(Reading time: 14 - 27 minutes)

வெல் டன் மிஸ்டர் இஷான் & மிஸ்டர் ஜெய்….”

கைகொடுத்து சோமநாதன் ஒரு கமிஷனராய் வாழ்த்தி பாராட்டினார்…

“இந்த கேஸ் வெற்றிகரமா முடிச்சிட்டீங்க… நம்ம டிபார்ட்மெண்ட்டுக்கே பெரிய பேரு வாங்கி கொடுத்திருக்கீங்க… கிரேட் ஜாப்…”

“இட்ஸ் அவர் டியூட்டி சார்…”

இருவருமே சிறு தலைஅசைப்புடன் கூற,

“வெல்… நீங்க ரெண்டு பேருமே இவ்வளவு தன்னடக்கமா பேசும்போது, டிபார்ட்மெண்ட்டும் உங்களுக்கு தன்னடக்கமா ஒரு ப்ரோமோஷன் கொடுக்க முடிவெடுத்திருக்கு…”

சோமநாதன் சொன்னதும், இருவரின் முகத்திலும் எந்த மாற்றமும் வெளிப்படவில்லை… எப்போதும் போலேயே இருந்தனர்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“உங்க ட்ரெயினிங்க் பீரியட் முடிஞ்சது… அதே போல, டிபார்ட்மெண்ட் கொடுத்த கேஸையும் சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சிட்டீங்க… சோ யூ போத் ஆர் ப்ரோமோட்டட் அஸ் அன் ஏசிபி….”

“தேங்க்யூ சார்…”

ஜெய்யையும், இஷானையும் வெகுவாக பாராட்டி அனுப்பியதும், இஷான் முதலில் போன் செய்தது சதிக்குத்தான்…

“ஹாய்… குட்டிச்சாத்தான்… என்ன பண்ணுற?...”

“ஹேய்… அண்ணா… என்ன இந்த நேரத்துல போன் பண்ணியிருக்குற?...”

“உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்… அதான் போன் பண்ணினேன்…”

“என்ன விஷயம்டா அண்ணா?... சீக்கிரம் சொல்லு… வேலை இருக்கு…”

“எங்க நீயே கெஸ் பண்ணு பார்ப்போம்…”

“ஹ்ம்ம்… டிபார்ட்மெண்ட்ல எதும் அவார்ட் கொடுத்துட்டாங்களா?...”

“ஹே… எப்படி கரெக்டா சொல்லிட்ட?...”

“பின்ன டீவி, பேப்பர், நியூஸ்னு எல்லா இடத்துலயும் உங்க புகழ் தான ஓடிட்டிருக்கு…”

“ஹ்ம்ம்… அப்படியா?...”

“சரி சொல்லு எதும் ப்ரோமோஷனா?...”

“ஹ்ம்ம்… ஆமாடா…”

“சூப்பர் அண்ணா… என்ன ப்ரோமோஷன்?...”

“என் மச்சான் ஏசிபி ஆகிட்டான்….”

இஷான் சொன்னதும், சதிக்கு இதழ்கள் விரிந்து மலர்ந்தது…

“என்னடா எதும் பேசமாட்டிக்குற?... சந்தோஷத்துல வார்த்தை வரலையா?...”

“ஹ்ம்ம்… என் அண்ணாக்கு என்ன ப்ரோமோஷன்னு சொல்லவே இல்லையே நீ?...”

“வாலு…” என தங்கையை திட்டியவன், தன்னுடைய ப்ரோமோஷனையும் கூற, அவளது உள்ளம் பூரித்து போனது…

“ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா… கங்கிராட்ஸ்ண்ணா….”

“ஹ்ம்ம்… தேங்க்ஸ்டா…”

“சரி அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டியா?... தைஜூகிட்ட சொன்னீயா?...”

“இல்லடா முதல்ல உங்கிட்ட தான் சொல்லணும்னு தோணுச்சு…”

“லூசாடா நீ… முதல்ல தைஜூக்கு போன் போட்டு பேசு…”

அவள் சொல்லிமுடிக்கையில் சரியாக அவளது அறை வாசலில் வந்து நின்றாள் தைஜூ…

“அதெல்லாம் அவர் எதுவும் சொல்லவேண்டாம்…”

தைஜூவின் குரல் கேட்டு திரும்பிய சதி,

“வா தைஜூ…” என அவளை வரவேற்று பேச ஆரம்பித்தவள்,

“தைஜூ அண்ணா உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணுமாம்…” என்றாள்…

“உன் அண்ணன் ஒன்னும் சொல்லவேண்டாம்… எனக்கு என் அண்ணன் போன் பண்ணி அப்பவே சொல்லிட்டார்…”

தைஜூ பெருமையும் பூரிப்புமாக சொல்ல, சதியின் முகத்தில் மகிழ்ச்சி வந்திருந்தது…

லைனில் இருந்தபடியே தைஜூ சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த இஷானின் முகத்திலும் புன்னகை வந்திருந்தது… தங்கையிடம் சிறிது நேரம் கழித்து பேசுவதாக கூறிவிட்டு, போனை வைத்தவன், ஜெய்யைத் தேட அவன் பத்தடி தூரத்தில் நின்றான்…

“எப்படிடா… அதுக்குள்ள தைஜூகிட்ட சொன்ன?...”

“பின்ன, என் மச்சான் ஏசிபி ஆகிட்டான்னு நான் சொல்லவேண்டாமா என் தங்கச்சிகிட்ட?...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.