(Reading time: 18 - 35 minutes)

ந்தை சொன்ன கடைசி வசனத்தை அசைப்போட்டான் தமிழ். இந்த வாதத்திற்கு எல்லாம் காரணமாய் இருந்தவள் அந்த பெண்தான். அவளை மனதில் வைத்துக் கொண்டு அவன் அப்படி  பேசியிருந்தான். ஆனால் ஏன்? இதுதான் காதலா? தானே அறியாத போது, தன்னை ஈர்ப்பதுதான் காதலா?

யாழினி! என்னுடைய எதிர்துருவம் அவள்!

நான் பேசுறதுக்கே காசு கேப்பேன்.. அவ பேசுலன்னா பைத்தியம் ஆகிடுவா..

நான் எதையும் செய்யுற முன்னாடியே ஆயிரம் யோசிப்பேன்.. அவ யோசிக்காம எதையாச்சும் செஞ்சுட்டு ஆயிரம் சாரி கேட்பா..

நான் கோடு போட்டு வாழுவேன்.. அவ எதுக்கு கோடு போடணும்னு கேள்வி கேட்பா..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

மொத்ததுல அவ எனக்கு எதிராவே இருக்கா..” என்று சொல்லிக் கொண்டான் அவன். தமிழின் அறையில் உயிர்ப்பித்திருந்த வானொலி அந்த பாடல் வரியின் மூலம் தனது இருப்பை உறுதிபடுத்தியது.. மெல்லிசையாய் அவன் பக்கம் மிதந்து வந்த பாடல் வாரிகள் அவனது கவனத்தை கவர்ந்தன.

கவிதை போலே வாழும் என்னை

படிக்கும் கவிஞன் யாருமில்லை!” அவளே தன் முன் நின்று பாடுவது போல இருந்தது அவனுக்கு. (ரொம்ப முத்தி போச்சு பாஸ் உங்களுக்கு!)

“ ஆம், யாழினி ஒரு கவிதை.. அவ என்னைவிட வித்தியாசமா இருக்காளே தவிர அதை ஒரு குறைன்னு ஏன் என்னால சொல்ல முடியல? வாழ்க்கையை ரசிச்சு வாழுற பொண்ணு அவ.. அவ பக்கத்துல நான் இருந்தால் அது சரியா இருக்காது.. அவ சந்தோஷமா இருக்க மாட்டா,, நானே அவளை ஹர்ட் பண்ணிடுவேன்.. இன்னைக்கு கொஞ்சம் கடுமையா பேசும்போதே கண்கலங்கி வாடி போயிட்டா அவ.. வாழ்க்கை முழுக்க நான் அவளை அழ வைக்க முடியாது..” என்றவனுக்கு அதை சொல்லும்போதே மனம் வலித்தது.

அவளுக்காக தன்னை மாற்றிக் கொள்ள முடியாதா என்ற கேள்வி கூட எழுந்தது. ஏற்கனவே தூக்கம் வரமால் தவித்தவன், இப்போது இன்னும் நிம்மதியிழந்தவனாய் இருந்தான்.

இப்போது அவன் அறைக்குள் ப்ரவேசிப்பது மனோன்மணியின் முறையானது.

“கண்ணா..”

“அம்மா..”என்றவனின் குரலை வைத்தே அவன் மனதை உணர்ந்து கொண்டார் அவர். தன் முன் இருக்கும் மகன் ஒரு மருத்துவன் என்பதை மறந்திருந்தது அத்தாயின் உள்ளம். தமிழ் அவரின் கண்களுக்கு ஐந்து வயது குழந்தைபோலவே தெரிந்தான்.

அவனருகில் வந்தவர் தாய்மையுடன் அவனது கேசத்தை கோதிவிட்டார்.

“என் கண்ணாவுக்கு என்ன கவலை? என்ன யோசனையில் இருக்கப்பா? எல்லாம் சரி ஆகிடும்.. தூங்கு வா” என்றவர், அவனை படுக்க வைத்து தட்டிக் கொடுத்தார்..

“நான் என்ன சின்ன பையனாம்மா?”

“எனக்கும்தான் வயசாச்சு.,. அதுக்காக நான் உனக்கு பாட்டியாகிடுவேனா கண்ணா?” என்று இடக்காய் கேட்டார் மனோன்மணி. சட்டென விழிகளை அகல விரித்தான் தமிழ். இதை எப்படி நான் உணராமல் போனேன்? என்று தன்னையே கேட்டான். தனது சந்தேகத்தை வாய்விட்டே கேட்டான் அவன்.

“அம்மா”

“என்ன கண்ணா?”

“ நீங்க எப்பவுமே இப்படிதானாம்மா?”

“இப்படின்னா?”

“கலகலப்பா..எதையும் தூக்கி வெச்சு அலட்டிக்காமல் எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்குறீங்களே.. எப்போதுமே இப்படிதானா?”

“என் டிசைனே அப்படித்தான் கண்ணா!” என்று சிரித்தார் அவர்.

“ ஆனா அப்பா உங்களை மாதிரி இல்லையேம்மா.. பின்ன எப்படி?”

“எப்படி உங்க அப்பாவை சமாளிக்கிறேன்னு கேட்குறியா?” என்று அவனது கேள்வியை முடித்து வைத்தார் மனோன்மணி.

“யெஸ்”

“கண்ணா, எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படும்னு சொல்லுறது உண்மைதான். ஆனா எல்லா துருவங்களும் சேர்க்கப்படுறது இல்லை.. எனக்கும் உன் அப்பாவுக்கும் மலையளவு வேறுபாடுகள் இருக்கு.. அதனால் சண்டையும் வந்தது உண்டு.. ஆனால் எல்லாத்தையும் மீறி நாங்கள் எங்களுடைய வேறுப்பாட்டை மதிக்கிறோம்!”

“..”

“நான்தான் சரி..என்னை மாதிரி இல்லாததால் நீ தப்பு அப்படின்னு ஒரு எண்ணம் எங்களுக்குள் எழுந்தது இல்லை. அதையும் மீறி கணவன் மனைவி பந்தம் ரொம்ப வலுவானது தமிழ்.. வெளில இருந்து பார்க்கும்போது இது ரொம்ப கஷ்டமானது சுமையானதுன்னு தோணும்.. ஆனா நமக்குன்னு ஒரு உயிர் , நமக்குன்னு ஒரு இதயம் துடிக்கிதுன்னு உணர்ந்து வாழுற ஒவ்வொரு நாளும் இனிமையானது. அதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது!” என்று ரசனையாய் சொன்ன அன்னையை புன்னகையுடன் பார்த்தான் தமிழ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.