(Reading time: 9 - 17 minutes)

வனது செய்கையை சற்றும் எதிர்நோக்காதவள் ஸ்தம்பித்து போனாள்.

"இது போதுமா?"-அவள் கேட்ட அதே கேள்வியை அவளிடம் திருப்பி கேட்டான் ஜோசப்.

முகத்தை குழந்தையை போல மாற்றியவள்,அவனது கேள்விக்கு பதில் கூற இயலாமல் திணறினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் "அவளுக்கென்று ஒரு மனம்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

டந்த கால நிகழ்வினால் ஏற்பட்ட வலிகள் இதயத்தை வியாபிக்க,அவனது கண்ணீர் நிலத்தை நனைத்தது.

"இவள் இல்லாமல் எப்படி வாழ்வேன்?"என்ற கேள்வி மட்டும் அவனிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டே இருந்தது.

"மாவட்ட ஆட்சியர் நிர்பயா உயிருக்கு போராட்டம்!பெரும் விபத்தில் சிக்கி மரணத்தோடு போராடி கொண்டிருக்கிறார்.இது விபத்தா?அல்லது சதியா?காவல்துறை விசாரணை!"-தொலைக்காட்சியில் ஒலித்தது இச்செய்தி.

பல்லவியின் கரம் ஏந்திய பூஜை தட்டு நிலம் விழுந்து சிதறியது.

சத்தம் கேட்டு ஓடி வந்தார் விசாலாட்சி.

"மா!பல்லவி!என்னாச்சு?"-மனதினில் பெரும் வேதனை குடியேற,அப்படியே மயங்கி சரிந்தார் அவர்.

முகத்தில் யாரோ தண்ணீர் தெளிக்க,கண்விழித்தவர் மெத்தையில் சாய்ந்திருந்தார்.

"பல்லவி!என்னம்மா ஆச்சு?"-சங்கரனின் அக்கறையான குரல் செவிகளில் ஒலித்தது.

"பல்லவி?"-அவரால் பேச இயலவில்லை.குரல் உடைந்துப் போனது.

"அ..அம்மூ..!"

"என்ன?"

"அம்மூக்கு ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சி!"-என்பதற்குள் மீண்டும் ஒரு அழுகை.சங்கரனின் முகத்திலா சலனம் ஏற்படும்?அவர் சில நொடிகள் கற்சிலையாய் அமர்ந்திருந்தார்.பின்,

"ஐயோ!என்னம்மா சொல்ற?"-என்றார் போலியான பதற்றத்தோடு!!

"ஆமாங்க!நான் உடனே அவளை பார்க்கணும்!"-அவர் கதறி அழுதார்.

"சரி..வா!போகலாம்!"-மீண்டும் அதே போலியான பதற்றம்.

சரியாக அரை மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தனர் பல்லவியும்,விசாலாட்சியும்!!அவரை இறக்கிவிட்ட பெரும் மனம் கொண்டவர்,ஏதேதோ காரணங்கள் கூறி வெளியே நின்றுவிட்டார்.

இன்னும் ஜோசப் பற்றிய அவளது கரத்தை தியாகிக்கவில்லை.அவளது முகத்தையே பார்த்தப்படி அமர்ந்திருந்தான்.

எனது தனிப்பட்ட அபிப்பிராயத்தில் தாய்க்கு நிகரானவள் தாரம் என்பது போல,அதே தாய்க்கு இணையானவன் ஒரு கன்னிகையின் கரம் பற்றும் ஆணாவான்.உலகில் எந்த பந்தமும் நிரந்தரமில்லை தான்.ஆனால்,காதல் அந்த விதியை மாற்றும் பொருட்டே அவதரித்திருக்கலாம்.

ஆம்...!எண்ணி பார்க்காமல் ஒருவர் மீது கொள்ளும் அன்பானது,நிச்சயம் தனித்துவம் இல்லாமல் அமையாது.

தாய்மை,நட்பு,காதல் மூன்று தங்களின் பாதையை தனித்துவமாக அமைத்தவை.எவற்றோடு ஒப்பிட இயலாத மகத்துவம் கொண்டவை!!

ன்ற புதல்வியை காண ஓடி வந்தவர் பார்வதியால் தடுக்கப்பட்டார்.

"ஏன் வந்த?"

"மா!நான்.."

"அவ இன்னும் சாகலை..இன்னும் உயிர் இருக்கு!இப்போ போ!"-வலிக்கொண்ட மனதில் காயத்தை ஏற்றினார்.

"மா!ஏன்மா இப்படி பேசுறீங்க?"

"நீதானே அவ செத்தா கூட பார்க்க மாட்டேன்னு சொன்ன?என் பேத்தியை பார்த்துக்க எனக்கு தெரியும்!நீ கிளம்பு!"

"ஏங்க..தயவுசெய்து நிர்பயாவை பார்க்க விடுங்க!"-கெஞ்சினார் விசாலாட்சி.

"நீங்க அவளை பார்க்க நான் தடை எதுவும் சொல்லலை.நீங்க பார்க்கலாம்!இவ நிழல் கூட அவ மேல் பட கூடாது!யாருக்கு தெரியும்?நீயே கூட அவ சாக வழிவகை செய்திருக்கலாமே!"-என்ற வார்த்தை அவரது இதயத்தை கிழித்தது.

ஒரு வார்த்தை உருவாக்கும் காயத்தின் அளவு அப்போது தான் அவருக்கு புரிந்தது.

"பாட்டி"-ஜோசப்பின் குரல் அவரை உலுக்க,திரும்பினார் பார்வதி.

"அவங்களை போக விடுங்க!"

"இல்லைப்பா!அவ மூச்சுக்கூட என் பேத்தி மேலே பட கூடாது!"

"நிர்பயாக்கு அவங்கன்னா ரொம்ப பிடிக்கும் பாட்டி!அவங்க குரலை கேட்டாவது அவ கண் விழிப்பாள்னு ஒரு நம்பிக்கை இருக்கு!"-எங்கு போய் அழுவது இவனது காதலை???

பார்வதியால் மறு பேச்சு பேச இயலவில்லை.அவர் மௌனமாக வழிவிட,பல்லவி நன்றியோடு ஜோசப்பை பார்த்துவிட்டு உள்ளே சென்றார்.

"அம்மூ!"-பதறியப்படி தன் புதல்வியை தழுவிக்கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.