“பாண்டியரே….”
அவனை தீண்டிய இவள் வாளை இடக்கையால் அசட்டையாய் விலக்கிய படி தன் புரவியை செலுத்தியவன்…..
“அத் தமக்கை கண்காணா தேசத்தில் அந்நியருக்கு காமகிழத்தியாகவோ….கால் கழுவும் அனுக்கியாகவோ விலை இன்றி விற்கப்படுவாள் என்றால்….?”
ஈரேழு ஈட்டியும் ஏழு வகை வாள்களும் வகிர்ந்தெடுக்கும் வலியை அவ்வார்த்தைகள் இவளுள் ஏற்றினாலும்…..அவன் சொல்ல வருவதின் பொருள் புரிய பொறுத்துக் கொள்ள முயன்றாள்…
“உமது ஆயுள் வரை அவளை எக்காரணம் கொண்டும் உம்மால் அதிலிருந்து மீட்க இயலாது என்றால்?.....அந் நினைவோடே வாழ்நாள் முழுவதும் நீர் வாழ்ந்தாக வேண்டும் என்றால்…?”
அதற்கு மேல் தாங்கொணா வேதனையில்
“போதும் தளபதியாரே புரிந்துவிட்டது” என அவன் வார்த்தைகளை நிறுத்த முயன்றாள் ருயம்மா….
“அந்நிய படையெடுப்பில் நாம் இழப்பது உயிரன்று ருமயரே…..இது அரச குலத்தவராகிய உமக்கு நிச்சயமாய் தெரிந்திருக்க வேண்டும்….. நாம் இழப்பது வாழ்க்கை…..நம் இளைஞர்கள் அடிமையாய் நாடு கடத்தப்படலாம்….மகளிரும் மழலைகளும் வணிகப் பொருளாய் வாரிக் கொண்டு போகப் படலாம்….இக்தெல்லாம் நம்மை சுற்றியுள்ள தேசங்களின் வாடிக்கைதானே….கேள்வியுற்றிருப்பீரே நீர்…..” இப்பொழுது அவன் அடுத்த கோணத்தை பகர்ந்தான்.
இவளிடமிருந்து அமைதியாய் ஒரு “ஆம்”
“தகப்பனாய் சகோதரனாய் தாயாய் இருக்கும் எவ்வுள்ளம் இதை தடுக்க வாளெடுக்காது என சொல்லும் நீர்…..மரணத்தை தடுக்க நான் போராடுவதில்லை….என்றாவது ஒருநாள் அது நிச்சயமாய் எனை வென்றுவிடும்…..இப்பொழுதும் இந்த காகதீய கோட்டையில் இருக்கும் உயிர்களுக்காய் நான் ஓடி வரவில்லை…..உள்ளே எத்தனை பெண்களும்….குழந்தைகளும் இருக்கின்றனர் என என்னைவிட உமக்கு தெரியும்…..
முன்னறிவிப்பின்றி…..போர் முகாந்திரம் இன்றி…. எவ்வித சமாதான தூதுமின்றி…..நடு நிசியில் துயில்கின்றவன் மேல் போர்தொடுக்கும் இத் துருக்கிய கூட்டம் வசம் அவர்கள் சிக்கினால் கதை என்ன?....” அவன் சொல்ல வரும் கருத்து இவளுக்கு புரிந்தாலும்….அவள் பெண்மையின் இதய விலாசங்களில் ஆயிரம் கோல் மரியாதை அழகான அபிமானம் எல்லாம் அவன் மீது கொணர்ந்தாலும் இவளுக்கு இதில் இன்னுமொரு வினா இருக்கின்றது.
ஆனால் இவள் அதை கேட்கும் முன்னம் “அக்கோட்டையில் வருங்கால பாண்டிய மகராணியும் இருக்கின்றார்…..என் சரீரத்தில் சிரசும்….என் நாசியில் சுவாசமும் இருக்கும் வரை அவரை எத்தீங்கும் நெருங்குவதை என்னால் அனுமதிக்க இயலாது….அது என் முதல்கடமை….” என்று வெளியிட்டான் சில வார்த்தைகள்….. அது சூளுரை….சத்தியம் பகர்தல்….ஜீவ உடன்படிக்கை.
சூழல் எதுவாய் இருந்தால் என்ன, இவள் எவ் வேஷத்தில் இருந்தால்தான் என்ன….இவளிடம் இவளுக்காய் தன் ஜீவனையும் கொடுப்பேன் என சொல்லிக்கொண்டிருக்கிறான் அவன்….. அடைப்பிட்டு பின் விடுதலையாகிறது இவள் சுவாசம்…..அடிவயிற்றில் அம்புலிகள் சிறைவாசம்…..நாசியில் மனோரஞ்சிதம் சுவாசம்…
அம்மெல்லிய வெளிச்சத்தில் விழியால் அவன் வதனம் வாசிக்க தலைப்பட்டாள்…. இவளுக்கு இணையாய் புரவியில் வந்து கொண்டிருந்தவன் இவள் புறமெல்லாம் விழி திருப்பி இருக்கவில்லை…..முன்புறம் நேர் கோட்டில் பார்வையை செலுத்தி இருந்தான்….
முன்பிருந்த புலிப் பார்வை இல்லாமல் அவன்….. கலைந்தாள்….
அனைத்தையும் தாண்டி இவள் அறிவில் உதிக்கிறது ஆலோசனை மின்னல் …… ‘அவன் கவனத்தை சிதறடிக்கிறது உனது உரையாடல்…. ‘ தன்னுடன் உரையாடுவதால் அவன் கவனம் கலைகிறது என தோன்றிவிட்டது ருயம்மாவுக்கு…..
அடுத்து அவனுடன் எதையும் விவாதிக்கமட்டுமல்ல விசாரிக்க கூட முற்படவில்லை இவள்….
துருக்கியர்கள் தங்கி இருப்பதாக எண்ணிய வனாந்தரம் வரை சென்று வந்தார்கள் இவர்கள் இருவரும்…… இவன் யூகம் முற்றிலும் உண்மை என உறுதியானது…. ஏறத்தாழ ஒன்பதாயிரம் பேருள்ள சேனையாய் அது இருக்கும் என புரிகிறது….ஏராளமான தளவாடங்கள்….உணவுப் பொருட்கள்….
இன்னுமாய் இரவு ஏற காத்திருக்கிறார்கள் போலும்…..
இப்பொழுது இவர்கள் கோட்டையை நோக்கி திரும்பி வர துவங்கினர் இவர்கள் இருவரும்…..
எதிரிகள் ஆயந்தங்களையும் ஆயுதங்களையும் நினைவு கூற இவளுக்குள் கிலேசம்….ஒருவித சோர்வு…..இவர்கள் கோட்டையை இதிலிருந்து காக்குமா வெறும் தீ பந்தங்கள்….?
ஆம் அதை வைத்து தான் போராட திட்டம் தீட்டி இருந்தான் மானகவசன். அவன் முகம் பார்த்தாள்….எவ்வித கிலேசமும் இல்லாமல் களங்கமற்ற சந்திர பிம்பமாய் அவன்….
தோன்றும் சிந்தனை மூடத்தனம் என்றாலும் அது தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை….. ‘மரணம் நேர்ந்தால் அது இவனது அருகிலாய் நேரட்டும்….’
மரணமா? மானகவசனுக்கும் அவன் வசம் மயங்கும் ருயம்மாதேவிக்கும் நேர்ந்தது என்ன???
தொடரும்
{kunena_discuss:1063}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.