(Reading time: 18 - 35 minutes)

09. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

புகழ், ஆயிஷா இருவரின் உடலையும் தாவித் தழுவிக் கொண்டது கடற்கரை காற்று. மிகவும் ரம்யமான சூழல் அது. அதை இன்னமும் அழகாய் காட்டவது போல, புகழின் அருகில் அவனது தேவதை.

எவ்வளவு அழகான மதிமுகம் இவளுக்கு? என்று எண்ணிக் கொண்டான் புகழ். ஆனால் அந்த மதிமுகத்தில் எந்தவொரு உணர்ச்சியையுமே அவனால் படித்திட முடியவில்லை. புன்னகைக்கிறாள் தான் , ஆனால் மகிழ்ச்சியாகவா இருக்கிறாள் ? என்ற கேள்வியொன்று அவன் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அந்த இரவின் குளிர் இருவரின் தேகத்தையும் துளைக்கத்தான் செய்தது. ஆனால் அவளோ இதற்கெல்லாம் பழகிப்போனவள் போல மிக இயல்பாய் இருந்தாள்.

அவள் தன்னை பார்த்த பார்ப்பவையும்,தன்னிடம் பேசிய விதமே புதிதாய் இருக்க இதுவரை அனுபவிக்காத பரவசத்தில் இருந்தான் புகழ். அதுவும் தன் மனதில் இருப்பதை சொல்லிடும்போது கொஞ்சமும் முகம் சுளிக்காமல், தன்னை தவிர்க்காமல் அவள் இருந்த விதம் அவனை இன்னும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது.. சுருக்கமா சொல்லுனும்னா, பாரதிராஜா சார் படத்துல வர்ற தேவதைகள் அவனையும் ஆயிஷாவையும் சுற்றிக் கொண்டு ஆடுவது போல இருந்தது அவனுக்கு..

ஆனால், அந்த தேவதைகளின் நர்த்தனத்திற்கு ஆயுட்காலம் மிகச் சில நொடிகள்தான் என்பது போல, அவள் கேள்வியொன்றை கேட்டு வைத்திருந்தாள்.

“ உன் பேரு என்ன?”!! அவளின் ஒரே கேள்வியின் அகமெனும் வானிலிருந்து உடனே இறங்கி வந்தான் புகழ்.

“ ஹான்..என்ன கேட்ட?” ஒருவேளை தன் காதில்தான் சரியாய் விழவில்லையோ என்ற நப்பாசையில் மீண்டும் கேட்டு வைத்தான் அவன். அவன் அதிர்ச்சியை உணர்ந்து கொண்டாள் ஆயிஷா. ஒருவேளை தன்னை பற்றி சொன்னால் இவன் எப்படி எடுத்து கொள்வானோ? என்ற கேள்வி எழுந்தது.நடந்தது போதுமென அயர்ந்த பாதங்கள் அறிவுருத்த கடல் அலைகள் பாதத்தில் முத்தமிடும் தூரத்தில் மணலில் அமர்ந்தாள் ஆயிஷா. அவளை தொடர்ந்து புகழும் கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்துகொண்டான். “ம்ம் கண்ணியமானவன்தான்!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

“ உன் பேரு என்னனு கேட்டேன்.?” அழுத்த திருத்தமாய் சொன்னாள் அவள்.

“ உ.. உனக்குத்தான் தெரியுமே ! தினமும் ஒரு பேரையா நான் மாத்திக்க போறேன்?” குழப்பம் நீங்காமல் கேட்டான் புகழ்.

“ ஹ்ம்ம்..உனக்கு என்னை பத்தி தெரியல.. அதான் நீ இப்படி பேசிட்டு இருக்க நீ” என்றவள் முழங்காலிட்டு முகத்தை மூடி கொண்டாள் ஆயிஷா.

“ அழப்போறியா?” .புகழின் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

“ ஐ மீன்… உன்னை பார்த்தாலே தெரியுது நீ ரொம்ப அழுதுருக்கன்னு அதான் கேட்குறேன்.. மறுபடியும் அழனுமா? டயர்ட்டா இல்லையா?”. அவன் கேலி செய்கிறானா அல்லது அதீத அன்பில் கேட்கிறானா புரியவில்லை அவளுக்கு.ஆனால் அவளுக்குமே அப்படி இருப்பது பிடிக்கவில்லை !

மிகவும் தைரியமான பெண் அவள். முடிவெடுப்பதில் மின்னல் வேகம் அவளுக்கு ! தவறுகளே செய்யாத வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்று கொள்கை கொள்ளாமல் வாழ்வில் நேர்ந்திடும் தவறுகளை சரி செய்யும் திறன் இருந்தாலே போதுமென நினைக்கும் சராசரி பெண் அவள்.

ஆழ்ந்த பெருமூச்செறிந்தாள்.பின் அவனைப் பார்த்து பேசத் தொடங்கினாள்.

“ உனக்கு நான் சொல்லுறது அதிர்ச்சியா இருக்கும்னு தெரியும். பட் கொஞ்சம் பொறுமையாய் இப்போ நான் பேசுறதை கேளு” என்று பீடிகை போட்டாள்.

“ம்ம்” என்று அவளை பார்வையால் ஊக்கினான் புகழ்.

“ இப்போ நான் கிளம்பி வந்தேன்ல, அது என் வீடே இல்லை. அந்த வீட்டில் இருக்குறவங்களை நான் இதற்கு முன்னாடி பார்த்ததே இல்லை. அண்ட் அவங்க என் பெயரை ஆயிஷான்னு சொன்னாங்க.. இல்லை ! என் பேரு சஹீபா.”

“வாட்?”

“பொறுமையா கேளுன்னு சொன்னேன்ல?”

“ சாரி.. சொல்லு”

“ இது என் ஊரே இல்லை.. கன்னியாகுமரில, இதே மாதிரி கடற்கரைக்கு பக்கத்தில இருந்த குக்கிராமத்தில் தான் என் வீடு இருந்துச்சு. என் அப்பா ஒரு மீனவர். கடல் எனக்கு இன்னொரு வீடுன்னு சொன்னேன்ல ? அதுக்கு இதுதான் காரணம்”

“..”

“ இந்த கடல்தான் எங்களின் வாழ்வாதாரம்.. சில நேரம் எமனும் கூட!”

“..”

“ நீ நியூஸ்ல எல்லாம் படிச்சிருப்பியே,கடல் கொந்தளிப்பு, திடீர் வெள்ளம், கடல் நீர் ஊருக்குள் புகுந்து நாசம்ன்னு…இதையெல்லாம் பார்த்து, சிலநேரம் பாதிக்கப்பட்டு வளர்ந்த பொண்ணுதான் நான். ஆனாலும் எங்களால் அந்த வாழ்க்கையை விட்டு வரமுடியல.. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதில் நான் பாதிக்கபடக்கூடாதுன்னு சிரமப்பட்டு தான் என் அப்பா என்னை படிக்க வெச்சார்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.