! அப்படி உனக்கொரு டவுட் வந்ததுமே எனக்கு போன் பண்ணியிருக்கலாம் தானே?” என்றவளின் முகம் அந்த பஸ்காரனின் நினைவில் சிவந்திருந்தது.

“உன் போன் நம்பர் எங்கிட்ட இருந்திருந்தா நல்லா தான் இருந்திருக்கும்”

“சே! எப்படி மறந்தேன்.  நேத்திக்கே நம்பர் எக்ஸ்சேஞ்ச் செய்திருக்கனும்.  நீயாவது சொல்லியிருக்கலாம் சஞ்சு.  இப்போ பாரு உனக்கு தான் வீண் டென்ஷன்.  உன் நம்பர் சொல்லு” என்று அவனின் நம்பரை தனது கைபேசியில் பதிந்தவள் அவனுக்கு ஒரு குறுந்தகவலும் அனுப்பினாள்.

“மெஸ்ஸெஜ் அனுப்பியிருக்கேன் பாரு! நம்பரை மறக்காம சேவ் பண்ணிக்க”

“நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே?”

“ப்ச்ச்….என்ன சஞ்சு?! நீ மறுபடியும் அதையே சொல்லிட்டு.  என்னை உன் ஃப்ரெண்டுன்னு நினைச்சா இன்னொரு முறை இப்படி கேட்காம என்ன சொல்லனுமோ அதை எப்போவேணாலும் சொல்லலாம்”

“நிச்சயமா நீ என்னோட ஃப்ரெண்டுதான் சரூ.  இனிமேல் என்ன கேட்கனும்னாலும் தயங்காம கேட்பேன்.  தேங்க்ஸ் எ லாட்” என்றவனின் மனதில் ஒரு வகையான சந்தோஷம் கலந்த அமைதி பரவவும்; அதன் பிரதிபலிப்பாக முகத்தில் ஒரு மென்னகை.

“ஃப்ரெண்ஸ்குள்ள எதுக்கு தேங்க்ஸ்?” என்று புருவங்களை அவள் உயர்த்தவும்

“இல்லை இல்லை! இனிமேல் சொல்லலை” என்று தன் இரு கைகளையும் உயர்த்தி சரணடைந்தான் ஜெய்.

“அப்படி வழிக்கு வா!” என்று புன்னகைத்தாள்.

“இப்போ சொல்லு சஞ்சு! என்ன விஷயம்?”

“உங்கப்பா சொன்னது போல நல்லவங்களுக்கு நல்லது தான் நடக்கும்.  அதே போல இன்னொரு பொன் மொழியும் பெரியவங்க சொல்லுவாங்க – ‘துஷ்டனை கண்டால் தூர விலகு’.  இதை பற்றியும் நீ யோசிக்கனும்.  அதே சமயத்துல அவன் தப்பு செய்ததால தண்டனை கிடைக்கனும்.  நீ போலிஸ்ல சொல்லியிருக்கனும் சரூ” என்றபடி அவள் என்ன நினைக்கிறாள் என தெரிந்து கொள்ள அவளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான்.

“நீ சொல்றதும் சரி தான்! இதையே தான் அப்பாவும் கொஞ்சம் வேற மாதிரி நேத்து நைட் சொன்னாங்க” என்றவளின் மனதில் ‘இவன் அப்பா மாதிரியே யோசிக்கிறானே!’ என வியந்தவள் அதை அப்படியே வெளிபடுத்தினாள்

கண்களில் ஆச்சரியம் மின்ன “நீ எங்கப்பா மாதிரியே பேசுறியே! அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.  அவர் எது சொன்னாலும் செய்தாலும் அது எப்பவுமே சரியாதான் இருக்கும்”

சரயூவின் இந்த பேச்சு அவனையும் அவளுக்கு பிடிக்குமென்று சொல்லாமல் சொன்னதால் தனக்குள் எழுந்த சந்தோஷ அலைகள் தன் முகக்கரையை தொடாமல் தடுத்து நிறுத்த அரும்பாடு பட்டான் ஜெய்.  அவள் தன்னையேப் பார்ப்பதை உணர்ந்தவன் பேச்சை மாற்ற எண்ணியவனாய்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.