(Reading time: 10 - 19 minutes)

"ஸ்கூல்ல யாருமே என்கூட பேசல...சித்து  தான் பேசுனான். அப்புறம் அவன் பிரண்ட் சந்தோஷ்" சித்துவின் முகம் மனதில் தோன்ற அவளாகப் பேசிக் கொண்டே போனாள்.

“என்ன இது” என்று மனைவியை விஜயகுமார் பார்க்க ரத்னாவதியோ அமைதியாக இருங்க என்று சைகை காட்டினார்.

"அப்புறம் நான் பால் குடிச்சேனா அப்போ வொயிட் மீசை வச்சிருச்சு...சித்து பூனைக்குட்டி மாதிரி அழகா இருக்கே நீ பில்லி சொன்னான்னா"

தந்தை எதுவுமே இடையில் சொல்லவில்லை என அண்ணார்ந்து பார்த்தாள்.

"அப்புறம் என்ன ஆச்சுடா குட்டிமா" தந்தை கொஞ்சவும் உற்சாகமானாள் மகள்.

"அப்புறமா நிறைய பாய்ஸ் கேர்ள்ஸ் வந்து என்ன பில்லி பில்லி சொல்லி கேலி பண்ணாங்களா...சித்து எல்லாரையும்  மாரூங்கா சொல்லி தித்திடான்" சித்து என்று சொல்லும் போதெல்லாம் மகளின் முகத்தில் ஒரு சந்தோஷம் தெரிவதை  பெற்றோர் கவனித்துக் கொண்டனர்.

“இந்த சாட்டர்டே பேரன்ஸ் டீச்சர் மீட் இருக்காமே. டைரில போட்டிருக்கு. அப்போ சித்துவ அம்மாகிட்ட காட்டு என்ன" அன்னை சொல்லவும் சரிம்மா என்று தலையாட்டினாள் குழந்தை.

னிக்கிழமை அன்று பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் அபூர்வா, சித்தார்த் இருவரும் தத்தம் அன்னையுடன் வந்திருந்தனர்.

"அபூர்வா… வெரி குட் ஸ்டுடென்ட்..வெரி ஓபிடியன்ட். யு டோன்ட் நீட் டு வொரி" அவளின் வகுப்பு ஆசிரியை புகழாரம் சூட்டிக் கொண்டிருந்தார்.

“பிரின்சிபால் நீங்க வந்தா அவங்கள பார்த்துட்டு போகும் படி சொல்ல சொன்னாங்க” என்ற தகவலையும் ஆசிரியை கூற அபூர்வாவுடன் ரத்னாவதி பள்ளி முதல்வர் அறைக்கு சென்றார்.

"அபூர்வாஸ் மாம்.. ப்ளீஸ் கம். அபூர்வா பாதர்  வரலையா"

"அவர் வெளியூர் போயிருக்கார்… ஆன் டியூட்டி"

“தட்ஸ் ஓகே... நான் பர்சனலா வாழ்த்து சொன்னேன்னு அவர்கிட்ட சொல்லுங்க. பொண்ணு மேல இவ்ளோ நம்பிக்கை  அண்ட் இந்த குட்டி பொண்ணும் டிட் இட்"

“தேங்க்ஸ் மேடம். நான் கண்டிப்பா சொல்றேன். உங்ககிட்ட ஒரு ஹெல்ப் கேக்கணும் மேடம்”

“எனிதிங்க் ப்ளீஸ் ஆஸ்க்”

"இவளுக்கு பரதம் கத்துக்க கொடுக்க விரும்புறேன்.  நாங்க ஊருக்கு புதுசு..உங்களுக்கு தெரிஞ்ச க்ளாஸ் ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க"

"இவ கிளாஸ்மேட் சித்தார்த் மாம்  டான்ஸ் சொல்லி தராங்க..நீங்க கிளாஸ் டீச்சர் கிட்ட சொல்லுங்க...ஷி வில் ஹெல்ப் யு”

“ஒகே மேடம் தேங்க் யு”

பள்ளி முதல்வரை பார்த்து விட்டு அபூர்வாவின் வகுப்பு ஆசிரியையை சந்திக்க சென்று கொண்டிருந்த போது சித்தார்த் அவன் அன்னையுடன் காரிடரில் வந்து கொண்டிருந்தான்.

