(Reading time: 14 - 27 minutes)

ஜெய் சிரித்துக்கொண்டே கேட்டதும், சில மாதங்கள் முன்பு நடந்ததை எண்ணிப்பார்த்தான் இஷான்…

ஜெய், திவாகர் கேஸ் விஷயமாக அனைத்து தகவல்களையும் சேகரித்ததோடு மட்டுமல்லாமல், அவனைத் தேடி ஊட்டிக்கே செல்ல இருப்பதையும், அதனுடன் சேர்த்தாற்போல் அவனை கைது செய்ய முடிவெடுத்திருப்பதாகவும், அதற்கு எப்போதும் போல் தன்னுடன் இருந்து உதவ வேண்டும் என்றும் ஜெய் கூற சற்று நேரம் எதுவுமே பேசவில்லை இஷான்…

ஜெய்யின் விடாமுயற்சி, அவனது அறிவு அனைத்தும் சேர்ந்தே திவாகரைப் பற்றிய தகவல்களை அறிய அவனுக்கு உதவியது என்ற எண்ணம் வந்ததும் தாமதிக்காது அவனை அணைத்துக்கொண்டான் இஷான்….

“என்னாச்சு இஷான்….”

“மச்சான் உன்னை நினைச்சா எனக்கு நிஜமாவே பெருமையா இருக்குடா… கிரேட் ஜாப்டா….” என வாழ்த்திய இஷான் ஜெய்யை அணைத்தபடி கூற,

“இதுல உன்னோட பங்கு தான் மச்சான் நிறைய…” என ஜெய்யும் இஷானை அணைத்துக்கொள்ள, இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து சிரித்துக்கொண்டனர்…

அந்த நாளின் நினைவு இன்று வந்ததும், இஷான் ஜெய்யினை அணைத்துக்கொண்டான் வார்த்தைகள் எதுவுமின்றி…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்...

விஷயம் அறிந்து சிதம்பரமும், காதம்பரியும் இஷானுக்கு வாழ்த்து சொல்ல தட்சேஷ்வரின் வீட்டுக்கு வருகை தந்த சமயத்தில் சோமநாதனும் அங்கே வர, அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்…

ஜெய்யை வற்புறுத்தி தனது வீட்டுக்கு அழைத்து வந்தான் இஷான்…

அவன் வந்து நின்றதும், சதி இமைக்காமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்…

அந்த நேரத்தில், தட்சேஷ்வரின் நண்பர் ஒருவர் தன் மகளுக்குத் திருமணம் வைத்திருப்பதாகவும், கட்டாயம் வரவேண்டும் என்று பத்திரிக்கை வைத்து அழைக்க,, தட்சேஷ்வரோ கல்யாணம் எங்கே என கேட்டார்…

இடத்தை சொன்னதும், சதியும் ஜெய்யும் ஒருவரை ஒருவர் தங்களையும் அறியாமல் பார்த்துக்கொண்டனர்…

“இவர் என் சம்பந்தி…” என சிதம்பரத்தை தட்சேஷ்வர், வந்திருப்பவருக்கு அறிமுகப்படுத்த, அவரது குடும்பத்தையும் மறவாது அழைத்தார் அவர் தன் மகளின் திருமணத்திற்கு…

சோமநாதனின் அருகே வந்தவர், “உங்களைப் பார்க்கணும்னு நிறைய தடவை நினைச்சிருக்கேன்… ஆனா பார்க்க முடியாமலே போயிட்டு… விஷயம் வெளிய தெரியாத அளவுக்கு என் பொண்ணை மட்டும் இல்ல, நிறைய பொண்ணுங்களோட வாழ்க்கையை காப்பாத்திருக்கீங்க… எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலை சார்…”

அவர் குரல் தழுதழுக்க பேச, சோமநாதனோ, இதில் தான் செய்யவில்லை எனவும், செய்ததெல்லாம் இஷானும் ஜெய்யும் தான் என்று கூற, அவர்களோ, சோமநாதன் தான் அனைத்திற்கும் காரணம் என்றனர் பெருமையுடன்…

“உங்களுக்கு இரண்டு பொண்ணுங்கல்ல?...”

தட்சேஷ்வர் விவரம் கேட்டறிய,

“ஆமா… முதல் பொண்ணுக்கு தான் கல்யாணம்… சின்னவ காலேஜ் படிக்குறா…”

“ஓ… சரி. சரி… போய் கல்யாண வேலையைப் பாருங்க… நாங்க வந்துடுவோம்…”

“கண்டிப்பா… எல்லாரும் வரணும்…” என அவர் அனைவரையும் பார்த்து கும்பிட்டு அழைக்க, அனைவருமே தலைஅசைத்தனர் சரி என….

அவர் சென்றதும்,

“அப்பா… அவர் என்னோட தொழில் முறை நண்பர் தான்… ஆனாலும் வீடு தேடி வந்து பத்திரிக்கை தந்திருக்கிறார்… அதனால என்ன செய்யுறது அப்பா?...”

“இதுல யோசிக்க என்ன இருக்கு?... கல்யாணத்துக்கு கண்டிப்பா நாம போகணும் தட்சா…”

“சரிப்பா… அப்போ பெரியவங்க நாம எல்லாரும் போயிட்டு வந்துடலாம்…”

“இல்ல தட்சா… அவர் கல்யாணத்தை முடிச்சிட்டு முதல்ல போக போற இடம் கோவில்… அந்த கோவிலுக்கு நாம நம்ம பிள்ளைங்களை கூட்டிட்டு போறது அவங்களுக்கு ரொம்பவே நல்லது…”

“சரிப்பா அப்போ எல்லாருமே போயிட்டு வரலாம்…”

“சரி தட்சா… அதற்கான ஏற்பாடுகள் பண்ணு…”

தட்சேஷ்வர் சொல்லி முடித்ததும்,

“அப்படி என்ன மாமா அந்த கோவிலில் விஷேஷம்?...”

பிரசுதி கேட்க, சிரித்தார் பிரம்மரிஷி…

அவரின் சிரிப்புக்கு அர்த்தம் என்ன என்று பிரசுதி யோசிக்கையிலே,

“அங்க வச்சு சொல்லுறேன்… அதுவரை பொறுமையா இரும்மா…” என்றார் அவர் பிரசுதியிடம்…

“தாத்தா… சொல்லுங்க தாத்தா…” என்றாள் கண்களில் ஆர்வத்துடன் சதி…

பேத்தியிடத்தில் திரும்பியவர், “நீயே தெரிஞ்சிப்பம்மா… அங்க போனதும்…” என்று கூறிவிட்டு செல்ல, சதியின் விழிகள் ஜெய்யை உரசி நிற்க, அதை எதிர்பார்த்தாற் போல் ஜெய்யும் சதியிடத்தில் தன் பார்வையை நிலைக்க விட்டான்….

அதை உணர்ந்தாற் போல், சென்று கொண்டிருந்த பிரம்மரிஷி நின்று ஒருநிமிடம் ஜெய்யையும், சதியையும் பார்த்தார்...

அவரின் மனதில் சரசரவென்று காட்சிகள் ஓட, “ஈசனே…” என அவர் உதடுகள் முணுமுணுத்தது வேகமாய்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.