(Reading time: 9 - 17 minutes)

"ன்னை மன்னிச்சிடும்மா!நான் ரொம்ப பெரிய பாவத்தை பண்ணிட்டேன்!தயவுசெய்து அம்மாவை பாருடா!ஐயோ..!உன்னை இந்த நிலையில பார்க்கவா நான் உயிரோட இருக்கிறேன்!எவ்வளவு வலிகளை கொடுத்துட்டேன்.என்னை விட,மோசமான தாய் இந்த உலகத்துல யாரும் இருக்க முடியாது!பாரும்மா..!அம்மாவை பாரும்மா!"-அவளிடம் அசைவில்லை.அவளுக்கு வைராக்கியம் அதிகம்!!ஒன்று வேண்டாம் என்று முடிவெடுத்தால்,இறைவனே வந்து அதை ஏற்க பரிந்துரைத்தாலும் அதை ஏற்க மாட்டாள்.இப்போது,அவள் வேண்டாம் என்று எண்ணியதோ அவள் வாழ்வை!ஆனால்,அதனால் விளையப்போகும் இன்னல்கள் குறித்து அவள் சிந்திக்கவே இல்லை.

"மேடம்!"-செவிலியின் குரல் கேட்டு திரும்பினாள்.

"கொஞ்சம் வெளியே இருங்க மேடம்!அவங்களுக்கு இன்ஜெக்ஷன் போடணும்!"-பல்லவியால் அவளை பிரிய முடியவில்லை.விசாலாட்சி அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

சில நிமிடங்கள் கழித்து,மீண்டும் மருத்துவரிடம் நிர்பயாவை குறித்து விசாரித்தான் ஜோசப்.

"ஸாரி..!நாங்க எவ்வளவோ முயற்சி செய்தோம்!ஆனால்,மன்னிச்சிடுங்க!அவங்க பிழைக்க இரண்டு சதவீதம் தான் வாய்ப்பிருக்கு!"-என்றார் மருத்துவர்.

"இதோ மீண்டும் நான்!முதல் அத்தியாயத்தில் சந்தித்து சென்ற அதே நிர்பயா தான்!எனை குறித்து அறிந்தீர்களா?இது நான் மட்டும் அல்ல..சமூகத்தில் பெரும் பங்கு என்னை போன்ற நிர்பயாக்களும்,சுப்ரியாக்களுமே முதன்மை வகிக்கின்றனர்.இது எங்கள் தவறா அல்லது சமூகத்தின் அமைப்பா என்பது புரியாத புதிரே!!எதற்கெடுத்தாலும் பழி பெண்கள் மீது அல்லவா??மௌனமாக இருந்தால் இவள் அழுத்தக்காரி!உண்மையை உரைத்தால் ஆணவம் பிடித்தவள்!எங்களுக்கும் உணர்வுகளை அந்த கபட நாடக வேஷதாரி படைத்துவிட்டானே அதற்காக கூட எங்கள் மேல் கருணை இந்த பாரில் உள்ள எவருக்கும் சுரக்கவில்லையா?இதோ எனை ஈன்றவளின் அழுகுரல் கேட்கிறது!உறவுகளின் ஓலமும் தான்!நான் எழப் போவதில்லை.போதும் இதற்கு மேலும் என்னால் இயலாது!!நான் செல்கிறேன்.எனை ஆராதிக்க இறைவனானவன் காத்துக் கொண்டிருக்கிறான்.அவனை தவிர எவருக்கும் என் மேல கருணை இ்ல்லை என்பதே நிதர்சனம்!என் மரணத்தின் பின் சில தினங்கள் எனைப் பற்றி அழுவார்களா?அதற்கு மேல்??நானும் கானலாக மாறுவேன்!!போதும்..மனித வாழ்வில் என்ன சுகம் கண்டேன்??நான் செல்கிறேன்.என் நினைவுகள் மங்க தொடங்கிவிட்டன...!உடல் மரத்து போகின்றது.வலிகள் மறைந்துப் போகின்றது.ஆழ்ந்த மயக்கத்தில்,அமைதியான,நிரந்தர உறக்கத்தை நோக்கி செல்கின்றேன்.இனியாவது,எனை போன்றவர்களுக்கு இதுபோன்ற நிலை வராமல் இயன்றால் தடுத்து நிறுத்துங்கள்.விடை பெறுகின்றேன்!!"

 

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.