(Reading time: 18 - 35 minutes)

ஹீபாவும் பொய் கோபத்தை கைவிட்டுவிட்டு புன்னகைத்தாள். இப்போது புகழின் முகத்தில் தீவிரமான பாவமொன்று தெரிந்தது.

“சஹீ”

“ம்ம் என்ன?”

“ ஒரு விஷயம் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே?”

“அப்படி ப்ராமிஸ் எல்லாம் பண்ணா முடியாது. பட் முயற்சி பண்ணுறேன்.. என்ன?”

“நீ இப்போ இருக்குற வீட்டுக்கு முதலில் போகலாமே! அவங்ககிட்ட பேசினால் உன்னப்பத்தி தெரிஞ்சுக்க முடியும் .. இல்லையா?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“..”

“எனக்கு தெரிஞ்சதை வெச்சு சொல்லுறேன்! அவங்க உன் மேல உயிரையே வெச்சுருக்காங்க சஹீ.. உன் அப்பா அம்மாவுக்கு செல்ல பெண்ணாக வளர்ந்தவள் நீ.. உன்னால பெற்றோரோட மனச புரிஞ்சுக்க முடியும்னு நினைக்கிறேன்!”

“..”

“இன்னொரு உண்மையையும் சொல்லிடுறேன்.. நீ என்கூட பீச்ல இருக்கன்னு நான் அவங்களுக்கு மெசேஜ் பண்ணி சொல்லிட்டேன்..”

“??”

“உனக்கு கோபம் வரும்னு தெரியும்.. ஆனால் எனக்கு உன்கிட்ட உண்மையை மறைக்கனும்னு தோணல.. அதனாலத்தான் சொல்லிட்டேன்!” என்று விளக்கினான் புகழ். அவள் என்ன பதில் உரைக்க போகிறாள் என்ற எதிர்பார்ப்பு அவனது இரு நயனங்களிலும் தோன்றியது.

“ இவ்வளவு பிரச்சனைகளுக்கு  நடுவிலும், நான் உன்னை நம்பி உன்கிட்ட பேசினதுக்கு காரணம் என் உள்ளுணர்வுதான் புகழ். நீ நல்லவன்னு எனக்கு தோணிச்சு.. என்னுடைய யூகத்தை நீ மறுபடியும் உண்மையாக்கி இருக்க.. தேங்க்ஸ் ஃபார் தேட்..”

“..”

“ என் மனசுல இருக்குற ஒரே விஷயம் என் அம்மா அப்பாத்தான் புகழ். அவங்களை பார்க்குறவரை என்னால யாரோடும் நார்மலா பேச முடியாது.. நான் அவங்களுடைய பொண்ணு இல்லன்னு சொன்னப்போ, அவங்க முகத்துல பெரிய பரிதவிப்பு தெரிஞ்சது!”

“..”

“தீர்க்க முடியாத சோகம் தெரிஞ்சது .. அத என்னால சரி பண்ண முடியல .. முடியாமலும் போகலாம்.. அவங்ககிட்ட சண்டை போட முடியல புகழ். அதே நேரம் என்னுடைய உணர்வுகளை புரிஞ்சுக்க வேண்டிய நிதானம் அவங்க கிட்ட இல்ல! கொழந்தை கையில் இருக்குற பொம்மைய பிடுங்கினா அது என்ன பண்ணும் சொல்லு?”

“டக்குனு பிடிச்சு இழுக்கும்.. அழும்..”

“இவங்களும் அதேதான் பண்ணுறாங்க புகழ்…”

“அப்படி இருக்குறது தப்புன்னு சொல்லுறியா சஹீ?”

“சரி இல்லன்னு தான் சொல்லுறேன்பா!” என்றாள் சஹீபா.

“ உன் பாயிண்ட் எனக்கு புரியுது .. இன்னைகு நைட் மட்டும் பொறுத்துக்கோயேன்.. காலையிலே விடிஞ்சதுமே உன்னை நான் கூட்டிட்டு போறேன்.. என் மேல நம்பிக்கை  இருக்குதானே உனக்கு?” ஆழ்ந்து நோக்கி கேட்டான் புகழ். கொஞ்சமும் தயக்கமின்றி அவனது விழியோடு விழி கலந்தாள் சஹீபா.

“உன்மேல நம்பிக்கை இருக்குறதுனாலதான் உன்னோடு இருக்கேன் புகழ்.. ப்ளீஸ் உன்கூடவே இருக்கேனே.. எனக்கு வேற எங்கயும் சேவ்வா தோணல “ என்று உரைத்தாள் அவள்.

எழுந்து நின்றிருந்தான் புகழ். இதற்குமேலும் மறுத்து பேசிட முடியுமா அவனால்? தனது வலது கரத்தை நீட்டி அவள் முன் நீட்ட, நம்பிக்கையான கைப்பற்றுதலுடன் நிமிர்ந்தாள் சஹீபா. அவன் கையை விடுவதற்கு மனமில்லாமல் விடுத்தாள் சஹீபா.

புதிதான அவன்,

புதிராய் சிரிக்கின்றான்,

புன்னகையால் அரவணைக்கின்றான்,

புதியதொரு உலகை,

புத்துணர்ச்சியாய் காட்டுகிறான்..

நானே அவனது பிடித்தம் என்றால்,

பிடித்த கையை விடாமல் காத்திடுவானா?

அந்த கேள்வியை காலத்தின் கையில் விட்டுவிட்டு அவனுடன் இணைந்து நடந்தாள் சஹீபா.

தே நாள் நள்ளிரவில், தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் தமிழ். ஃபோனையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

“என்ன பொண்ணு இவ? கொஞ்சம் கூட பொறுப்பு வேணாமா? வீட்டுக்கு போயி சேர்ந்துட்டான்னு ஒரு வார்த்தை சொன்னாதான் என்னாவாம்?” என்று அவன் கேட்க, அவனது உள்மனமோ,

“உன் கௌரவத்தில் இருந்து இறங்கி வந்து நீயே ஒரு மெசேஜ் அனுப்பினால் என்னவாம்?” என்று பதிலுக்கு கேட்டது. பதில் சொல்ல முடியவில்லை அவனால்.

மீண்டும் மீண்டும் யாழினியே அவன் கண்முன் நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.