அதற்குள் அந்த மருமகள் மஞ்சு பாயை விரிந்திருக்க
''உட்காருமா நான் போய் தம்பியை வான்னு கூப்பிட்டுட்டு வந்திடுறேன்'' என்றபடியே வாசல் நோக்கி சென்றது
''என்ன சாப்பிடுறிங்க காப்பியா ,டீயா ,ஹார்லிக்ஸ் ...''என்று மஞ்சு அடுக்க
அவசரமாய் ''அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ,இப்போதான் சாப்பிட்டுட்டு நேரா இங்க தான் வரோம் ,இப்படி நீங்களும் உட்காருங்க ''என்றாள்
''நல்லாயிருக்கே கத ...இப்போதான் முதல் முதலா வந்திருக்கீங்க ,ஒன்னும் கொடுக்காம எப்படி விட முடியும் ,செத்த இருங்க தோ வரேன் '' என்றபடியே திரும்பி இன்னும் இருட்டாய் இருந்த திசையில் விரைந்து மறைந்தது
தம்பியை அழைத்து விட்டு திரும்பிய வைட் ஆச்சி இவள் பக்கத்தில் அமர்ந்தது
... title="Pachai kiligal tholodu" href="/stories/tamil-thodarkathai-all-list/7845-pachai-kiligal-tholodu-07" rel="alternate">Episode # 07 {kunena_discuss:1052}
This story is now available on Chillzee KiMo.
...