(Reading time: 16 - 31 minutes)

ம்ம் நானே தான்..உன் தப்புக்கு துணை போன நானே தான்..பணம் கண்ணை மறைக்க கண்ட செயலெல்லாம் செஞ்ச நானே தான் ஆனா இப்போயில்ல..நா என் தப்ப உணர்ந்து ரொம்ப நாள் ஆச்சு..என்ன பாக்குற??நடுவுல கொஞ்ச நாள் நா ஊருக்கு போய்ருந்தேன்னு சொன்னேனே நியாபகம் இருக்கா அது உண்மையில்ல என்ன ஒரு அக்யுஸ்டா அரஸ்ட் பண்ணி போலீஸ் ரிமாண்ட்ல வச்சுருந்தாங்க..அப்போ தெரிஞ்சுது நா எவ்ளோ பெரிய கேவலத்தை பண்ணிருக்கேன்னு..என்ன விட ஜுனியர்ஸ் எனக்கு சல்யூட் போட்டவன்லா என்ன கேவலமா பாத்தான்..நாண்டுகிட்டு செத்துடலாம் போலயிருந்தது..அப்போதான் ராம் பரணி ACP என்கிட்ட வந்து ஹெல்ப் கேட்டாங்க உங்ககூடவேயிருந்து ஸ்பை வேலை பாத்தேன்..அந்த பாயலை வெளில கொண்டுவர வச்சேன்…பாயல் இப்போ எங்கயிருக்காநு தெரியுமா??உன் ஹாஸ்பிட்டல்லதான் ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கா..அவள எங்க வீட்டுல விட்டுட்டு உன் ஆட்கள் கிளம்பின அடுத்த ஸ்கெண்ட் பரணி எங்க டிபார்ட்மெண்ட் ஹெல்ப்போட அவள ஸ்சேவ்வான இடத்துக்கு மாத்திட்டாரு..இது மட்டுமில்ல இந்த விநாயக் எப்படிபட்டவன்னு தெரியுமா உனக்கு..என பேசிக் கொண்டே போக விநாயக் அவன் கையை உருகிக் கொண்டு அவர் கையிலிருந்த துப்பாக்கியை பிடுங்க முயற்சிக்க அதற்குள் அங்கு பரணி ராமை காப்பற்ற முற்பட கையில் கிடைத்த பூச்சாடியை கொண்டு பரணியை தாக்கினான் அதர்வாவின் அடியாள்..

நேரம் காலை 11:45 மகியும் சாக்ட்சியும் அந்த ஹோட்டலை அடைய அங்கிருந்த பரபரப்பை கண்டு நிலைமையின் தீவிரம் புரிய கண்ணில் படுபவர்களெல்லாம் கேட்டு மீட்டிங் ரூமை தேடி ஓடினர் பெண்கள் இருவரும்..

அங்கு நடந்த கலவரத்தில் விநாயக் DCயின் கையிலிருந்த பிஸ்டலை அழுத்த அதிலிருந்து வெளிவந்த குண்டு ராமின் இடக்கையை பதம் பார்த்தது..அவன் நிதானிப்பதற்குள் ராம்ம்ம்ம் என்ற கூச்சலோடு மயங்கி சரிந்தாள் மகி..

இங்கு நடந்த குழப்பத்தினால் ஹோட்டல் மேனேஜர் ஏற்கனவே போலீஸிற்கு தகவல் கொடுத்திருக்க அந்நேரத்திற்கு சரியாக ACP போலீஸோடு உள்நுழைந்து அனைவரையும் கைது செய்தார்..சாக்ட்சியோ சர்வமும் மறந்து நின்றாள்..தன்னருகில் விழுந்திருந்த மகி ஒருபுறம் கைகளில் ரத்தம் கொட்ட ராம் ஒருபுறம்,தலையில் காயத்தோடு தன் உயிரான பரணி ஒருபுறம்..இன்னும் அவளால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை அதற்குள் போலீஸோடு வந்திருந்த ஆம்புலன்ஸில் மூவரையும் ஏற்றி கொண்டு சாக்ட்சியையும் அழைத்து கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு விரைந்தார் DCP..

ராமிற்கு சிறிய சர்ஜெரி செய்து புல்லட்டை அகற்ற வேண்டும் என டாக்டர் கூற அவனோ மகி மகி என அனத்திக் கொண்டிருந்தான்..அதற்குள் தலையில் கட்டோடு அங்கு வந்த பரணி,மச்சான் மகி நல்லாயிருக்காடா நீ தைரியமாயிரு என்று கூறி ஆப்ரேஷன் தியேட்டர்க்கு அனுப்பி வைத்தான்..அங்கு மகியோ இன்னும் அப்ஸர்வேஷனிலேயே இருந்தாள்..சாக்ட்சியோ பரணியை விட்டு அங்குஇங்கு நகரவில்லை..பரணியுமே உள்ளுக்குள் உடைந்திருந்தாலும் அவளுக்காக தன்னை தேற்றி கொண்டிருந்தான்..ராமிற்கு எதுவும் ஆகாது என்று அவனுக்கு தெரியும் ஆனால் மகி இன்னும் கண் விழிக்கவில்லை என்பதே பெரும் பயமாயிருந்தது..இன்னொரு விபரீதம் எதுவும் நேர்ந்தால் ராமால் நிச்சயம் அதை தாங்கி கொள்ள முடியாது என்ற பயமே அவனை ஆக்கிரமித்திருந்தது..பாதி நாள் இப்படியே கழிய ராமை ஒரு வழியாக ரூமிற்கு மாற்றினார்கள்..ஆனால் இன்னும் மயக்கத்தில் தான் இருந்தான்..டாக்டர் அவசரமாய் பரணி சாக்ட்சியை அழைக்க கடவுளை வேண்டிக் கொண்டே சென்றனர்..

