(Reading time: 34 - 68 minutes)

னாலும் குழந்தையப் பத்தி எப்படி யோசித்துப் பார்த்தாலும் இது எப்படி சாத்தியம் என்றுதானிருக்கிறது….. 7 வீக்‌ஸ் ப்ரெக்னென்ஸி என்பது ரிப்போர்ட்….. அப்ப அது பூர்விக்கா மாசி அண்ணா ஆக்சிடென்ட்டுக்கு முன்னால உள்ள காலம்….இவ ஆஃபீஸ் அதை விட்டா வீடுன்னு இருந்த காலம்….

15 நிமிஷம் வழக்கத்த விட லேட்டானாலே பூர்விக்கா கால் பண்ணிடுவா….அப்போ இவ பழைய ஆஃபீஸில் வேற வேலை பார்த்துட்டு இருந்தா….இவளுக்கு பயங்கர க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸுன்னு இல்லைனாலும்…இவங்க ஒரு நாலு பொண்ணுங்க சேர்ந்து தான் சாப்ட போவாங்க…. அதில் மாலு வீடு இவ வீட்டு பக்கம்தான்…. அதனால அவ கூட சேர்ந்து தான் பஸ்ல போய் வர்றது…. எல்லாம் எல்லா நாளும் இயல்பாதான் இருந்துச்சு….தென் எப்டி இப்டி ஒரு ரிப்போர்ட்….இது எப்டி சாத்தியம்??? நினைக்க நினைக்க பரிதவித்துப் போகிறது மனம்…

அதனால இந்த விவன் பேசுறப்ப இதுக்கு எதாவது பதில் கிடைக்குமா என ஒரு எதிர்பார்ப்பு…. அதை நோக்கியே  அவன் பேசுவதை காது கொடுத்து கேட்டிருந்தாள்…. அவன் என்னனா அவனுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைனு முடிச்சுட்டான்…. ஆனா இவள கல்யாணம் செய்யப் போறானாம்……குழந்தைய காப்பாத்த போறானாம்…. இதற்கு மேல் இவன் சொல்வதைப் பற்றி யோசித்தாள் இவள் பிபிதான் எக்குதப்பாய் எகிறும்….

சற்று நேரத்திற்கு ஒரு முறை விவனும் இவளிடம் ஒவ்வொரு கோணத்தில் இவள் என்ன நினைக்கிறாள் என்பதை அறிய பலதும் கேட்டுப் பார்த்தான்….. இவள் வாயை திறக்கவே இல்லை…..

கிட்ட தட்ட வட பழனியில் இருந்து விவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்தவள்……கார் ஜெமினி ஃபளை ஓவரை தாண்டும் நேரம்

“இந்த ஒன் வீக் மட்டும் நான் ராகாவோட ஃப்ளாட்ஸ்ல தங்கிக்கிறேன்…..” என ஹிண்ட் கொடுத்தாள். அடுத்து என்னதுன்னு மட்டும் பேசு என்பது உள்தகவல்.

ஆக அடுத்து  பேச்சு வேறு எது பத்தியும் செல்லாமல் சீக்கிரமாய் சிக்கலின்றி திருமணம் செய்வது எப்படி என்பதைப் பற்றியே நடந்தேறியது….

விவன் தங்கை கண்மணியிடம் ஏற்கனவே இவளை பெண் கேட்ட விபரம் சொல்லி இருப்பதாலும் அடுத்து இவள் சண்டை போட்ட விஷயத்தை சொல்லாமல் விட்டிருப்பதாலும் இந்த திருமண பேச்சை எளிதாக தொடங்கிவிடலாம் என்றான் அவன்….

நமக்குள்ள ரிலேஷன்ஷிப் சரி இல்லைனு அவட்ட கூட காமிச்சுக்காதே என்பது அவனது இன்டைரக்ட் ரிக்வெஸ்ட்.

“ இவ்வளவு நாளும் நான் என் அக்கா ஃபேமிலி கூட இருந்தேன் இப்ப அவங்க ஆக்சிடென்ட்ல தவறிட்டதால தனியா இருக்கேன்னு கண்மணி இன்லாஸ்ட்ட சொல்லுங்க…...அப்ப அவங்க இப்டி சட்டுனு மேரேஜ் செய்றத ஓரளவு இயல்பா ஏத்துபாங்க….” என சஜசன் கொடுத்தது இவள். என்னால யாருக்கு கஷ்டம் வர்றதையும் நான் விரும்பல என்பது இதன் வெளியரங்க செய்தி….

 அடுத்து இவர்கள் பீச்சை அடைய…..

அங்கு அலையடிக்கும் நீர் பரப்பிற்கு பக்கத்தில் காத்திருந்தான் சிற்பி…

இரவு நேர அலை சத்தம்…. ஆண்கள் இருவரும் சற்று அருகருகே அமர..…அவர்களை விட்டு கொஞ்சம் விலகி ஆனால் அவர்கள் பேசுவது காதில் விழும் தூரத்தில் ப்ரியா அமர்ந்து கொண்டாள்….

நிலவொளியில் ஆடும் அலையிலேயே தன் பார்வையை நிறுத்திக் கொண்டாள்…..

மற்றவர் இருவரும் வெட்டிங் அரேஞ்ச்மென்ட்டின் சின்ன சின்ன விஷயங்களையும் டீடெய்லாக பேச……இப்பதான தங்கை மேரேஜ் செய்து முடிச்சுறுக்கான் விவன்…..சோ எல்லாத்தையும் இம்மீடியட்டா எப்டி அரேஞ்ச் செய்றதுன்னு அவனுக்கு தெளிவாகவே தெரிஞ்சிறுக்க….. அதை விளக்கி…. பெண் வீட்டு சைடாக இவளுக்கு சிற்பி ரகா என்ன மாதிரி ஹெல்ப் செய்தா நல்லா இருக்கும் என உதவி கேட்டுக் கொண்டிருந்தான்….

இவள் அதில் எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்க முயன்றாள்….

விவன் சொல்லிக் கொண்டிருக்கும் திருமண நிகழ்வு காதில் விழ விழ ஒரு இனம் புரியா தவிப்பு தாறுமாறாய் தலை முதல் தரை தொடும் பாதம் வரை இவளை புரட்டி எடுக்கிறது….…..அடியற்ற பாதாளத்தில் அப்படியே விழுவதுபோல் ஒரு உணர்வு…….

அதற்கு நேர் எதிராய் அடி மனதில் ஜாதி மல்லி வாசம். இந்த திருமணத்தில் ஏதோ ஒன்று இவளுக்கு  பிடித்திருக்கிறது போலும்……அது என்ன??

கண்மூடிக் கொண்டாள்.

துவரை இவள் விழி பதித்திருந்த ஆழியில், சந்திரனை பிரதிபலிக்க முயன்று சொர்ண வார்ப்பாய் மாறி இருந்த நீர் திட்டு இவள் விழிகளுக்கு முன்பாக இன்னுமாய் விரிவதாக ஒரு உணர்வு….

அந்த பொன் நீர் பரப்பில் காணக்கிடைக்கிறது அந்த காட்சி…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.