(Reading time: 34 - 68 minutes)

05. அதில் நாயகன் பேர் எழுது - அன்னா ஸ்வீட்டி

Athil nayagan per ezhuthu

ப்ரியாவிடம் பேசிக் கொண்டிருக்கையில் அங்கு சிற்பி வந்ததைப் பார்க்கவும் விவன் அதோடு பேச்சை நிறுத்திவிட்டான் எனில், ப்ரியாவும் விவன் பிடித்திருந்த தன் கையை உருவிக் கொண்டாள். ஒருவித அமைதி நிலவியது சில நொடி….

இப்போது இடையிட்டது சிற்பி…. “எனக்கு உங்கட்ட கொஞ்சம் பேசனும் விவன் சார்….” என விவனிடம் தொடங்கிவிட்டு…..பின் ப்ரியாவை பார்த்தவன்…..”நீங்க கொஞ்ச நேரம் கார்ல இருங்களேன்…” என இவளை தூர அனுப்ப முனைந்தான்.

இவளும் இரு ஆண்களையும் ஒரு முறை பார்த்துவிட்டு கடகடவென காரை நோக்கி நடந்தாள்…. விவனது கார் கதவு திறக்கும் சிக்னல் சவ்ண்ட் காதில் விழுகிறது….போய் திறந்து அமர்ந்து கதவை ஓங்கி ஒரு அறை….

சிற்பியும் விவனும் கூட அவர்கள் நின்ற இடத்திலேயே நிற்காமல்…..கார் பார்க்கிங்கிற்கு சற்று அருகாய் வந்திருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது இவளுக்கு தெரிகிறது…..சத்தம் தான் கேட்கவில்லை….

ப்ரியா செல்லவும்  அவளுக்கு கார் கதவை ரிமோட் கீயால் திறக்க காரை நோக்கி ஓரளவு நடந்திருந்தான் விவன். அவன் அருகில் சென்றிருந்த சிற்பி மீண்டுமாய் ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்து யாரும் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவன்….

“ எதுக்கு விவன் சார் இப்டி மேரேஜை ரெஜிஸ்டர் செய்தீங்க…..அந்த செபின்ட்ட இருந்து ப்ரியாவ காப்பாத்தவா….இல்ல இந்த ப்ரெக்ன்சி விஷயத்துல ப்ரியாவ சேஃப்கார்ட் செய்யவா….?.....” என ஒரு ஆராய்ச்சி பார்வையுடன் கேட்டான்.

அதோடு “ ப்ரியாவோட பேபி உங்களோடது இல்லைனு மட்டும் தெளிவா புரியுது…..” என எனக்கு உண்மை புரியுது உன்னையும் புரியுது என்ற ஒரு பாவத்தில் சொல்லி முடித்தான். அவன் பார்வையிலும் குரலில் மரியாதையும் கூட எட்டிப் பார்த்தது…..

 இதைத் தான் ப்ரியாவை வைத்துக் கொண்டு எப்படி பேச என சிற்பிக்கு தயக்கம்…..அதனால்தான் அவன் ப்ரியாவை விலக்கி அனுப்புகிறான் என்பதை விவனும் கொஞ்சம் யூகித்திருந்தான்….

விவன் கடைசியாக ப்ரியாவிடம் பேசிக் கொண்டிருந்த விஷயம்  மற்றும் வகையைப் பார்க்க சிற்பிக்கு இப்படித்தான் தோன்றி இருந்தது…..குழந்தை விவனோடது இல்ல……ப்ரியா மேல உள்ள காதல்ல அவளுக்கு ஹெல்ப் பண்றதா நினைத்து விவன் இப்படி செய்கிறானோ என ஒரு எண்ணம்….

சிற்பியை நேருக்கு நேராக தீர்க்கமாய் பார்த்த விவன்…” இன்னொரு டைம் அது என் பேபி இல்லைனு சொல்லாதீங்க….” என சொல்லிய குரலில் இருந்தது கட்டளையும் கட்டாயமும் கூடவே நட்பின் சின்னஞ்சிறு யாசகமும்.

