(Reading time: 17 - 33 minutes)

ற்றெல்லோரும் நாற்காலிகளிலும் சோஃபாவிலும் அமர்ந்திருக்க வீட்டின் 3 சின்னவர்கள் மட்டும் தரையில் வெகு மும்முரமாய் விளையாட்டு சாமான்களோடு இருந்தனர். அது வேறு யாருமில்லை. அனிக்காவும், தீபன் மகன் ராபினும், கிரிஸ் மகள் ஹனியும் தான்.

தன் கால் மேல் சாய்ந்துக் கொண்டு கதைப் பேசிக்கொண்டு அதே நேரம் விளையாடிக் கொண்டு இருந்த அனிக்காவின் தலையை வருடிய ராஜ் ஏதோ ஞாபகம் வந்தவராக,

“ இந்திரா பாப்பாக்கு சாக்லேட் பாக்ஸ் இன்னும் கொடுக்கலைப் பாரு, கொண்டு வர்றியா?: என்றார்.

இந்திராக் கையிலிருந்த சாக்லேட் பாக்ஸைப் பார்த்த அனிக்கா உட்கார்ந்த இடத்திலேயே உற்சாகமாய் குதித்தாள்.

நாம இதை சாப்பிடுவோமா? என்று சின்னவர்களிடம் கேட்டவள் சாக்லேட் பாக்ஸை திறப்பதில் கவனமாயிருக்க பெரியவர்கள் பேச்சு நாட்டு நிலவரம் நோக்கி பழையபடி திரும்பியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ராபின் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து அவனுக்கு சாக்லேட் கொடுக்க வேண்டி இன்னும் மும்முரமாக பாக்ஸை திறப்பதில் அவள் கவனத்தைப் பதிக்க , அவளருகில் வந்தவனோ அவள் மடியில் ஏறி அவளுடைய கன்னத்தை பலமாய் கடித்து வைத்தான். தனக்கு சாக்லேட் தராமல் அவன் அப்பம்மா அனிக்காவிற்கு சாக்லேட் கொடுத்த கடுப்பில் இருந்தான் போலும். அனிக்காவின் அலறலைக் கேட்டு ஸ்தம்பித்தவர்கள் என்னச் சொல்வது என திகைக்க, ஜீவன் ராபினைத் தூக்கிக் கொண்டு முத்தம் வைத்தான்.

அண்ணன் மகனின் செயலில் , அனிக்காவை சீண்டும் விதமாக ஹா ஹாவென அவன் சிரித்து வைக்க மற்றவர்களும் அவன் சிரிப்பில் இணைந்துக் கொண்டனர்.

போடா ஜீவா என அவனை முறைத்தவள் ,

“இங்க பாரு ஹனி குட்டி அத்தைய ராபின் இப்படி கடிச்சு வச்சிருக்கான் பாரு” என்று அண்ணன் மகளிடம் புலம்ப அவளோ ஏற்கெனவே அனிக்கா மடியிலிருந்த சாக்லேட் பாக்ஸை எடுத்துக் கொண்டு போய் பிரபாவிடம் கொடுத்து அம்மா மடியில் நல்ல பிள்ளையாக அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்து மறுபடியும் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

“ஒரு சாக்லேட் பாக்ஸுக்காக என்னை ரெண்டு பேரும் சீட் பண்ணிட்டீங்கள்ள….உங்க கூட இனிமே விளையாட மாட்டேன் போங்க என்றவளை விடாமல் ஜீவன் சீண்டிக் கொண்டிருந்தான். தன்னை காமெடி பீஸாக்கிய பொடிசுகளை வெகு நேரம் முறைத்தாள் அவள்.

அவள் முகபாவங்களை வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தான் ரூபன், சின்னப் பிள்ளைங்க கூட உஷாராகிடுச்சுங்க, ஆனா இவ தான் இப்படி இருக்கிறா என்று எண்ணினான்..

