(Reading time: 34 - 68 minutes)

வ்வாறு சிந்தித்து ஆண்வேடமிட்டு மீண்டுமாய் மானகவசனை தேடிச் சென்றாள். இவள் எண்ணமிட்டது போல், அரச குடும்பத்தினர் கோட்டையிலிருக்கும் காலத்தில் உயிர்நீத்தால் அவர்களை இறுதி சடங்கிற்கு ஆயத்தம் செய்யும் இடத்தின் அருகில் தான் காணக் கிடைத்தான் அவன்….

அதன் அருகில் உள்ள இடுக்கு வாயில் வழியே கோட்டையைவிட்டு பிறர் கவனம் கவரா வண்ணம் வெளி செல்ல முடியும்…. அதோடு பிறர் அங்கு வர அனுமதியும் இல்லை என்பதால் அவ்வழியை அவன் தேர்ந்தெடுப்பான் என்பது இவள் யூகம்…

ஆனால் அவன் இவளுக்காக காத்திருந்ததுதான் இவள் வியூகத்திற்கு விரோதமாயிருந்தது…. இவள் அவனை ரகசியமாய் பின் தொடர முனைப்பும் முழு ஆயத்தமாய் சென்றிருக்க….

முன்பிருந்த அதே உடையில், அதிகபடியாக தலையில் போர்கவச தலைசீராவை மட்டுமாய் அணிந்திருந்தவன் அருகில் நின்ற அடுத்த பாண்டியனிடம்……

“இல்லை வரதுங்கா…… அந்த ருயமருத்ரன் மாத்திரம் உடன் வருவது போதும்…..நீ இங்கு கோட்டைக்குள் செய்ய வேண்டிய ஆயத்தங்களை துரிதப்படுத்து….. அஃதோடு நமக்காக சைலபத்ரர் நியமிக்கும் அணியின் வீர்ர்களுடன் சற்று அறிமுகமாகிக் கொள்……  அந்த ருயமருத்ரனுக்கு எப்படியும் இந்நேரம் நம் போர்திட்டம் அறிவிக்கப்பட்டிறுக்கும்…. கோட்டை  பாதுகாப்பை என்னை நம்பியெல்லாம் முழுவதுமாய் ஒப்படைக்க அந்த ருயமனால் முடியாது……..எப்படியும் என் செயல்பாடுகளை கண்காணிக்கும் நோக்கிலாவது இங்கு வருவான்….புரிந்த வரை அவனது நாட்டுப் பற்றல்லாம் நன்றாய்த்தான் இருக்கிறது….. நான் அழைக்கும் முன்பாக கூட என்னோடு வர அவனே அனுமதி கேட்பான்…” என பாவை மனதிற்குள் வசிப்பவன் போன்று இவள் நினைவு வயணங்களை பிழை இன்றி பகர்ந்து கொண்டிருந்தான்.

இதற்கு மேலும் கால விரயம் மதியீனம் எனத் தோன்ற உடனடியாக இவள் மறைப்பிடத்திலிருந்து வெளிப்பட்டு அந்த பாண்டிய படைதலைவனை நேரடியாக நாடி சென்றாள். இவள் மனமோ இந்த முற்றுகையை அறியும் முன்பே இவன் கவசமணிந்துதானே இருந்தான்….. என குறிக்கிறது….

இவர்களை முழுவதுமாய் நம்பவில்லை என்பதுதானே அதன் பொருள்…..ஆனாலும் இவன் மனோதைரியத்தை பாராட்டத்தான் வேண்டும்…..எதிரி கோட்டைக்குள் எதை நம்பி வெறும் இருவராக திருமணம் பேச வந்தான்….??

இவர்கள் அனுப்பிய சமாதான உடன்படிக்கை கோரும் ஓலை மீது நம்பிக்கை கொண்டா? அது சதியாக இருந்து இவனை இங்கு வரவழைத்து கொலை செய்திருந்தால்?

 நாட்டின் சேனாதிபதி என்பவன் ஒரு தேசத்தின் வலக்கரம் போன்றவன் அல்லவா?? தொடர்ந்து ஜெயமெடுக்கும் பாண்டியர்களை தோற்கடிக்க இவர்கள் தேசம் அப்படி ஒரு துரோக முறையை நாடாது என இவளுக்கு தெரியும்……ஆனால் அவன் எதை வைத்து இவர்களை நம்ப வேண்டுமாம்?

அதனால்தான் எப்போதும் கவசம் அணிந்தே இருந்தான் போலும்…… இவனுக்கு தைரியமுமிருக்கிறது சமயோசிதமும் இருக்கிறது….. இப்படிபட்டவன் துணையாக தன்னை மட்டும் தேர்ந்தெடுப்பதன் நோக்கம் என்ன என, இவள் மனமோ ஏனோ அவனை சுற்றியே சுழல்கின்றது….

“வந்தனம் பிரபு…. தங்கள் திட்டம் பிரமாதம்……அதை செயல்படுத்தும் விதத்தில்தான் வெற்றி அடங்கி இருக்கிறது…..அதற்கு அடியேனையும் நம்பி உம்மோடு சேர்த்துக் கொள்வதற்கு ப்ரத்யேக நன்றிகள்….” கோட்டைப் படிகளில் தாவி இறங்கியபடி அறிவித்துக் கொண்டே அவன் புறம் சென்றாள்…

அடுத்து சில மணி துளிகளில் கோட்டையைவிட்டு இரு புரவிகள் இருளின் மறைவில் வெளியேறின…..

தனத்துடன் வாளேதும் இல்லாமல் போரிடும் புதுக் காற்று புரவிப் பயணங்களின் சுவாரஸ்யங்களில் ஒன்று…...ருயம்மா அவ்வாய்ப்புகளை ரசித்து சுகிக்க இம்மட்டும் தவறியதில்லை….. ஆனால் இன்று அப்படியெல்லாம் எதையும் ஏற்று இன்புற இவள் புறம் இயலவில்லை….

வாட்பயிற்சி போர்பயிற்சி என அனைத்தும் இவளுக்கு தளபாடம் தான்…..ஆனால் போர்களம் இவளுக்கு புது அனுபவம்… பயமென்று ஏதுமில்லை….. தாய்தேசத்திற்காக சிர தானம் செய்வதைக் காட்டிலும் அரச மங்கையான இவளுக்கு வேறு பெரும் கடமையும் ஏதுமில்லை….

உண்மையில் தேசத்திற்கான இப்பயணத்தில் இவளறியா ஆழ்ந்த அடர் ஆனந்தம், ஒரு சிறு கர்வம், விம்மி எழும் வெற்றி உணர்வு அனைத்தும் கூட வருகின்றது இவளுக்கு….. பிறருக்காய் வாழ்வதுதான் வாழ்க்கை போலும்…. அது தரும் சுகானுபவத்தை அரச போகம் தரவில்லை என்பது சர்வ சத்தியம்…

ஆனாலும் இவளால் இயல்பாய் இருக்க இயலவில்லை…..முக்கிய காரணம் இவள் நேரடி போர்களத்திற்கு செல்லவில்லை…..பகைவரின் எண்ணிக்கை மற்றும் பலத்தை ஒற்றறிய மானகவசன் இவளையும் அழைத்து செல்கிறான் என்பது ஏற்பாடு….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.