(Reading time: 14 - 27 minutes)

27. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

கோரத்தை மட்டுமே வெளிப்படுத்திய விழிகள், ஜெய்யைக் கொன்றே தீர வேண்டும் என்ற கொலைவெறியை பிரதிபலித்தது தீவிரமாய்…

எனினும் தகுந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தது அந்த அகோர விழிகள்….

அதை உணர்ந்தவனாக, சென்னை சென்றே தீர வேண்டும் என ஜெய் உறுதியாய் இருக்க,

இஷானோ, “இன்னும் இரண்டு நாள்தானடா… வந்த வேலையும் முடிஞ்சிட்டு… கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போகலாம்…” என இலகுவாக கூற, ஜெய்யோ மறுத்தான்…

“நம்ம வேலையில என்னைக்குமே ரிலாக்ஸ் கிடையாது… நான் சென்னைக்குப் போகணும்… நீ வரீயா இல்லையா?...”

அவனது அழுத்தம் இஷானை யோசிக்க வைத்தது…

ஜெய்யுடன் பெரியவர்களிடம் வந்த இஷான்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்...

“நாங்க இரண்டு பேரும் இன்னைக்கே சென்னை கிளம்புறோம்…” என்றதும், தட்சேஷ்வர், புருவம் உயர மகனைப் பார்த்தார்…

“இல்லப்பா… வந்த வேலை முடிஞ்சிட்டு… அதான் கிளம்பலாம்னு இருக்குறோம்… அதும் இல்லாம நாங்க லீவ்ல வரலை… அதனால டியூட்டி முடிஞ்சதும் கிளம்புறது தான் சரியும் கூட….”

இஷான் நிதானமாக கூற, சிதம்பரத்திற்கும் தன் வருங்கால மருமகன் சொல்வது சரி என்றே பட, தட்சேஷ்வரிடம் எடுத்துக்கூறினார் அவர்….

“தட்சா, நம்மளும் கிளம்ப வேண்டிய நேரம் வந்துட்டு…”

பிரம்மரிஷி சட்டென்று கூறி விட, தட்சேஷ்வர் உடனேயே சரி என்றார் சற்றும் தாமதிக்காமல்…

அனைவரும் கிளம்ப முடிவெடுத்து, அங்கிருந்து காரில் புறப்பட்டனர்…

இரவு நேர பயணமாதலால், ஜெய் ஒரு காரையும், இஷான் ஒரு காரையும் ஓட்டினர்…

இஷானின் காரில், தட்சேஷ்வர், பிரசுதி, காதம்பரி, சோமநாதன் ஆகியோரும், ஜெய்யினது காரில் மற்றவர்களும் இருந்தனர்…

ஜெய் மௌனமாக காரை செலுத்த, அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்…

தன் பக்கத்தில் பார்த்த போது அதில் சிதம்பரம் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்க, பின் சீட்டில், பிரம்மரிஷியும், தைஜூவும் ஆழ்ந்த துயிலில் இருந்தனர்…

ஆனால், சதி மட்டும் தூங்கவில்லை… ஜெய்யையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்…

கண்ணாடி வழி அவன் அவ்வபோது அவளைப் பார்க்கும்போது, அவளும் அவனை தான் பார்த்தாள்…

அவள் விழித்திருந்து கஷ்டப்படுவது பிடிக்காமல், என்ன செய்ய என்று தவித்தான் அவன்…

பேசவும் ஆசை…. ஆனால் பேசினால் அவள் ஆசை கொள்வாள் என்ற எண்ணமும் வர, அவன் அமைதி காத்தான்…

எனினும் அந்த அமைதி நெடுநேரம் நீடிக்க அவள் விடவில்லை…

தலையைப் பிடித்துக்கொண்டு அவள் கண்களை சுருக்க, பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு வலித்தது இங்கே…

“ஈஸ்வரா…..” என அவள் வாய்விட்டே சொல்லிவிட, அவ்வளவுதான், சட்டென காரை நிறுத்திவிட்டு அவள்புறம் திரும்பினான் அவன்…

“சதி… என்னாச்சு உனக்கு?...”

அவன் குரல் அவள் செவிகளை எட்ட, அவள் உதட்டில் புன்முறுவல் பூத்தது… இருந்தும் அதை பூத்த தடம் தெரியாமல் மறைத்தவள், அவனிடம் எதுவும் பேசவில்லை…

“தலை வலிக்குதா?...”

அவன் கேள்விக்கும் பதில் பேசாது அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்…

“ரொம்ப வலிக்குதா?...”

அவன் அக்கறையாய் வினவ,

“நான் உங்ககிட்ட சொன்னேனா?...”

அவள் கோபமாய் கேட்டாள் சட்டென…

“வலி இல்லாமலா இப்போ கடவுள் பேரை சொல்லி கூப்பிட்ட?...”

“நான் ஒன்னும் அடுத்தவங்களுக்கு சொந்தமான பேரை சொல்லலையே… எனக்கே எனக்கு சொந்தமான, என்னோட கடவுள் பேரை சொல்லுறதுக்கு நான் எதுக்கு தயங்கணும்?...”

அவள் பேச்சு போகும் பாதை உணர்ந்தவன்,

“தூங்காம முழிச்சிட்டிருந்தா தலைவலி தான் வரும்…” என்றான் அவளைப் பார்த்துக்கொண்டே…

“தூக்கம் வரலை… வரவும் வராது…”

“ஏன்?....”

அவன் கேட்டு விட்டான்… பாவம் அவளால் அதற்கு விடையை தான் சொல்லமுடியவில்லை…

எங்கே கண் இமைத்துவிட்டால் கூட, அவனது உயிருக்கு நேர இருக்கும் ஆபத்தை தான் அறியாது போய்விடுவேனோ என்ற பயம் அவளை ஆக்கிரமித்திருந்தது முழுமையாய்…

“தூங்கு… முழிச்சிட்டிருக்காத… ஹெல்த்துக்கு நல்லது இல்ல…”

அவள் விழிகளைப் பார்த்து கூறியவன், காரை மீண்டும் ஸ்டார்ட் செய்து, அவள் தூங்குவதற்காக மென்மையான பாடலை மிகக்குறைவான சத்தத்தில் ஒலிக்க விட்டுவிட்டு, கண்ணாடியில் அவளைப் பார்த்த போது, அவள் சிரித்தாள்…

அந்த சிரிப்பையே தன் தெம்பாக்கி காரை ஓட்டினான் அவன் நிம்மதியோடு…

கண் மூடிக்கொண்டிருந்த பிரம்மரிஷியின் விழிகளுக்குள் போராட்டமே நிகழ, அவர் விழி திறவாமலே மௌனமானார்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.