(Reading time: 10 - 19 minutes)

"ப்படியா" என்று கேட்டுக் கொண்டார் ரத்னாவதி.

"ஆனா அபி வயசுல சின்னவளா இருந்தாலும் இங்க நல்ல அடேப்ட் ஆகி படிப்பிலும் பர்ஸ்ட் வந்துட்டா. ரொம்பவே சமத்து பொண்ணு" அபியை ஆசையாக தடவிக் கொடுத்தார் சுசீலா.

"எப்பவும் சித்து தான் பர்ஸ்ட் வருவான்னு அபி சொன்னா.. சித்துவும் கெட்டிக்கார பையன்" ரத்னாவதி பதிலுக்கு சித்துவை பாராட்டவும் குழந்தைகள் இருவருக்குமே சந்தோஷம்.

"அபிக்கு டான்ஸ் கத்துக் குடுக்க கேட்டீங்களே. நான் டான்ஸ் கத்துக் குடுக்கிறதுல ஒரு பாலிசி வச்சிருக்கேன். ஒரு மாசம் சொல்லி குடுப்பேன். குழந்தைக்கு உண்மையிலே இன்ட்ரஸ்ட் இருந்தா தான் கன்டினியூ பண்ணுவேன்"

"எதுனால அப்படி"

"இங்க நிறைய பேரன்ட்ஸ் குழந்தைங்களை போர்ஸ் பண்ணி கத்துக்க வைக்கிறாங்க. எனக்கு அது சின்ன பிள்ளைங்களை டார்ச்சர் பண்ற மாதிரி இருக்கும்"

"நீங்க சொல்றது சரி தான்"

"சில குழந்தைங்க தானாவே ரொம்ப ஆர்வமா இருப்பாங்க. சில பேர் ஒரு சுமை மாதிரி பீல் பண்ணுவாங்க..பரதம் ஒரு பக்தி நிலை. அத திணிக்க கூடாதுன்னு என் பாலிசி"

"ரொம்ப நல்ல பாலிசி. உண்மையிலே உங்கள பாராட்டணும்ங்க"

"அதுனால தை மாசமா ஒரு நல்ல நாள் பார்த்து கூட்டிட்டு வாங்க...வரும் போது தட்சணை எல்லாம் எதுவும் கொண்டு வராதீங்க. ஒரு மாசம் கழிச்சு அபிக்கு இன்ட்ரஸ்ட் இருந்தா நானே கேட்டு வாங்கிக்கிறேன்" சுசீலா தங்கள் அட்ரஸ் குறித்துக் கொடுத்தார்.

"அப்போ தான் வீட்டுக்கு வரணும்னு இல்ல...எப்போ வேணும்னாலும் வாங்க"

"கண்டிப்பா..எனக்கும் இந்த புது ஊர்ல உங்க அறிமுகம் கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம்"

அதற்குள் அங்கு மிதுன் ஹரிஷ் எல்லாம் சித்துவை தூரத்தில் இருந்தே வா என்று அழைக்க அவன் அன்னையிடம் நண்பர்களோடு பேசி விட்டு வருவதாக அனுமதி கேட்டான்.

"அபியை கூட்டிட்டு போ சித்து"

"நான் போகல" அபூர்வா செல்ல மறுக்கவும் சித்தார்த் மட்டும் சென்றான்.

"அபிக்குட்டி அவங்களையும் பிரண்ட்ஸா சேர்த்துக்கணும் என்ன" சுசீலா  அபூர்வாவிடம் சொன்னார்.

"புது ஸ்கூல், பசங்க எல்லாம் எப்படி இவளை ட்ரீட் பண்றாங்களோன்னு நானே கொஞ்சம் பயந்திருந்தேன். ஏன்னா இவ எப்போவும் எதையும் பெருசா காண்பிச்சுக்க மாட்டா..அன்னிக்கு சித்து பத்தி சொன்ன போது இவ முகத்துல அவ்ளோ சந்தோஷம். அத பார்த்ததும் தான் எனக்கு நிம்மதி ஆச்சு" ரத்னாவதி கூற சுசீலாவோ சற்றே கண் கலங்கி இருந்தார்.

"உங்க பொண்ணால தான் இருட்டா இருந்த எங்க வாழ்க்கைக்கு வெளிச்சமே வந்தது... எங்க சித்து முகத்துல சந்தோஷத்தை பார்ப்போமான்னு ஒரு வருஷமா நாங்க ஏங்காத நாள் இல்ல...அபியை பார்த்ததிலிருந்து தான் சித்து பழைய சித்துவா திரும்ப மாறினான்"

ரத்னாவதி சுசீலாவின் கைகளை ஆதூரமாக பிடித்துக் கொள்ள சுசீலா இத்தனை நாள் வேதனைக்கான காரணத்தைக் கூறினார்.

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1080}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.