(Reading time: 34 - 68 minutes)

ல்ல ரியாவுக்கு  குழந்தை வேணும்னாலும் எடுத்துக்கிடட்டும்…..ஸ்டில் ஹஸ்பண்ட் யாருன்னே தெரியாம அவளுக்கு குழந்தை இருக்குதுன்ற நிலைமைக்கு என்னோட டிவோர்ஸி அவ…..அது எங்க குழந்தைன்ற நிலை பெட்டர்தான்…..

இது எல்லாமே நான் அவளுக்கு கொடுக்ற ஆப்ஷன்தானே தவிர……என்னைப் பொறுத்தவரை இப்ப நான் ரியாவ மேரேஜ்னு செய்தா……இது உண்மையான மேரேஜ்…..அவ கூட கடைசி வரையும் சேர்ந்து வாழதான் ஆசைபடுறேன்…..அவளா இது வேண்டாம்னு சொல்லிட்டு போனா நான் அவளை கட்டாயப் படுத்த மாட்டேன்னு மட்டும்தான் சொல்றேன்….

இதையெல்லாம் அவட்ட தெளிவா சொல்லிட்டுதான் இப்ப சொல்ற வெட்டிங் செருமனிக்கோ இல்ல ரிஷப்ஷனுக்கோ நான் ப்ரொசீட் செய்வேன்…..அது கூட அவ சம்மதிச்சாதான்….. “  குழப்பமான தன் சூழலை தெளிவாகவும், நேரான தன் நோக்கத்தின் நெளிவு சுளிவுகளை பிசிறின்றியும் சொல்லி முடித்த விவன், சிற்பியின் முகத்தில் சேர்ந்திருந்த உணர்வுகளை  இப்போது சின்னதாய் கவனித்தவன்

“இது ஒரு பக்கம்…. இதோட இன்னொரு பக்கமும் இருக்குது…..” என அடுத்து தொடங்கும் போது  லேசர் வகை சின சிதறல் அவன் வதனமெங்கும்….. காணாமல் போயிருந்த கடினத்தன்மை கார அமிலங்களுடன் கடிவாளமின்றி ஹார்ஸ் ரைடிங் வந்தது அவன் கட்டுக்கடங்கி இருந்த கர்ஜனையில்…

“இந்த ரெஜிஸ்ட்ரேஷன் செய்தது யார்…..எதுக்காக செய்தான்…...” சத்தமடக்கி உறுமியவன்

”அந்த பேபி விஷயம்….. அதுவும் ரியூக்கே தெரியலை…….” எனும் போது வலியோடு வதைப்பும் தவிப்பும் வடு காட்டினாலும் அவன் வாய்சில் வந்திருந்தது வகைதொகையற்ற வன்முறை….

அடங்கி இருந்தாலும் ஆயிரம் வகை ஆயுதங்களுடன் அக்கினி பசி ஏந்தியது அது “இதையெல்லாம் யார் செய்றானோ அந்த வெறி நாய வெரட்டி வெரட்டி  வேட்டையாடனும்…..” எனும் போது…..

“அதுவரைக்கும் ரியூ சேஃப்டியையும் நான் பார்க்கனும்……பேபியையும்தான் ”  என முடிக்கும் போது அதற்கு முந்திய வரிகள் பேசியது அவன்தானா எனும் படியாய் அனிச்சம் பூ வருடல்…..அத்தனை கனிவு….கன்சர்ன் என எல்லாம்….

“இதெல்லாம் என் மனசாட்சிக்கு இந்த சூழ்நிலையில நியாயம்னு படுது….இதுல தப்பு எதாவது இருந்தா நீங்களே சொல்லுங்க……” என ஒரு அடிஷனும் கொடுத்து பதிலுக்காக இப்போது சிற்பியை பார்த்தான் விவன்….

சிற்பிக்கு விவனை இதற்கு முன் எந்த வகையிலும் தெரியாது…….அதோடு இது விவனின் வெறும் வாய் வார்த்தைகள்தான்….ஆனாலும் கூட அவன் பேச்சில் உண்மை இருப்பதாக முழுதாகவே நம்ப தோன்றுகிறது இவனுக்கு…… தான் விவன் இடத்தில் இருந்தால் கூட இப்படித்தான் யோசிப்போமோ என்றும் ஒரு உணர்வு….

கூடவே விவன் வார்த்தையால் வெளியிடாவிட்டாலும்கூட இவனுக்கு புரியும் விவனது ப்ரியா மீதான காதல்……கூடவே குழந்தையை தன்னதாய் இரக்கம் என்ற அடிப்படையும் தாண்டி நேசிக்கும் ஒரு வித பாங்கு…..

அதோடு விவன் சொல்லும் விஷயங்கள் ப்ரியாவுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்றும் புரிகின்றதுதான்…..ஆனால் விருப்பம் இல்லாத பெண்ணை எப்படி திருமணம் செய்ய சொல்வதாம் என்றும் இருக்கிறது………கூடவே இனிமே தான் கல்யாணம் நடக்கனுமா….? ஏற்கனவே சட்டபடி அவங்க ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்ன்றதுதனே இப்ப ப்ரச்சனையே என்றும் தோன்றுகிறது…….

அவன் பதில் சொல்லாமல் நிற்பதை கண்ட விவன்….”என்னைப் பத்தி விசாரிக்கனும்னா விசாரிச்சுகோங்க…..” என தன் கார்டை எடுத்து நீட்டினான்…..

மறுக்காமல் வாங்கி அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் பர்ஸில் வைத்துக்  கொண்டான் சிற்பி…..

 “நீங்களே அவட்ட கேட்டு சொன்னாலும் சரி….. இல்ல நான் பேசி முடிக்கிறவரை அதை கொஞ்சம் காது கொடுத்து அவள கேட்க சொன்னாலும் சரி….. செய்து கொடுங்க….ஆனா எதுனாலும் சீக்கிரம் செய்றது தான் சரியா இருக்கும்…..உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்…. “ விவன் முடிக்க…….

பேச்சு முடிந்ததன் அடையாளமாக இப்போது சிற்பி பார்க்கிங்கை நோக்கி நடக்க தொடங்கினான்….“விவன் சார் ஒரு ஒன் ஆர் டூ டேஸ் டைம் கொடுங்க…..” என நேரம் வாங்கியபடி….

“இனிமேலாவது சாரை விடுவீங்கன்னு நினச்சேன்…..” அதற்கு விவனின் பதில் இப்படி இருக்க….திரும்பி அவனைப் பார்த்த சிற்பியின் முகத்தில் நட்பின் புன்னகை…

 ஏதோ தோன்ற கைகுலுக்க கை நீட்டினான் சிற்பி….”வெரி சாரி….முதல்ல நான் உங்கட்ட இன்னும் கொஞ்சம் நிதானமா நடந்துறுக்கலாம்……இந்த விஷயத்தில் நியாயமா என்னால எது செய்ய முடிந்தாலும் செய்து தர்றேன்….”

விவனும்  சிறு புன்னகையுடன் நீட்டிய கையை பற்றி குலுக்கினான்…. “தேங்க்ஸ்….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.