(Reading time: 34 - 68 minutes)

காரிலிருந்த ப்ரியாவோ நாக்கற்ற நரக நெருப்பு அவளை ஆக்ரோஷமாய் ஆக்ரமித்து அபகரித்து கபளீரம் செய்வது போல் வெந்து கொண்டிருந்தாள்….

நம் சமூக அமைப்பை பற்றி நமக்கு யாரும் சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை….அதை அறிந்து அனுபவித்து அதற்குள் அடைபட்டு…..அதோடு இயைந்துதான் வளர்கிறோம்….ஆனால் சில விஷயங்கள் எத்தனைதான் இது இப்படித்தான் எதிர் கொள்ளப்படும் இங்கு என தெரிந்து வளர்ந்தாலும் கூட அதை அனுபவிக்கும் போது அதை அறிந்து கொள்ளும் ஆழமும் அகலமும் அதிகம்….அதுதான் ப்ரியாவிற்கும் நேர்ந்திருந்தது….

ஹாஸ்பிட்டல் நிகழ்வு அவளை அள்ளி அலையாடி செதில் செதிலாய் சீராய் சிதற சிதற பிரித்தெறிந்தது…..… நொருங்கி நொடிந்து ஒடிந்து போனவளுக்கு உலகைவிட்டே எங்கோ ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும் என்பது போல் உணர்வு…..

இவளது எதிர்காலம் என்ன? தெரியாது!!!

குழந்தையின் எதிர்காலம்?.... தெரியாது!!!!!

சாப்பாட்டுக்கும் தங்குமிடத்துக்கும் குழந்தை வளர்ப்புக்கும் என்ன செய்ய போகிறாள்?... தெரியாது…!!!!

எதெற்கெடுத்தாலும் மயங்கி விழும் இந்த ஹெல்த்தில் இவ எப்படி வேலைக்கு போக?.... தெரியாது!!!!

விவனது நோக்கமென்ன?... தெரியாது…!!!!!

இவளும் குழந்தையும் செய்த தப்பு என்ன? சமுதாயம் இவர்களை ஏன் தண்டிக்கிறது?.... தெரியாது!!!!

எதையும் யோசிக்க முடியாமல்…..என்ன நினைக்க என புரியாமல்…..தலையை இரு கைகளால் பிடித்தபடி அமர்ந்து விட்டாள். இப்டியே உயிர் போய்ட்டா எவ்ளவு நல்லா இருக்கும்…?? பூர்விக்கா மட்டும் இருந்தா இப்போ எவ்ளவோ நல்லா இருந்திருக்குமே….

“என்னமா நீ…..அவ சூசைட் அட்டெம்ட் செய்துறுக்கா…. இப்பவும் செத்தா கூட சாகட்டும் ஆனா அவ விரும்புற பையனுக்கு கல்யாணம் செய்து கொடுக்க மாட்டேன்னு லூசு மாதிரி பேசிகிட்டு இருக்க…….பேசாம இந்த கல்யாணத்த செய்து வச்சுட்டு அவ செத்துட்டான்னு நினச்சுட்டு நிம்மதியா இரு……அவ எங்காவது வாழ்ந்துட்டு போகட்டும்….” இவளது காருக்கு இடப்புறமாக யாரோ ஒரு வாலிபன் சற்று வயதான பெண்மணியிடம் இப்படி பேசிக் கொண்டே நடந்து போவது கண்ணில் படுகிறது….

சட்டென முடிவுக்கு வந்தாள் ப்ரியா…. செபினை திரும்பவும் பார்த்து மேரேஜுக்காக பேசனும் என சிற்பியிடம் ராகா சொல்லிக் கொண்டிருக்கும் போதே இவள் மனதில் தற்கொலை எண்ணம் வந்து போனதுதான்…..இப்ப என்ன….விவனை மேரேஜ் செய்து குழந்தைய அவன்ட்ட கொடுத்துட்டு இவ செத்து போய்ட்டா என்ன? எப்டியும் சாக முடிவு செய்தாச்சு குழந்தையாவது வாழ்ந்துட்டு போட்டுமே….!!!

இப்படி ஒரு முடிவுக்கு வரவும் ஏன் என்றே புரியாமல் எங்கோ அடி ஆழ மனதில் அவளறியா ரகசிய மனஸ்தலத்தில் ஒரு நிறமற்ற நிம்மதியும் தூய துங்கவ சந்தோஷமும் விதைவிட்டு முளை பிறப்பிக்கிறது…. குட்டியானைகள் குழப்பிய குட்டையாய் குழம்பிப் போனாள் இவள்….

சரி ஏதோ ஒரு வகையில் இப்போதைய ப்ரச்சனைய தாண்ட வழி கண்டு பிடிச்சுட்டோம் என நிம்மதி வருவதை கூட ஒத்துக் கொள்ளலாம்….இதென்ன சந்தோஷம்….? சாக முடிவெடுப்பதுல என்ன சந்தோஷம் இருக்க முடியும்??? அப்ப இந்த சந்தோஷம் எதுக்கு ???

இப்போது விவன் பின் தொடர காரை வந்தடைந்தான் சிற்பி….

விவனைப் பற்றி வெளியே விசாரித்துவிட்டு அடுத்து ப்ரியாவிடம் பேசலாம் என அவன் நினைத்திருந்ததால்

 “அங்க அரும்பாக்கம் அப்பார்ட்மென்ட் கிளம்பிடுங்க ப்ரியா….. உங்க  வீட்டு ஓனர்ட்ட சொல்லி நாளைக்கு வெகேட் செய்றேன்னு சொல்லிகலாம்…..ஒன் டே டிலேன்றப்ப ஒத்துப்பாங்கதான…..?” என இப்போது உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயங்களை ஆரம்பிக்க….

ப்ரியாவோ இது தான் முடிவு என ஒரு நிலைக்கு வந்திருந்ததால்……அதை சொல்ல ஏன் இழுத்தடிக்க வேண்டும் என்ற நினைவில்

 “ விவனோட சிஸ்டர் வீட்ல ப்ரச்சனை வராத அளவுக்கு எப்டி செய்யனுமோ அப்டி இந்த மேரேஜ அரேஞ்ச் செய்ய சொல்லுங்க சிற்பி….” எதிரில் நின்றிருந்த இரு ஆண்களின் முகத்தையும் ஏறிட்டும் பார்க்காமல், சவம் போல முகத்தோடு இதை சொல்லி வைத்தாள்.

“ அவசரபடாதீங்க ப்ரியா…” என ஏதோ மறுப்பாக ஆரம்பித்தான் சிற்பி…. இதற்குள் அருகில் வந்திருந்த விவனோ இவள் எதை இப்படியாக சொல்கிறாள் என புரியாமல் பார்த்தான்….. அவள் மனதில் உண்மையில் என்ன முடிவுக்கு வந்திருக்கிறாளோ என்றிருக்கிறது இவனுக்கு..

இப்போது விவனைப் பார்த்தபடி “விடுங்க சிற்பி….சூசைட் பண்றதுக்கு இது பெட்டர் முடிவுதான்….” இவள் அதே சவ குரலில் தொடர….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.