(Reading time: 34 - 68 minutes)

ன்ன ப்ரியா இப்டி பேசுறீங்க…” என சிற்பி அதட்ட

இவள் யார் முகத்தைப் பார்த்துக் கொண்டு இதை சொன்னாளோ அந்த விவனோ சற்று முகம் இறுகினாலும் எதுவும் சொல்லாமல் இவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பேசும் வார்த்தைகள் அவனுக்கு வலிக்கிறதென்றாலும், மூச்சு விட முடியாத அளவுக்கு கத்தாம, மயங்கி விழாம இருக்கிறாளே என்றிருக்கிறது அவனுக்கு…

“உங்கள மாதிரி 9 மாச அக்ரிமென்ட் மேரேஜுக்குலாம் என்னால ஒத்துக்க முடியாது விவன் சார்…. டைம் பீரியட் ஃபிக்‌ஸ் செய்து செஞ்சுகிற காண்ட்ராக்ட் கல்யாணமும், கான்ட்ராக்ட் சைன் செய்ற கால் கேர்ள் வேலையும்  எனக்கு ஒன்னாதான் தெரியும்….அதனால அப்டி எந்த அக்ரிமென்ட்டும் என்ட்ட எதிர்பார்க்காதீங்க….” முகம் பார்திருந்தவன் மீதிருந்து கண் எடுக்காமல் வார்த்தையால் குத்தினாள்…

ஒரு தேங்க்ஸ் வந்தது விவனிடமிருந்து பதிலாக….

சிற்பிக்கோ நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தையின் தோரணை பிடிக்கவில்லை என்றாலும் மனதுக்குள் சின்னதாய் ஒரு சந்தோஷம்….. இந்த  கான்ட்ராக்ட் மேரேஜ் கான்சப்டில் விவன் ப்ரியா ரெண்டு பேருக்கும் ஒரே தாட்தான இருக்குது….. விவன் ப்ரியவோட லைஃப் நல்லா இருக்கனும்னு நினைக்கிற மாதிரி, ப்ரியாவும் விவனோட சிஸ்டருக்கு ப்ரச்சனை வர கூடாதுன்னு இந்த சூழ்நிலையில கூட நினைக்கிற டைப்பாதான் இருக்காங்க….. மத்த விஷயத்திலும் இரண்டு பேருக்கும் ஒத்துப் போனால் நல்லாதான் இருக்கும்….

“ப்ரியா நீங்க கொஞ்சம் அவர் சைடயும் கேட்டுட்டு யோசிச்சு முடிவு செய்ங்களேன்…”  இப்போது விவன் புறத்தை சொல்ல முனைந்தான் சிற்பி…. இதுக்கு மேல இன்னும் ரெண்டு நாள் கழிச்சு பேசட்டும் என ஒத்திப் போடுவது ஒன்றும் வேலைக்கு ஆகும் விஷயமாக படவில்லை அவனுக்கு….

ஒரு புறம் அவளை அடித்தாளும் விரக்த்தி……மற்றொரு புறம் விவனை அடித்து அறைய வேண்டும் என இருக்கும் கோபம்..…இதில்… “ ஒரு ஃப்ராடு சொல்றதெல்லாம் நான் ஏன் கேட்கனும்….?” என ப்ரியா எடுத்தெறிய…..

 “நீ சொல்றது உனக்கே சரியா பட்டா சரிதான் ” இப்படியாக இம்மீடியட்டாக திரும்பி வந்தது விடை விவனிடமிருந்து…..

“அவர் என்ன சொல்ல வர்றார்னு கேட்கவே மாட்டீங்கன்னா என்ன அர்த்தம் ப்ரியா ?” இது சிற்பி. உங்க பக்கம் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு அவர் பேசுறார்…..நீங்க அவர் பக்கத்தை கேட்க கூட மாட்டேன்னா…?” அவன் தொடர…

‘செஞ்சவனுக்கு இவளுக்கு என்னல்லாம் செய்தோம்னு தெரியாதாமா ‘ என ஒரு சிந்தனை வந்தாலும்…. சிற்பியின் நிமித்தம்

” நீங்க நம்புற அளவுக்கு அப்படி என்ன கதை?” என சிற்பியிடம் கேட்டு தான் விஷயத்தை காது கொடுத்து கவனிக்க தயாராய் இருப்பதை அறிவித்தாள்.

“நீங்க பேசுங்க விவன்…” என இப்போது விவனை பேச்சு வார்த்தைக்குள் இழுத்த சிற்பி….”நீங்க ரெண்டு பேரும் பீச்சுக்கு வந்துடுங்களேன்…. ஹாஸ்பிட்டல்ல நின்னு எவ்ளவு பேச…..நானும் அங்க வந்து ஜாய்ன் செய்துக்கிறேன்…..” அவர்களுக்கு தனிமை கொடுக்கவென தான் கழன்று கொள்ள வழி பார்த்தான் அவன்.

“ஓகேதான ப்ரியா?” என ப்ரியாவிடமும் அனுமதி கேட்டான்.

இவள் இப்போது தலையை ஆட்டி வைக்க…. தான் வந்திருந்த பைக்கை நோக்கி நடக்க தொடங்கினான் சிற்பி… “மெரினால பார்ப்போம் விவன்” என்றபடி…. இங்க இருந்து மெரினா வர்ற டைமுகுள்ள பேசிடலாம்தானே….என்பது அவனுக்கு…

இவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே வந்து காரில் ஏறி அமர்கிறான் விவன் என இவளுக்கு தெரிந்தாலும்…..ப்ரியா அவன் முகத்தைப் பார்க்கவே இல்லை அடுத்து.

கார் கிளம்பி 10 நிமிடத்திற்குளெல்லாம் சிற்பியிடம் சொன்ன அனைத்தையும் இவளிடம் சொல்லி முடித்துவிட்டான் விவன்.

ஆமா…இவ இடையில ஏதாவது பேசினாதானே….. கேள்வி பதில்னு கொஞ்சம் டைம் அதிகமாகிறதுக்கு…. ஒரு உம் கூட கிடையாது இவ பக்கமிருந்து….

பேசி முடித்துவிட்டு இவளிடமிருந்து எதாவது பதில் வருமா என சற்று நேரம் அமைதியாக காத்திருந்த விவன்….” நீ என்ன நினைக்கிறன்னு எதாவது சொல்லு ரியா….. அப்பதான எனக்கும் புரியும் ” என்றான்…

“ம்…நீங்க சொல்றத நான் காது கொடுத்து கேட்கனும்ன்னு சிற்பிய ரெக்கமென்டேஷனுக்கு அனுப்பினீங்க…. அவங்களுக்காக நானும் இத காது கொடுத்து கேட்டாச்சு……நான் இதுக்கு எதுவும் பதில் சொல்லனும்னு கட்டாயம் இல்லையே….” இப்படியாக ஒரு பதில் இவளிடமிருந்து…

ப்ரியாவைப் பொறுத்தவரை நியாயமா இருக்க நினைக்கிறவனே தன்னைப் பத்தி தானே சொல்றப்ப நாலஞ்சு விஷயம் இல்லாததையும் சேர்த்து சொல்வான்…..இதில் இந்த விவன் ஒரு ஃப்ராடு…. அது இவளுக்கே தெரியும்….இதுல அவன் அவனைப் பத்தி சொல்லிகிறது எவ்ளவு உண்மையா இருக்கும்? என்றிறுக்கிறது…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.