(Reading time: 17 - 33 minutes)

16. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval

நட்பின் உயர்வை அறிந்ததுண்டு

உந்தன் காதலின் வலிமை மட்டும்.

இன்றுவரை

அறியாதிருந்தேன்.

 

காதல் ஈர்ப்பை உணர்ந்ததில்லை 

உந்தன் காதலின் உயிர்ப்பை 

இன்றே நானும்

அறிந்துக் கொண்டேன்.

 

ஏனென்றேத் தெரியவில்லை?

உன்னை எதிர்ப்பதாய்

எண்ணிக் கொண்டிருந்த

என்னையும் ஈர்த்துவிட்டது.

உந்தன் கண்ணியக் காதல்

ன்னைச் சுற்றி நிகழுகின்ற அனைத்தையும் மௌன சாட்சியாக கவனித்துக் கொண்டிருப்பதாக தற்போது உணர்ந்துக் கொண்டிருக்கின்றான் ஜீவன். 

தீபன் திருமணத்தன்று ஜீவனுக்கும் ரூபனுக்குமாய் நிகழ்ந்திருந்த உரையாடல், அவனுடைய காதல் குறித்த அலசல், நட்புக்கு கொடி தூக்கியவனாய் தம்பி போர் முரசுக் கொட்ட, காதலில் தவித்தவனாய் அண்ணன் அவனிடம் இறைஞ்ச உணர்வுப் பூர்வமான அந்த நாளுக்குப் பின்னர் இருவருக்குமே மறுபடியும் அதுக் குறித்துப் பேச வாய்ப்பு இருந்திருக்கவில்லை.

தன்னுடைய 2 வருட அயல்நாட்டு வேலையை முடித்து தாயகம் திரும்பிய அன்றிலிருந்து ரூபனுக்கு மூச்சு விடவும் நேரமிருந்ததா என்பதே இவனுடைய கேள்வியாக இருக்க, அவனின் காதல் குறித்து பேச எங்கே நேரம் இருந்தது?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

வெறித்தனமான அவனுடைய உழைப்பைப் பார்த்து இவனே கதிகலங்கி இருந்தான். தன்னுடைய படிப்பின் இடைவெளியில் அவ்வப்போது அண்ணனின் ஃபேக்டரிக்கு போய் பார்வையிட்டு போதே ஒவ்வொரு முறையும் ரூபனின் வளர்ச்சி விகிதம் குறித்து ஆச்சரியப் படுவான். டாக்டர் ராஜேஷை வொர்க்கர்ஸ் மாதாந்திர செக் அப்புக்காக நியமித்தது குறித்து அப்போதே அவனுக்கு முரண்பாடாக தோன்றிற்று. ஏனென்றால் ராஜேஷ் கிறிஸ்ஸுனுடைய நண்பர் குழுவில் உள்ளவன். தீபனுக்கோ, ரூபனுக்கோ அவ்வளவாக அவனோடு நெருக்கம் இருந்தது இல்லை. இவன் எப்படியாக ராஜேஷோடு தொடர்பு கொண்டான் என்பதே அவனுக்கு கேள்விக் குறியாக இருந்தது.

அன்று அனிக்காவுடன் ராஜேஷ் பேசிய விதத்தில் தான் புரிய வருகின்றது இவையெல்லாம் அவன் செய்துக் கொண்டிருப்பது அனிக்காவிற்காக என்று, அது மட்டுமன்று அவளறியாமல் அவளை ரூபன் பார்க்கும் பார்வை , அதில் ஜீவனுக்கு சற்றும் அசூயை காண முடியவில்லை. அதிலும் கடந்த வாரம் நடந்த நிகழ்வு அவனை அசைத்துப் பார்த்துவிட்டது.

அன்று ஸ்டாக் எல்லாம வைத்திருக்கும் ஸ்டோர் ரூமில் பார்வையிட மூவருமேச் சென்றிருக்க , தடாலென ஒரு இரும்புக் கம்பி மேலிருந்து தவறி விழ, எப்படித்தான் ரூபனுக்கு புரிந்ததோ தெரியவில்லை சட்டென்று தன் முன்னின்ற அனிக்காவை பின்னுக்கு இழுத்திருந்தான்.

“அனிம்மா” என்னும் அவன் கூவலும் , அவன் கைகளின் நடுக்கமும், சட்டென்று சிவப்பேறிய விழிகளும், நரம்புகள் புடைக்க உக்கிரமாய் கவனக் குறைவாக செயல்பட்ட தன்னுடைய வொர்க்கரை அவன் பார்த்த பார்வையும், “அச்சச்சோ நம் தலையில் விழுந்திருக்கும்” என்று மிரண்ட அனிக்கா கூட விரைவில் அந்நிகழ்விலிருந்து வெளி வந்து விட்டாள். ஆனால், ரூபனை சமாதானப் படுத்த தான் வெகு நேரமாயிற்று.

இப்பொழுதெல்லாம் ஒரே அறையை இருவரும் பகிர்ந்துக் கொள்வதால் அவன் வெடுக்கென்று எழுந்து இரவு முழுவதும் தூங்காமல் அதையே சிந்தித்துக் கொண்டிருப்பதை அன்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அனிக்காவைப் பற்றி பேசினால் தம்பிக்கு பிடிக்காதோ என்ற எண்ணத்தில் மனதில் இருப்பதை அவனோடு பகிர்ந்துக் கொள்ள இயலாமல் நடுஇரவில் அறையில் நடைப் பயில மனதுக் கேட்காமல் இவனாக தான் கேட்க வேண்டியதாயிற்று.

என்னாச்சுண்ணா?

என்னவோ மனசுக்கு பயமா இருக்குடா? எதுவும் தப்பா நடக்க போறமாதிரி மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு? இன்னிக்கு பார்த்தில்ல அந்த ராடு அவ தலையில விழுந்திருந்தா என்ன ஆகியிருக்கும். சிந்திக்கவே பிடிக்காதவனாக கண்ணை இறுக்க மூடினான். அவளுக்கு எதுன்னா என்னால தாங்க முடியாதுடா? இன்னிக்கு காலையிலருந்தே எனக்கு மனசுக்கு ஏதோ தோணிட்டு இருந்துச்சு, பார்த்தா இப்படி பயந்தமாதிரியே ஆயிடுச்சு. சரி மனசுக்கு கஷடமா இருந்தது இதுக்காகத் தான் போல எப்படியோ அவளுக்கு ஆபத்தில்லாம காப்பாத்திட்டோமேன்னு மனசை தேத்திக்க முடியலை, இன்னும் எதுவோ பெரிசா ஆகப் போகுதுன்னு உள்ளுக்குள்ள ஒரே கலக்கமா இருக்குடா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.