(Reading time: 17 - 33 minutes)

ப்பவும் தேவையே இல்லாம எதையாவது பேசிட்டு இருப்பா, என்னதான் அண்ணி ரிலேடிவ்னாலும் மற்றவங்க பார்க்க என் கிட்ட க்ளோசா பேசுறது எனக்கு பிடிக்காது. அமைதியா எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேட்கலை.

ஜெண்ட்ஸா இருந்தா எப்படியும் கடுமையா பேசி புரிய வைக்கலாம், லேடீஸ் கிட்ட அப்படி பேச முடியுமா? அதுவும் நான் எதையாவது சொல்லி அண்ணிக்கு வருத்தமாகிட்டா பாவம் தீபன் அண்ணனுக்கு பிரச்சினை ஆகும். அதான் என்னச் செய்யிறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.

கடைசில தீபன் அண்ணாகிட்ட அட்வைஸ் வாங்கித்தான் அன்னிக்கு அவளை வெளியே கூப்பிட்டுக்கிட்டு போனேன். எதுக்கு அடிக்கடி ஃபோன் பேசற , எதையோ சொல்ல வர்ற மாதிரி இருக்கு, ஆனா என்னன்னு புரியலைன்னு அவக் கிட்ட கேட்டேன்.

நான் உங்களை விரும்பறேன், உங்களைத்தான் மேரேஜ் செஞ்சுக்க ஆசைப் படறேன்னு அவச் சொன்னா?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் "அவளுக்கென்று ஒரு மனம்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

நான் அவளை விரும்பலை அப்படின்னு அமைதியா விளக்கிட்டு இருந்தேன். அப்படியும் அவ நான் சொல்றதை காதுக் கொடுத்துக் கேட்க தயாரில்லை,

அதுக்கென்ன நமக்கு கல்யாணம் செஞ்சுக்கிற முறை இருக்கு, வீட்டில யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. எங்க வீட்டுல எல்லோருக்கும் சம்மதம் தான்னு சொன்னதையே சொல்லிட்டு இருந்தா…..

அப்புறம் என்னாச்சு? தம்பி மற்றும் அனிக்காவின் கண்களில் தெரிந்த ஆர்வத்தை பார்த்து புன்முறுவலோடு தொடர்ந்தான்.

நான் ஏற்கெனவே ஒரு பொண்ணை காதலிக்கிறேன். அவளை தான் கட்டிக்க போறேன்னு சொன்னதும் தான் அந்தப் பேச்சையே விட்டாள் என்று முடித்தான்.

ஜீவனின் பார்வை தன் தோழியை நோக்கி இருந்தது. அவள் எப்படி உணர்கிறாள் என்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனே எதிர்பாராத வண்ணம் ரூபனின் பேச்சைக் கேட்டு சட்டென்று திகைத்தாள் அனிக்கா. 

ரூபன் யாரைக் காதலிக்கிறானாம்? கேட்டு விடலாமா என எண்ணியவளை தடைச் செய்தது ரூபனுக்கு வந்த தொலைபேசி அழைப்பு. ஏற்கெனவே சாப்பிட்டு முடித்ததால் பேசியவாறே எழுந்துச் சென்றிருந்தான் ரூபன்.இவையெல்லாம் மனதிற்குள்ளாக எண்ணிக் கொண்டிருந்த ஜீவனுக்கு அனிக்காவிற்கும் ரூபனை பிடித்திருக்குமோ? ஆனால் அது அவளுக்கே புரிந்திருக்கின்றதா? இல்லையா? என்பது தான் இவனுடைய தற்போதைய சந்தேகம்.

அப்படி இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினால், தானும் தன் அண்ணனுக்கு எல்லா விதத்திலும் அவன் காதல் வெற்றிப் பெற உதவ வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டான்.

ரூபனுடைய புதிய ஃபேக்டரி ஆரம்பித்ததன் பின்னர் ஒரு வருடம் கழித்து தான் தான் ராஜ் லீவிற்கு தாயகம் வந்திருந்தார், இந்த முறை லீவு கிடைப்பது அவருக்கு தாமதமாகி விட்டிருந்தது. மகனுடைய வளர்ச்சிகளை போட்டோவிலும் , வீடியோவிலும் பார்த்துக் கொண்டிருந்தவர் நேரில் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

அதிலும் ஜீவனும் அனிக்காவும் அவனுக்கு துணை நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

சாரா இன்னும் தான் சொன்ன விஷயத்தை தாமஸ் காதில் போடவேயில்லை என்று அறியாதவராக இந்திரா இருந்தாலும் , ரூபனும் அடுத்த வருடம் தான் திருமணம் என்றுச் சொல்லி இருக்க சாராவை அவர் மீண்டும் வலியுறுத்தவில்லை.

என் மகனுக்கு அவர் மகளை கொடுக்காமலா இருந்து விடப் போகிறார் என்கிற அதீத நம்பிக்கை ஒரு காரணம். இன்னமும் மகனிடமும் அவன் மனதிலுள்ளவற்றை உட்கார்ந்து அவர் பேசியிருந்திருக்கவில்லையே?

வாழ்க்கை என்பதை பலரும் ஓட்டப் பந்தயமாக எண்ணுவதே பலப் பிரச்சினைகளுக்கு காரணம். மனம் விட்டுப் பேசுவது பலக் குடும்பங்களில் காணப்படுவதே இல்லை. அப்புறம் பார்த்துக்கலாம் என்கிற மனநிலையில் பற்பல நேரங்களில் உறவுகளும், பலர் உணர்வுகளும் காயப்பட்டு போகின்றன.

தன்னுடன் இன்னும் தன்னுடைய மற்றப் பிள்ளைகளைப் போல மனம் விட்டு பேசியறியாத மகனை உட்கார வைத்து பேசுவது பெரியதொரு விஷயம் தான் இந்திராவிற்கு. தீபன் மூலமாகவே அவனிடமிருந்து பதிலை வாங்குவது வழக்கமாயிற்று. இன்னும் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று அவன் கூறியதை தாயிடம் வந்துச் சொன்னதும் தீபன் தான்.

என்னதான் மகனிடம் அவனுடைய திருமணம், விருப்பம் குறித்து நேரடியாக இந்திரா பேசியிராவிட்டாலும் ராஜிடம் மகனுடைய விருப்பத்தைச் சுட்டிக் காட்ட மறக்கவில்லை அவர்.

மனைவி மூலமாக அனிக்காவை ரூபன் விரும்புவதை அறிந்துக் கொண்ட ராஜ் தன்னுடைய தங்கை மகள் தன் வீட்டிற்கு மருமகளாக வரப் போவது குறித்து எண்ணி மகிழ்ந்தார்.மனைவி கூறியதைப் போல மகன் அவனாக வந்து தன்னுடைய விருப்பத்தைக் கூறும் வரை காத்திருப்போம் என்று எண்ணினார்.

அன்றைய ஞாயிறு அண்ணன் வருகையை ஒட்டி சாரா தன் குடும்பத்தோடு ராஜ் வீட்டிற்கு வந்திருந்தார். வழக்கம் போல மதிய விருந்திற்கு பிறகு ஹாலில் அனைவரும் ஒன்றுக் கூட, அங்கே பேச்சுக் களைக் கட்டியது. கலகலப்பான உரையாடலில் சாப்பாட்டிற்கு பின்னர் வேலை இருப்பதாகச் சொல்லி கழன்றுக் கொண்ட தாமஸ், கிறிஸ்ஸை தவிர அனைவரும் இருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.