பரணி மிஸர்ஸ் ராம் கண்ணு முழிச்சுட்டாங்க..நீங்க போய் பாருங்க..

இருவருமே ஒருவித பதட்டத்தோடே கதவை திறந்து உள்ளே செல்ல,அயர்வாய் சாய்ந்திருந்தவள் இவர்களை கண்டதும் அண்ணா என்னாச்சு தலைல கட்டு போட்டுருக்கீங்க..எனக்கு தான ஆக்ஸிடெண்ட் ஆச்சு..உங்களுக்கு என்னாச்சுனா??ராம் எங்கண்ணா??வெளியே இருக்காரா??ரொம்ப பயந்துட்டாரா??சாரிண்ணா தனியா போனது என் தப்புதான்..சாக்ட்சி நீயாவது பேசுடா??

பரணி கண்கள் ஆனந்தத்தில் குளமாயின..சாக்ட்சியோ அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அனைத்தையும் மகியை கட்டி கொண்டு அழுது தீர்த்துவிட்டாள்..மகிக்கோ ஒன்றும் புரியவில்லை..பரணி அவளருகில் வந்து வாஞ்சையாய் அவள் தலையை தடவினான்..ராம் நல்லாயிருக்கான்டா உனக்கு அக்ஸிடெண்ட் ஆனது கிட்டதட்ட ஒரு மாசத்துக்கு முன்னாடிடா..என அனைத்தையும் கூற மகி கண்களில் வேதனை..வருத்தம் இன்னும் என்னென்னவோ..

அண்ணா நா அவர பாக்கனும்..

நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுடா அவனுக்கு இன்னும் கான்ஷியஸ் வரல..

அண்ணா ப்ளீஸ்..என்ன கூட்டிட்டு போங்க..

அதற்கு மேல் மறுக்கத் தோன்றாமல் அவளை அழைத்துச் சென்று ராமின் அறை வாசலில் விட்டான்..அவள் உள்ளே நுழைய பரணியும் சாக்ட்சியும் வெளியிலேயே நின்றுவிட்டனர்..உள்ளே சென்றவள் மெதுவாய் அவனருகில் அமர கட்டிடபட்டிருந்த கையை மிருதுவாய் தடவினாள்..லேசாய் விழி அசைய கண்திறந்தான் ராம்..தன்னவளை கண்டவனின் கண்களில் அத்தனை வலியையும் மீறி அப்படி ஒரு நிம்மதி..வலது கையை எடுத்து அவள் முகத்தை தொட இருதுளி நீர் அவன் கைகளை நனைத்தது..

மகி அழாதடா..எனக்கு ஒண்ணுமில்ல..

ராம்ப்பா,……என அவன்மீது முகம் புதைத்து கொண்டாள்..சாரி ராம் இனி நீங்க இல்லாம எங்கேயும் போக மாட்டேன்..பக்கத்துல இருக்குற கோவில் தானேனு கிளம்பிட்டேன்..சாரிப்பா..ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் உங்கள..உங்கள யாருநு கேட்டப்போ உங்களுக்கு எப்படி இருந்திருக்குமில்ல??என்ன மன்னிச்சுருங்கப்பா என தேம்பி தேம்பி பேச..

ராமோ உச்சகட்ட சந்தோஷத்திலிருந்தான்..குட்டிமா சரி ஆய்டுச்சாடா உனக்கு..என் குட்டிமா திரும்ப கிடச்சுட்டாளாடா..லவ் யு டீ..மிஸ்ட் யு சோ மச்..

சில நாட்கள் பிரிந்திருந்த காதல் நெஞ்சங்கள் மறுபடியும் காதல் மழையில் நனைய ஆரம்பிக்க அவர்களுக்கு நாம் சற்று தனிமை கொடுத்து நகர்வோம்…

ஹாய் ப்ரெண்ட்ஸ் பழைய மகி வந்துட்டாங்க..நல்லாயிருந்ததுநு நினைக்கிறேன்..கண்டிப்பா படிச்சுட்டு கருத்துக்களை ஷேர் பண்ணுங்க..அடுத்த எபி பென்னல்டிமேட் எபி..இனி ஹாப்பி சுஷ்ஷுவேஷன்ஸ் தான்..

தொடரும்

Episode # 19

Episode # 21

{kunena_discuss:952}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.