(Reading time: 34 - 68 minutes)

ன்னொரு டைம் உங்கட்ட கூட நான் இத பேச மாட்டேன்…..” எனும் போது வன்முறை செய்யும் அமைதியின் குரலில் …..குவிகிற உறுதித்தன்மையும், கூட வரும் இறுதித்தன்மையும், இதற்குள்ளாக இடையில் எங்கோ இழையோடும் ஒரு தகப்பனின் தவிப்புமாய் மாறி இருந்தான் அவன்.

 “ரியாவ நான் முன்னால ஒரு டைம் மேரேஜ்க்காக கேட்றுக்கேன் சார்……” என அவன் பக்க விளக்கத்தை தொடங்கினான்.

“அப்போ அவ முடியாதுன்னு சொல்லிட்டா…..அடுத்து  நான் அவளை எந்த வகையிலும் தொந்தரவு செய்தது கிடையாது…..இன்னைக்கு மார்னிங்க் என் தங்கை மேரேஜ்…..அது முடிஞ்சு நான் இந்த வீட்டுக்கு வந்துறுக்கப்ப செபின்னு ஒருத்தன் வந்தான்……அவன்தான் எனக்கும் ரியாக்கும் வெட்டிங் ரெஜிஸ்டர் ஆகியிருக்குது….அவ ப்ரெக்னென்ட்னு ரிப்போர்ட் வந்துறுக்குனு சொல்லி கன்னா பின்னானு எதோ கேட்டான்…..

எனக்கு விஷயத்தை நம்ப முடியலை…பட் மேரேஜ் நிக்ற அளவுக்கு போயிருக்குனா எப்டி இக்னோர் செய்ய…..?? அதனால அது சம்பந்தமா எனக்கு தெரிஞ்சவங்க மூலமா அப்பவே  ரெஜிஸ்டர் ஆபீஸ்ல விசாரிச்சு…..கூடவே அந்த டாகுமென்ட்ஸை அங்க இருந்து எங்க லாயர்க்கு மெயில் செய்ய வச்சு…. லாயர்ட்டயும் பேசி….அந்த செபின் சொன்ன ரிப்போர்ட் கொடுத்த ஹாஸ்பிட்டல்ல க்ளாரிஃபை செய்துன்னு….. எல்லா சைடும் விசாரிச்சு முடிச்சப்ப……எனக்கு கிடச்ச இன்ஃபோ என்னனா……எப்டி ரெஜிஸ்டர் ஆச்சுதுன்னு தெரியலனு நாங்க சொல்லிகிட்டாலும்….. அதுல உள்ள சிக்னேசர் வரை எல்லாம் ஒரிஜினல்…..அதாவது எங்களோடது….. அது ப்ரப்பரா ரெஜிஸ்டர் ஆன மேரேஜ்…..இன்டியன் கவர்மென்ட் முன்னாடி நாங்க கண்டிப்பா ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்தான்…..வேணும்னா டிவோர்ஸ் வாங்கித்தான் இதுல இருந்து வெளிய வர முடியும்…..அதுக்கு மினிமம் ஒன் இயர்க்கு பிறகுதான் அப்ளை செய்யவே முடியும்ன்றதுதான்….

இப்படி ஒரு நிலமையில் ரியாக்கு பிறக்கிற பேபிக்கு சட்டபடி யார் ஃபாதர்…? நான் அது என் குழந்தை இல்லைனு சொல்லாத வரைக்கும் லீகலி நான் தானே அப்பா…. நான் அது என் பேபி இல்லைனு சொன்னா அது இல்லிஜிடிமேட் சைல்ட்…. அப்படி ஒரு நிலமையில் அந்த குழந்தையையும் ரியாவையும் நிப்பாட்ட என்னால முடியாது……

எனக்கு ரியாவப் பத்தி தெரியும்…..அவ மாரல் வேல்யூஸையும் தெரியும்…. கண்டிப்பா யார்ட்டயும் எல்லை தாண்டி பழகல்லாம் அவளால முடியாது….. கன்சீவா இருக்றதை மறச்சு இன்னொருத்தனை மேரேஜ் செய்றதும்  அவளால நினச்சு கூட பார்க்க முடியாத விஷயம்…..

