(Reading time: 10 - 19 minutes)

னி ஃபீஸ் கொடு, நான் வீட்டுக்கு வந்து தாரேன் “ என்றுச் சொல்ல,

“அதெல்லாம் ஃபீஸ் கொடுத்தா அண்ணன் கோச்சுக்குவாங்க” என்றவளாய் அவனைக் கூட்டிக் கொண்டு திரும்ப வந்து விட்டிருந்தாள்.

“எங்கப் போனாலும் இவ வால்தனத்தைக் காட்டிடுறாளே? நான் வேற அவசரத்தில வாலட்டை மறந்து வந்திட்டேனே” என சங்கடமாக ரூபன் திரும்பிப் பார்க்க ராஜேஷ் இது வழமையான ஒன்று தான் என்பது போல தலையசைத்து வழியனுப்பினான்.

அதைத்தான் விளையாட்டாக சொல்லிக் கொண்டிருந்தான். இப்போது அங்கு ரூபன் என்கிற ஒருவன் இல்லாதது போலவே இருவரும் பேச்சில் ஒன்றிப் போய் இருந்தார்கள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 02..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

அன்றைய தினம் மறுபடி வீடு வந்தது முதல் அவனை இந்திரா வரும் வரைக் கவனித்ததும் அவளுக்கு இயல்பான ஒன்றாக இருந்திருக்கலாம் அவனுக்கு தான் அவை மறக்க முடியாத சம்பவங்களாயின. அதன் காரணமாகவோ என்னவோ தன்னுடைய ஃபேக்டரி ஊழியர்களுக்கான மாதாந்திர ஹெல்த் செக் அப்பிற்காக ராஜேஷையே பேசி சம்மதிக்க வைத்திருந்தான்.

மாதா மாதம் அவன் வருகை தரும் போதெல்லாம் கூடவே அவளின் நினைவுகளும் வரும். ராஜேஷீம் அனிக்கா குறித்து எதையாவது பேசாமல் அங்கிருந்துச் சென்றது கிடையாது.

அண்ணன் ஆஃபீஸ் பக்கம் சென்றவன் இன்னும் திரும்பவில்லையே என்று எண்ணிய ஜீவன் தன் தோழியை பாதுகாக்கும் பணியையும் செய்ய வேண்டி இருப்பதால் அப்படி என்னதான் செய்துக் கொண்டிருக்கிறான் என அறிந்துக் கொள்ள வந்து நின்றான். அங்கு ராஜேஷும் அனிக்காவும் பேசிக் கொண்டிருக்க, அவளுடைய நயன பாஷைகளை மொழிப் பெயர்க்கின்றவன் போல தன்னை மறந்து அனிக்காவின் முகத்தை காதல் வழிய பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தான் ரூபன். 

ஒரு சில நொடிகள்

அருளுரைக் கேட்க சலிக்கும் செவிகள்.

 

உன்னைப் பற்றிக் கேட்க மட்டும்

ஒரு பொழுதும் சலிப்பது இல்லை.

 

நொடிகள் தவறாமல்

இமைக்கும் இமைகள்

 

உனைப் பார்க்கும் போது மட்டும்

இமைக்க துணிவது இல்லை.

 

லப் டப்பென சீராக லயத்தில்

ஒலிக்கும் எந்தன் இதய துடிப்போ

 

உன் அருகாமை கண்டதும்

லயத்தை தொடர்வது இல்லை

 

என் முடி முதல் அடி வரை

உன் கட்டிற்க்குள் வைத்தாய்.

 

உன் இதயத்தை

எனக்கெப்போது தருவாய்?

 

என் வாழ்வினில்

எப்போது வருவாய்?

 

என் கனவே

எந்தன் கண்மணியே…………

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.