(Reading time: 9 - 17 minutes)

13. நிர்பயா - சகி

Nirbhaya

வசர சிகிச்சை பிரிவின் கதவின் வெளியே நின்றுக்கொண்டு தன் மனம் வென்றவளின் கொடூர நிலையை பார்த்துக் கொண்டிருந்தான் ஜோசப்.

இரு தினங்களாக,அவன் மனம் படும் பாடு அறிய இறைவனுக்கும் ஞானம் போதாது எனலாம்.அவன் என்ன அறிவான் காதலின் வலியை குறித்து??அவன் மட்டும் தன் சதியோடு ஆனந்தமாக வாழ்வை கழிக்கின்றான்.

அன்பாக நான் உழல்கிறேன் என்று தத்துவம் பேசுகிறான்.ஆனால்,உலகில் வாழும் உன்னத அன்பை பிரிக்க முதல் ஆளாய் திட்டம் தீட்டுகிறான்.இன்றைய காலத்தில் இருபாலரில் ஒருவர் தன் இணையை ஏமாற்றுகின்றனர்.இல்லையேல்,பெரும் மனம் கொண்ட இறைவன் அக்காதலை ஏமாற்றி விடுகிறான்.ஒருவேளை,அவனுக்கே புவியில் வாழும் காதலர்கள் மேல் பொறாமையாகவும் இருக்கலாம்.

யார் அறிவார் அவன் மன ரகசியத்தை..!

பொறுமை இழந்தவன் மெல்ல அவ்வறை கதவை திறந்து உள்ளே சென்றான்.அவன் உள்ளே வந்ததும் அங்கிருந்த செவிலி அமைதியாக வெளியேறினார்.

அவளருகே சென்றவன்,அமைதியாக அவளருகே அமர்ந்தான்.அவளிடம் எவ்வித அசையும் இல்லை.மென்மையான அவளது வலக்கரத்தை தன்னிரு கரங்களோடு பொருத்தி மூடி கொண்டான்.தன்னிச்சையாக அவன் கண்கள் கசிந்துருகின.

"ஸாரிடி!உனக்கு எந்த கஷ்டத்தையும் வர விட மாட்டேன்னு சத்தியம் பண்ணிருந்தேன்.ஆனா,இன்னிக்கு அந்த சத்தியத்தை மீறிட்டேன்.என்னால..என்னால தான் இது எல்லாம்!நான் உன்கிட்ட மனசுவிட்டு பேசி இருக்கணும்.உன் வலிகளை பகிர்ந்திருக்கணும்.ஆனா,நான் அதை செய்யலை!என்னை மன்னிச்சிடும்மா!"-அவன் ஒடிந்து போனான்.ஆனால்,அவளோ அவன் அழுகைக்கு செவி சாய்க்கவில்லை.

அவள் உடலில் உயிர் ஐந்து சதவீதமே ஒட்டி இருந்தது.எப்போது வேண்டுமானாலும் அது விடைபெறலாம்.அவள் பிழைக்க போவதில்லை என்ற செய்தி அனைவரையும் திடுக்கிடவே செய்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"ன்னங்க பண்றீங்க?"-நிர்பயாவின் குரலை கேட்டதும் அவசர அவசரமாக அந்த மதுபானத்தை மறைத்து வைத்தனர் ஜோசப்பும்,எட்வர்ட்டும்!!

"என்ன மறைக்கிறீங்க?"

"அது வந்து..அம்மூ!"

"எட்?கையில என்ன?"

"அண்ணி..நான் வேணாம்னு தான் சொன்னேன்!அண்ணன் தான்!"-என்று அந்த மதுபானத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தான் எட்வர்ட்.

"நீயுமா எட்?"

"இல்லை அண்ணி!எப்போதாவது தான்!"

"எப்போதாவதா?உன்னை நல்ல பையன்னு பார்த்தா!நீயும் அவரை மாதிரி தான் போல!"-சந்தர்ப்பம் கிடைத்ததும் காலை வாரினாள் நிர்பயா.

"இல்லை அண்ணி!இனிமே பண்ண மாட்டேன்!"

"சேர்க்கை சரி இருந்தா உன் சத்தியத்தை நம்பலாம்."

"ஏ..என்ன நீ?ரொம்ப தான் காலை வாரி விடுற?"-சண்டைக்கு வந்தான் ஜோசப்.

"ம்..பின்ன என்ன?நான் பெரிய வீராதி வீரன்!என் மனசை கட்டுப்பாட்டில வைக்க எனக்கு தெரியும்னு சவால் விட்டு ஒரு நாள் கூட முழுசா முடியலை.அதுக்குள்ள சத்தியத்தை மீறியாச்சு!இதுல,பாவம் அந்த பையனை வேற சேர்த்துக்கிட்டிங்க!"

"எது இவன் பாவமா?எல்லாம் என் நேரம்!"

"எட்..!இதை இனிமே இந்த வீட்டில நான் பார்க்க கூடாது!மீறி பார்த்தா.."

"என்ன பண்ணிடுவியாம்?"-என்றான் ஜோசப்.

"எட்வர்ட் நீ கொஞ்சம் கீழே போ!"-ஒன்றும் புரியாமல் நின்றிருந்தவன் அவளது குரலில் கலைந்து அமைதியாக கீழே சென்றான்.தன்னிடம் தனிமையில் சிக்கிய ஜோசப்பை திமிராக ஒரு பார்வை பார்த்தாள் அவள்.அந்த திமிரின் பொருள் நமக்கு புரியாது!ஆனால்,அவனுக்கு புரியும்!

"என்ன?"-நிர்பயா மெல்ல அவனருகே வந்தாள்.

"இப்போ எதுக்கு பக்கத்துல வர?"

"என்ன பண்ணுவேன்னு கேட்டிங்களே!கண்ணை மூடுங்க சொல்றேன்!"-அவன் ஏதோ பெரும் எதிர்ப்பார்ப்புடன் விழிகளை மூடினான்.அவனருகே வந்தவள்,அவனது செவியை பிடித்து திருகினாள்.

"ஆ..!வலிக்குதுடி!"

"என்ன பண்ணுவேன்னு கேட்டீங்களே இதான் பண்ணுவேன்!"

"லூசு!ப்பே..!நான் ஏதோ பெரிசா எதிர்பார்த்தேன்!"

"அப்படியா?"-என்றவள் அவன் செவிகளை பலமாக திருகினாள்.

"ஆ..!"

"இதுபோதுமா?"-அவ்வளவு தான்,சட்டென அவளை இழுத்து அவளது இதழ்களை தனதாக்கிக் கொண்டான் ஜோசப்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.