 “நான் ஒரு குழந்தையுள்ள விடோவரா இருந்து…..ரியா என்னை மேரேஜ் செய்தா என் குழந்தை ரியாக்கு யார்?……அதே வகையிலதான் இப்ப ரியாட்ட இருக்ற குழந்தை  என் குழந்தை……ஏன்னா அவ என் வைஃப்….” தொடர்ந்து இதை சொல்லும் போது விவன் வார்த்தைகளில் வந்திருந்ததோ ஒரு பிடிவாதம்? அது சிற்பிக்கு பிடிக்கத்தான் செய்கிறது….

 சிற்பி முகத்தில் சின்னதே சின்னதாய் ஒரு புன்னகை…. அவன் குணத்திற்கு விவன் சொல்வதை அவனால் மனதிற்குள் பாராட்டாமல் இருக்க முடியவில்லை…. அதற்காக விவனின் அப்ரோச் அனைத்தையும் சரி எனவும் அவனால் ஒத்துக் கொள்ள முடியவில்லை…

“இத நீங்க ப்ரியாட்ட தெளிவா சொல்லி மேரேஜ்க்கு கேட்கனும் விவன் சார்…. அதைவிட்டுட்டு மேரேஜ நீங்களா ரெஜிஸ்டர் செய்துட்டு…..அதோட குழந்தைய கொடுத்துட்டு போய்டுனா என்ன அர்த்தம்….? அவங்க அதை எப்படி சரியா புரிஞ்சுக்க முடியும்னு நீங்க நினைக்கிறீங்க…?” கேட்க வேண்டியதை ஒழுங்காய் கேட்டான் அவன்.

“இது எல்லாத்தையும் நான் ரியாட்ட பேசுறதாதான் இருக்கேன்…..”  விவன் வசம் நட்பு தொனி கூடுகிறதுதான்…

 “பட் அதை கவனிச்சு காது கொடுத்து கேட்க….என்ன சொல்ல வர்றேன்னு  புரிஞ்சுக்க அவ கொஞ்சம் ரெடியாகனும்…..” நிதானத்தின் வாசம் அவன் வசம்……

“அவளுக்கு என் மேல துளி கூட நம்பிக்கை கிடையாது….அதனால ஹாஸ்பிட்டல் வந்து அவளுக்கு விஷயம் கன்ஃபார்மா தெரியட்டும்…  சிச்சுவேஷன் என்னன்னு அவ ரியலைஸ் செய்யட்டும்…..அடுத்த பேசிப் பார்க்கனும்னுதான்  நானும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…” வசப்படும் பொறுமை சுவடுடன்  சொல்லி வந்தவன் சற்று நிறுத்தி……

இப்போது சிற்பியை ஒரு ஆழப் பார்வை பார்த்தான்…”இதை எனக்கு ரியா தவிர யார்ட்ட பேசவும் இஷ்டம் இல்ல….” கட்டுபடுத்தப்பட்ட .கடினத்தன்மை அவ்வரிகளில் தடம் பதிக்க……

“ஆனா இப்ப இருக்ற சிச்சுவேஷன்க்கு உங்கள மாதிரி அவ நம்புற ஒருத்தங்கட்ட சொல்றது தான் சரியா வரும் போல…..” எனும் போது ஒரு புரிதல் நிலைக்கு வந்து

“நீங்க சொல்றதையாவது அவ இப்ப இல்லைனாலும்  கொஞ்ச லாங்க் ரன்லயாவது நம்புவாளான்னு பார்க்கனும்….விஷயத்தோட சென்சிடிவிட்டிய புரிஞ்சுப்பீங்கன்னு நம்புறேன்…..” என்பது வரை அதே டோனில் தொடர்ந்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.