(Reading time: 10 - 19 minutes)

ன்னாச்சு என்றான்….. பதில் பேசாமல் தன்னையேப் பார்த்துக் கொண்டிருப்பவளைப் பார்த்து,

“பேசிட்டு இருக்கிறது நீங்கதானா? ன்னு பார்த்தேன் அத்தான்” என்று கலகலத்துச் சிரித்தாள்.

“பிறகென்ன என் டூப்பா?” என அவனும் சிரிக்க…..

“வீட்ல பேசவே மாட்டீங்க, ஒரு நாளைக்கு இத்தன வார்த்தை தான் பேசணும்னு என்கிற மாதிரி அளந்து அளந்து தான் பேசுவீங்க” எனவும்,

‘நானா பேசமாட்டேன்? நீதான் என்கிட்ட பேச மாட்ட, இப்ப நான் பேசலைன்னு சொல்லுற” என்றான் தன் ஏக்கம் கொண்ட மனதை மறைக்காதவனாய்.

அமைதியா இருப்பீங்களா…..அதான் பேச மாட்டீங்களோன்னு நினைச்சுக்கிட்டேன் அத்தான் இனி பேசறேன் சரியா?

என்றவளுக்கு புன்னகையை பதிலாக்கியவன் இண்டர்காம் ஒலிக்க எடுத்துப் பேசினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்...

“ஹே அனி இப்போ யார் வந்திருக்கா தெரியுமா? உன் அண்ணன்.” என்றவனாய் வந்தவனை வரவேற்க கேபினை விட்டு வெளியேறினான்.

“அண்ணாவா, அவன் இன்றுக் காலையே வெளியூர் அல்லவா சென்றிருக்கிறான் என்று எண்ணியவள் 

“என்ன ரூபன் நீ சின்ன சின்ன பாப்பாவை எல்லாம் ஆஃபீஸுக்கு கூட்டிட்டு வந்திருக்க……” என ஆர்ப்பாட்டமாய் உள்ளே நுழைந்து கேலி செய்த ராஜேஷை முறைத்தாள்.

“பார்த்தியாடா நீ கூப்பிட்டவுடனே எப்படி நான் உன் ஃபேக்டரிக்கு டக்குன்னு வந்துட்டேன்”

“இன்விடேஷன் கொடுத்தது திறப்பு விழாவுக்கு, நீங்க வந்திருக்கிறது இன்னிக்கு…… இதான் உன் டக்கா அண்ணா……..என அனிக்கா அவனை மடக்கினாள்.

“நாமெல்லாம் லேட்டஸ்டா வருவோம்ல, இதே நான் நேத்தே வந்திருந்தா எனக்கு இப்படி வரவேற்பெல்லாம் கிடைச்சிருக்குமா?” என தன் கெத்தை விட்டு விடாமல் பேச…….

இருவரும் வாயடிப்பதை சுவாரஸ்யமாய் பார்த்திருந்தான் ரூபன்.

சரி சரி உட்காருங்க டாக்டர் சர்….. என விளையாட்டாய் பேசி ராஜேஷை அமர்த்தினான்.

அனி டாக்டர் சர் ஹாஸ்பிடல் நம்ம ஃபேக்டரிலருந்து பக்கம் தான் தெரியுமா? என விளக்கம் கொடுத்தான்.

“ம்ம் தெரியும் அத்தான்” என்றவள் அண்ணி எப்படி இருக்காங்க? குட்டீஸ் எப்படி இருக்காங்க என்று ராஜேஷிடம் விசாரிக்க ஆரம்பித்து விட்டாள்.

“ நீங்க இவ்ளோ தூரம் வந்து ஹாஸ்பிடல் வச்சதினால தான் இப்போலாம் வர முடியலைன்னு வீட்டுல சொல்லிட்டு இருப்பாங்க………….தெரியுமாண்ணா…”

“ஒரே ஓசி பேஷண்டா வந்திட்டு இருந்தா எனக்கு கட்டுப் படியாகுமா? அதான் இடத்தை மாத்திட்டேன் என அவளைக் கிண்டல் செய்யவும்……… 

“போங்கண்ணா நான் உங்க கிட்ட இனிப் பேசமாட்டேன் “ என்று சொல்பவளை ராஜேஷ் சமாதானம் செய்ய …….ராஜேஷின் ஓசி பேஷண்ட் என்னும் அடைமொழியில் தன்னை மறந்து சில வினாடிகளுள் அவன் பழைய நினைவுகளில் சென்றுத் திரும்பி வந்தான்.

ஃபேக்டரியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது அன்று ஏதோ ஒரு லீவு என்று வீட்டில் இருந்தான். தன்னுடைய பொருட்களை சரிப்படுத்திக் கொண்டிருந்த போது டிராயரைத் திறந்தவன், கவனக்குறைவாய் வேகமாய் மூட அவனுடைய விரல் ஒன்று நசுங்கி ரத்தம் வர ஆரம்பித்தது. தாங்க முடியாத வலி, அடுத்து என்னச் செய்வது என்றே புரியாமல் நின்றபோது தான் வீட்டிலும் யாரும் இல்லை என்ற ஞாபகம் வந்தது.

எதேச்சையாக அங்கு வந்த அனிக்கா பட படவென அவன் கையைக் கவனித்து ஒரு கர்ச்சீஃபை தேடி வந்து கட்டுப் போட்டவள் அவசர அவசரமாக ரிக்ஷா அழைத்து வந்து அவனை ஏறச் சொல்லி வீட்டைப் பூட்டி அருகாமையிலிருந்த ராஜேஷின் கிளினிக்கிற்கு கூட்டிச் சென்றிருந்தாள். ரிக்ஷாவில் ஏறிய பின்னரே அவனுக்கு தான் வாலட்டை மறந்து விட்டோம் என்று ஞாபகம் வந்தது. 

ஒன்றும் கேட்காமல் தன்னை அவளிஷ்டம் போல அழைத்துச் செல்கின்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பேண்ட் பையில் தேடுவதைப் பார்த்திருந்தவள்.

“அத்தான் என் கிட்ட ரூபா இருக்கு என்று குட்டிப் பொம்மை வடிவிலான அவள் பர்ஸைக் காட்டிக் கொண்டாள். 

“இத்தனூண்டு பர்ஸில அப்படி எவ்வளவு ரூபாய் வைத்திருப்பாள் என்று எண்ணியவனை அதிகம் சிந்திக்க வைக்க விடவில்லை அவனுடைய விரல் வலி. ரிக்ஷாவிற்கு ரூபாய் கொடுத்து அனுப்பியவள் ,

“இது எங்க ராஜேஷ் அண்ணா கிளினிக் தான் என்று வரிசையில் நிற்காமல் உள்ளே நேரடியாக அவனை அழைத்துச் செல்ல,

“ ராஜேஷ் இவனைப் பார்த்து மகிழ்ந்து விசாரித்தான். ஒரு வழியாக விரலில் கட்டைப் போட்டு விட்டதும், மாத்திரைகளை வாங்கிக் கொண்டு, எப்படி சாப்பிட வேண்டும் என்று விசாரித்த பின்னர் இருவரும் கிளம்பினார்கள். அனிக்காவோவென்றால் ட்ரீட்மெண்டுக்கு பணமே கொடுக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.