(Reading time: 10 - 20 minutes)

ஹேய்.. வருண்.. நம்ம மகி பத்தி தெரியாதா.. ? அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லிருக்க மாட்டா... சும்மா உன்னை நக்கல் அடிச்சுருப்பா.. “ என்று சமாதான படுத்தினார் ருக்மணி..

இங்கே இவர்கள் வழக்கடித்து கொண்டிருக்க, மகிமாவை காண முடியாத எரிச்சலோடு வீட்டிற்கு சென்ற வருண். அங்கே தன் தங்கை வர்ஷா அமர்ந்திருக்கவும் சிரித்தபடி அவள் அருகில் சென்று அமரந்தான்..

“ஹேய். .வர்ஷு குட்டி.. நீ இங்கே வந்துருக்க.. சூப்பர் டா.. இன்னிக்கு டின்னெர் எங்கியாவது வெளியில் போகலாமா..?” என்று வினாவினான்.

“வெளியில் எல்லாம் வேண்டாம்.. நான் பெரியாம்மா கிட்ட பேசலாம்னு வந்தேன்..” என்றாள்.

“சரிடா குட்டி.. நான் ரெப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்..” என்று சென்றான்.

அவன் மீண்டும் வந்து அமரவும், தன் பெரியம்மாவிடம் சாதரணமாக பேசிக் கொண்டு இருந்த வர்ஷா,

“பெரியம்மா.. இன்னிக்கு அண்ணன் ப்ரோக்ராம் உங்களுக்கு தெரியுமா?” என்று வினவ,

“என்ன...? redhills பக்கம் போகணும் நு சொன்னான்.. ஆனால் அதுக்கு முன்னாடி ஆபீஸ் போயிட்டு போறேன் என்றான்..”

“உங்கள் தவபுதல்வரின் ஆபீஸ் வருகையின் நோக்கம் என்ன தெரியுமா?” என,

மிதுன் திடுக்கிட்டு தன் தங்கையை பார்த்து முழித்தான்.. பிறகு அவளிடம் கெஞ்சல் பார்வை விட, அதை கண்டு கொள்ளாத.. வர்ஷா,

“இன்னிக்கு நம்ம ஆபீஸ் க்கு புது மெம்பெர் வந்துருக்காங்க.. அதுவும் அண்ணனோட ஸ்பெஷல் friend போலே.. அண்ணன் நேரவே வந்து அறிமுகம் கொடுத்து, புது பதவி எல்லாம் கொடுத்து இருக்காங்க.. “ என்று கூறவும்,

“யார் டா .. அது.. நீ நேர்லயே போயிருக்க? அங்கே அனாவசியமா போக மாட்டியே.. பொண்ணுங்க வேலை செய்யற இடம்ன்னு..”

“இல்லைமா.. அவங்க நம்ம அர்ஜுன், ராகுல் டீம் லே புதுசா ரெண்டு பொண்ணுங்க சேர்ந்து இருக்காங்க.. அந்த சுபத்ரா கூட republic டே லே மார்ச் பாஸ்ட் லீட் பண்ணாங்கன்னு சொன்னேன்லே.. அவங்க friend மகிமா.. ஏற்கனவே ரெண்டு மூணு தடவை பார்த்து இருக்கேன்..  லாஸ்ட் வீக் வருண் பார்க்க போனப்போ இவங்களும் வந்து இருந்தாங்க.. அங்கே வச்சு நம்ம டிரஸ்ட் பத்தி தெரிஞ்சு volunteer ஆஹ வரேன்னு சொன்னங்க.. அதான் .. நானே நேர்லே வச்சு அவங்கள எல்லோருக்கும் அறிமுகபடுத்தினேன்.. “ என்று கட கட வென ஒப்பித்து முடித்தான்..

“அது எல்லாம் சரி... ஆனால் என்னோட போஸ்ட் ஆஹ பிடுங்கி அவங்ககிட்ட கொடுக்க என்ன காரணம்னு கேளுங்க?” என்று போட்டு கொடுக்கவும்,

ஆஹா.. வச்ச்சுட்டாலே ஆப்பு.. என்ற ரீதியில் முழித்தவன், “அது அப்படி எல்லாம் இல்லைமா.. அங்கே இருக்கிற எல்லரயையும் விட பெரியவங்க.. அதான் கொஞ்சம் சீனியர் போஸ்ட் ஆஹ இவ வேலைய கொடுத்தேன்.. அதோட இந்த வருஷம் இந்தம்மாவிற்கு final.. மேடம் கொஞ்சம் அதுக்கு ரெடி ஆகட்டும் ன்னு பார்த்தேன்..” என்று முடிக்க

“ஹேய்.. அவன்தான் சொல்றான்லே .. அப்ப சரியாதான் இருக்கும் ..” என்றபடி டிபன் வேலைய பார்க்க போக,

“அண்ணா. ஊர் உலகம் இன்னுமா உங்கள நம்புது ?” என்று கிண்டல் செய்தாள்..

அவள் காதை திருகிய மிதுன் “ஏய் வாலு.. எத்தனை நாள் பழி வாங்கும் படலம்.. இது ? இப்படி போட்டு கொடுக்கிற?”

“ஆமாம் அண்ணா.. நான் பக்கத்துலே இருந்தும் அவங்கள விடாமல் சைட் அடிச்சதோடு இல்லாமல், அக்கான்னு சொன்னவுடனே என்ன ஒரு reaction.. அங்கியே வச்சு அண்ணின்னு சொல்லனும்மா அண்ணா ன்னு கேட்டுருப்பேன்.. ஏதோ போனா போகுது பிழைச்சு போன்னு விட்டுட்டேன்.. “

“என்னே... உன் கருணை.. சரி.. சரி.. அவ போன் நம்பர் வாங்கினியா?”

“நீ எங்கே வாங்க சொன்ன.. ? உன் நம்பர் தான் கொடுக்க சொன்ன.. கொடுத்துட்டேன்.. “

“ஹேய்.. குட்டிமா.. விளையாடாத... நான் கோடு போட்டா நீ அத ரன்வே ஆக்கி flight எ ஓட்டுவேன்னு எனக்கு தெரியும்... “

“பிழைச்சு போ.. இந்தா நம்பர்.. “ என்று கொடுத்தாள்...

அவளிடம் நம்பர் வாங்கியவன், தன் அறைக்கு சென்று மகிமாவை செல்லில் அழைத்தான்..

“ஹலோ. மகிமா.. “

“ஹலோ.. யார் பேசுறது ?” என்று கேட்கவும், சிறிது முழித்தான்.. மிதுன்.. என் நம்பர் வாங்கி அவள் save பண்ணவில்லையா என்ன?

பிறகு “மகிமா.. மிதுன் பேசுகிறேன்” எனவும், இங்கே தன் நாக்கை கடித்தாள் மகிமா..

ஹாய் friends.. இந்த வாரமும் நம்ம சுறா, கேப்டன் ரெண்டு பேருக்கும் லீவ் விட்டுட்டேன்.. அடுத்த வாரம் நம்ம கலகல ஜோடி வந்து கலகலக்க வைப்பாங்க.. வழக்கம் போல் உங்கள் கமெண்ட்ஸ் க்கு காத்து இருக்கிறேன்..

மழை பொழியும்

Episode 16

Episode 18

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.