"அம்மா  அவ தான் பில்லி" ரகசியமாய் கூறி அன்னையிடம் அபூர்வாவை சுட்டிக் காட்டினான்.

"அம்மா அவன் தான் சித்து" மகள் சுட்டிக்  காட்டிய  திசையில்  ரத்னாவதி பார்க்க அதற்குள் சுசீலா புன்னகையுடன் இவர்கள் அருகில் மகனுடன் வந்தார்.

பரஸ்பரம் அறிமுகம் ஆனா பின்," வாங்க அந்த பெஞ்ச்ல உக்காந்து பேசலாம்" சுசீலா சொல்ல ரத்னாவதியும் அவருடன் சென்று அமர்ந்தார்.

சுசீலா அபூர்வாவை தன் புறம் அழைத்து அவளை உச்சி முகர்ந்தார்.

"சமத்து பொண்ணு. எப்போவும் பர்ஸ்ட் ரேங்க் வாங்கணும் என்ன" சுசீலா அபூர்வாவைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

"அதுக்கு சித்தார்த் விட்டுக் கொடுக்கணுமே" ரத்னாவதி சித்துவை அணைத்துக் கொண்டார்.

"அதுக்கென்ன. அடுத்த டைம் ரெண்டு பேருமே பர்ஸ்ட் ரேங்க் ஷேர் செய்துப்பாங்க..சரியா" சுசீலா குழந்தைகள் இருவரையும் பார்த்து கேட்க இருவரும் சந்தோஷமாக தலை ஆட்டினர்.

ரத்னாவதி தாங்கள் புதிதாக இந்த ஊருக்கு வந்திருப்பதையும் தன் கணவரின்  பணி விவரங்களையும் சுசீலாவிடம் பகிர்ந்து கொண்டார்.

"அபூர்வா டான்ஸ் கத்துக்கணும்ன்னு அவ டாடிக்கு ரொம்ப ஆசை. நீங்க டான்ஸ் சொல்லித்தறீங்கன்னு பிரின்சிபால் சொன்னாங்க"

"சென்னைல கத்துட்டாளா"

"இல்லைங்க. அவளுக்கு இப்போ போன மாசம் தான் 5 வயசு முடிஞ்சது...அங்க 5 வயசு முடிஞ்ச பிறகு தான் சேர்க்க முடியும்னு சொல்லிட்டாங்க"

"இவ்வளவு சின்ன பொண்ணா... நான் கூட பார்க்க தான் அப்படி இருக்காளோன்னு நினச்சேன்"

"இவ டாடி தான் பொண்ணு ரொம்ப புத்திசாலியா இருக்கா...எதுக்கு ஒரு வருஷம் வேஸ்ட் பண்ணனும்னு சீக்கிரமே ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டார்"

"சீக்கிரம் ஸ்கூல்ல சேர்த்தது சரியான்னு தெரியல .ஆனா புத்திசாலி பொண்ணு ரொம்ப சரி"

"நான் வேண்டாம்னு தான் சொன்னேன். அவர் கேட்டா தானே...இவளுக்கும் அவங்க டாடி சொல்லிட்டா அது தான் வேத வாக்கு"

"நம்ம ஊர் பசங்கள விட இங்க தில்லில உள்ள பசங்க அவங்க ஏஜ்க்கு கொஞ்சம் அதிகமாவே விவரமா இருக்காங்கன்னு எனக்கு தோணும். என் நாத்தனார் பொண்ணுக்கும் இவன் வயசு தான். அவ இன்னும் ரொம்பவும் குழந்தைத்தனமா இருக்க இவனும் சரி இவன் பிரண்ட்ஸும் சரி நர்சரிலேயே வாய் கிழிய வியாக்யானம் பேசும்ங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.