இந்த மாதிரி அவ நிலமை…. இதுல இப்படி ஒரு குழந்தை….இதில் நானும் உள்ள இருக்கேன் அப்டின்றப்ப…… நீ என்னமும் செய்துட்டு போன்னு விட என்னால முடியலை…..

அவ என் வீட்டுக்கு வந்தாளே அதுக்கு ஜஸ்ட் முன்னதான் இந்த சிச்சுவேஷன்ல இருந்து வெளிய வர டிவோர்ஸ் தவிர வேற வழி இல்லை….இது தான் நிலமைனு எனக்கு தெரியும்…..

ரியா முன்னால என்னை மேரேஜ் செய்ய இஷ்டம் இல்லைனு சொல்லி இருக்கா…..ஸ்டில் அவ இந்த ஷாக்ல இருந்து கொஞ்சம் வெளிய வரவும் அவட்ட எங்க மேரேஜ்க்கு கேட்டு பார்க்கனும்… பேசனும்னு நினச்ச நேரம் அவ என் வீட்ல வந்து நின்னா….

எனக்கு எல்லாமே போச்சுன்னு அவ அழுத அந்த நொடி நான் என்ன சொல்ல முடியும்….? ஒன்னும் போகலை நான் இருக்கேன் அது நம்ம குழந்தைன்னு சொல்லி வச்சேன்…. லீகலி அதுதானே நிலமையும்….என் மனச பொறுத்தவரைக்கும் கூட அது அப்படித்தான்….

ஏற்கனவே அவள வளர்த்த ஃபேமிலியையும் இப்பதான கொஞ்சம் முன்னால லாஸ் செய்திருக்கா…..இதுல நானும் இது எனக்கு தெரியாம நடந்த மேரேஜ்…. குழந்தையும் என்னோடது இல்லைனு  சொல்லி இருந்தா அடுத்து அவளுக்கு என்ன ஹோப் இருக்கும்….? என்ன மாதிரி முடிவுக்கு போவாளோ….?? இப்ப என்னதான் என் மேல அவ கோபத்துல இருந்தாலும் அது என் குழந்தை…..அதோட பொறுப்பை நான் ஏத்துகிட தயாராதான் இருக்கேன்றது அவளுக்கு எப்படியும் உள்ளுக்குள்ள ஒரு தைரியத்தை கொடுக்கும் இல்லையா….?

அடுத்து அவ இப்ப கொஞ்சம் சூழ்நிலைக்கு அடாப்ட் ஆனதும் எல்லாத்தையும் ஓபனா பேசனும்னுதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…. இதுல அவளுக்கு குழந்தைய காமிச்சு அவள என் கன்ட்ரோலுக்கு கொண்டு வர்றேன்னு அடுத்த பயம்…..அதான் குழந்தைய கொடுத்துட்டு வேணும்னாலும் போன்னு சொல்லி இருக்கேன்….

பைதவே இது எதையும் நான் சும்மா பேச்சுக்காகவும் சொல்லி வைக்கலை…..இன் கேஸ் அவளுக்கு என்னை மேரேஜ் செய்றதை ஒத்துக்கவே முடியாதுன்னு  இருந்தால்….உண்மையில் பேபி பிறக்கவும் என்ட்ட கொடுத்துட்டு போகட்டும்….. என்னை அவ்ளவு பிடிக்காத ஒருத்தியை நான் இதில் எப்டி  கட்டாய படுத்த முடியும்…..??

எப்பவுமே எனக்கு  பேபி அடாப்ஷன்றது ஒரு நல்ல விஷயமா படும்……. என் மேரேஜ்க்கு பிறகு எனக்கு ஓன் சைல்ட் இருந்தா கூட, வைஃபும் சம்மதிச்சா ஒரு பேபியாவது அடாப் செய்யனும்னு நினைக்கிறவன் நான்……. இதில் இப்ப ஒரு குழந்தை என் குழந்தைன்ற பேர்லயே பிறக்குது…..அதை தேவை இல்லாம நான் இல்லிஜிடிமேட் சைல்டுன்னு உலகத்து முன்னால நிறுத்தனும்னு என்ன அவசியம்…..என் குழந்தையாவே வளர்த்துட்டு போய்டுவேன்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.