என்னதான் சித்தப்பா கொஞ்சினாலும் சிரிது நேரத்தில் ராபின் அனிக்காவிடம் வந்துச் சேர கூடவே ஹனியும் சேர்ந்துக் கொள்ள ஒன்றுமெ நிகழாதது போல அவர்கள் மறுபடியும் விளையாட ஆரம்பித்தார்கள். இனிமையாக நிறைவுப் பெற்றது அவர்களது அன்றைய நாள்.

கிறிஸ்மஸ்ஸிற்கான தயாரிப்புக்கள் நவம்பரிலேயே ஆரம்பித்து விட்டிருந்தன. ராஜ் ஏற்கெனவே லீவு முடிந்து திரும்பச் சென்றிருந்தார், இனிமேல் பணி ஓய்வு எடுத்துவிட்டேதிரும்ப விரைவில் வருவதாக கூறியிருந்தார். இந்திரா கணவனின் வருகைக்காக அந்நாளைக்காக காத்திருந்தார்.

ஃபேக்டரி வொர்க்கர்களுக்கு கிறிஸ்மஸ்ஸில் பரிசுகள் கொடுத்தாலென்ன? இன்னும் என்னவெல்லாம் புதுமையாகச் செய்யலாம் என்று அனிக்கா பல்வேறுக் கருத்துக்கள் சொல்ல, அதுவரை தன் ஊழியர்களுக்கு லீவு மட்டுமே கொடுத்து வந்த ரூபனும் அவள் கருத்தை ஏற்றுக் கொண்டான்.

ஏற்றுமதியாளர்களுக்கான சந்திப்பு ஒன்று அவர்கள் பகுதியிலேயே ஏற்பாடு செய்யப் பட்டிருக்க, பல்வேறு பகுதிகளிலுமிருந்து எக்ஸ்போர்ட் செய்யும் ஃபேக்டரி உரிமையாளர்கள் கலந்துக் கொள்ளும் நிகழ்வாக அது இருந்தது. வருடா வருடம் தவறாமல் அதில் கலந்துக் கொள்ளும் ரூபன் , தன்னுடன் ஜீவனை வரும்படி அழைத்து இருந்தான்.

ஆனால், அன்று ஃபேக்டரியில் முக்கியமான ஆர்டர் ஒன்றின் வேலை நடைப் பெற்றுக் கொண்டிருக்க ஜீவன் வர மறுத்து விட்டான். அனிக்கா அவனுக்கு பதிலாக அவனுடன் வந்திருந்தாள். அவளுக்கு அந்த துறை மிகவும் சுவாரசியமாக தோன்றியது. மேலும் ஏற்றுமதியாளர்களின் சந்திக்கப் போகும் நிகழ்வு தமக்கு பற்பல விஷயங்கள் அறிந்துக் கொள்ள உதவும் வாய்ப்பாக அமையும் என்று எண்ணினாள் . தவறாமல் வீட்டில் போன் செய்து அன்னையிடம் அனுமதி கெட்கவும் அவள் மறக்கவில்லை.

முதன்முறையாக தன் மனம் கவர்ந்தவளுடன் தனியே வெளியேச் செல்லும் உணர்வில் தித்தித்திருந்தன ரூபனின் உணர்வுகள். வழி நெடுக வளவளவெண்றுப் பேசிக் கொண்டிருந்தவளை ரசித்துக் கொண்டே வந்தான். அதிலும் கூடுதல் போனஸாக 

"நாம் செல்லும் இந்த மீட்டிங்க் முடிந்ததும் தனக்கு ஷாப்பிங்க் செல்ல வேண்டியிருக்கிறது, என்னை அழைத்து செல்வீர்களா அத்தான்? என்று அவள் கேட்டதும் வானில் பறக்காத குறைதான். அவன் முகத்தில் பளீரென ஒரு வெளிச்சம் அன்றைக்கு முழுவதிலுமே பரவி இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.