(Reading time: 10 - 20 minutes)

redhills சென்றவர்கள் அங்கே உள்ள பள்ளிகளில் மீட்டிங் ஏற்பாடு செய்து சுகாதாரம், pollution பற்றி எல்லாம் நிறைய படங்கள் போட்டு காட்டி விழிப்புணர்வு முகாம் நடத்தினார்கள்.. அவர்கள் சொன்ன கருத்துக்களை பங்கு பெற்றவர்கள் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை சிறு சிறு விளையாட்டுக்கள் மூலம் பங்கு பெற்றவர்களை சோதித்தனர். அதில் ஜெயித்தவர்களுக்கு சிறு பரிசுகள் கொடுக்கப்பட்டது.. அந்த பரிசு வாங்கியவர்களையே அங்கே என்ன செய்ய வேண்டுமோ அந்த வேலைகளை எப்படி செய்வது என்று சொல்லி கொடுத்தனர்.  பிறகு எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து கிளம்பினர்.

வருண் மிதுனிடம் தானும் அவனோடு சிட்டி ஆபீஸ் வந்து விட்டு அங்கிருந்து தங்கள் வீட்டிற்கு செல்வதாக கூற,

“வேண்டாம் வருண்.. நானே உங்கள் ஏரியா வரை கொண்டு விடுகிறேன்..” என்று அழைத்து சென்றான்.

வருண் வர்ஷவை பார்ப்பதற்காக அவனோடு வருவதாக எண்ணியிருக்க, மிதுனோ வருனோடு அவன் ஏரியா வரை போனால் அங்கே மகிமாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கலாம்... என்று எண்ணியிருந்தான்.

ஆனால் இருவரும் எண்ணியபடி தங்கள் எண்ணங்களை நிறைவேற்ற முடியவில்லை.

வருண் தங்கள் வீட்டிற்கு செல்லாமல் சுறா வீட்டிற்கு சென்றான். அதை பார்த்து விட்டு அப்படியே சென்று விட்டான் மிதுன்.. வருண் அங்கே சென்றதற்கு காரணமே மகிமா அங்கே இருப்பாள் என்பதால் தான்..

அவன் எண்ணியபடி வருண் அங்கே சென்ற போது “வாங்க சார்.. என்ன இன்னிக்கு இந்த பக்கம் காத்து அடிக்குது ?” என்று நக்கலடித்தாள் மகிமா..

“மகி குட்டி.. அவன் வாரா வாரம் எங்களை பார்க்க வருவான் மா.. ஆனால் நைட் டிபன்க்கு வருவான்..”

“அதுதானே.. பார்த்தேன். நீ எப்படி ருக்கும்மா சமையல் சாப்பிடாமல் இருக்கிறாய்.. என்று.. நைட் வந்து புல் கட்டு கட்டிட்டு போவீங்களோ..”

“ஹேய்.. கீமா... கம்முன்னு இரு. என்னை கலாய்ச்சது போதும் .. இன்னிக்கு உன்னோட நாள் எப்படி போச்சு.. ? உனக்கு satisfy ஆ இருந்துதா..? “

“நல்லா இருந்துது... இந்த வேலை ரொம்ப பிடிச்சு இருக்கு.. நான் என்னோட படிப்பு முடிஞ்சதும் .. இவங்க செய்யுற வேலைக்கு எல்லா விதத்திலும் உதவியா இருக்க போறேன்..” என்றாள்.

“அங்கே எல்லோரும் எப்படி பழகறாங்க.. மகிமா? அந்த பொண்ணு பேரு என்ன.. வசந்தாவோ, விமலாவோ .. அவ எப்படி பழகறா.. உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே?”

“டேய்.. அவ பேரு வர்ஷா .. அவ நம்ம மிதுன் சார் ஓட தங்கச்சியாம்.. அவங்க அண்ணன் ஆரம்பிச்ச நாளிலிருந்து அங்கே வேலை செய்யுறளாம்.. அவளும் நம்ம மாதிரிதாண்டா நல்லா அரட்டை அடிக்கிறா..”

“ஓஹோ.. நீ உடனே உன்னோட வாழ்க்கை வரலாறு, அதிலே என்னோட பங்கு எல்லாத்தியும் புட்டு புட்டு வச்சு இருப்பியே... ?” என்றான்..

“ஆமாமா.. இவர் பெரிய பொன்னியின் செல்வன்.. இவர் வரலாற நாங்க காவியம் படிக்கிறோம்.. போவியா.. உன்னை பத்தி எல்லாம் ஒன்னும் சொல்லல.. எங்களுக்கு ஒரு அடிமை சிக்கியிருக்கான்... அவன் பேரு வருண் மட்டும் சொன்னேன்..”

“அடிபாவி.. ராட்சசி.. இப்படியா என் இமேஜ் .. ராக்கெட் லே பறக்க விடுவ.. நீ எல்லாம் நல்ல வருவ ?”

“நன்றி .. நன்றி.. நண்பா..”

“ஏய்.. கடுப்பு ஏத்தாமல் ஒடி போய்டு.. “ என்று அவளை துரத்தி விட்டான்.. இவர்கள் சண்டைய வேடிக்கை பார்த்தபடி இருந்தார்கள் கிருஷ்ணனும், ருக்மணியும்.. அவளை துரத்தி விட்டாலும் அவள் வீடு சென்று விட்டாளா என்று பார்த்த பின்பே சுறா வீட்டிற்குள் வந்தான் வருண்..

உள்ளே அமர்ந்தவுடன் “பாருங்கப்பா... இந்த பிசாசை.. என்னை பத்தி இப்படி எல்லாம் சொல்லிருக்கா அந்த பொண்ணு கிட்ட.. ?’

“என்ன சார் விஷயம்.. ? நானும் வந்தது லேர்ந்து பார்க்கிறேன்.. எங்கே சுத்தினாலும் அந்த வர்ஷா பொண்ணு கிட்டே வந்து நிக்கிற.. என்ன மேட்டர்.. ?”

“மேட்டர்..ஆ.. அதெல்லாம் ஒன்னுமே இல்லையே.. “ என்று தடுமாறினான்..

“ஓஹோ.. ஆனால் அப்போ இவ்ளோ டென்ஷன் ஏன்..? உன்னை கலாய்க்கிறது அவளுக்கு புதுசா என்ன?”

“அப்பா..  அது .. “ என்று தயங்கியவன் பிறகு “அந்த பொண்ணு வர்ஷா  பார்த்தவுடனே எனக்கு ரொம்ப பழகின பீல் வந்துச்சு.. அதோட .. அவகிட்ட பேசணும் ன்னு ஆசையா இருந்துச்சு.. ஆனால் முடியல.. எங்கியாவது வெளியில் பார்த்தா பேசலாம் ன்னு நினைச்சேன்.. இந்த லூசு என்னடான்னா.. என்னை பத்தி என்ன சொல்லி வச்சாளோ. இப்போ பார்த்தா கூட பேசுவாளான்னு சந்தேகமா இருக்கு “ என்று கவலைப்பட,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.