(Reading time: 18 - 35 minutes)

தென்றலாய் புன்னகைக்கிறாள்

அருவியாய் சிரிக்கிறாள்.. அவன் கொஞ்சம் கோபப்பட்டால்

பூவாய் வாடியும் போகிறாள்..

“டேய் தமிழ்!!” என்று அவனே அவனை அதட்டி கொள்ள அதே வசனத்தாய் வாய்மொழிந்திருந்தார் சுதாகர், அவனது தந்தை.

“ அப்பா.. நீங்க தூங்கலயா?”

“டேய், அதை நான் கேட்கனும்.. நீ தூங்கலயா?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் "அவளுக்கென்று ஒரு மனம்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“ தூக்கம் வரலப்பா..”

“மருந்தெல்லாம் சாப்பிட்டியா ? வலிக்கிதா?”

“மருந்து சாப்டேன்.. வலி இருக்குப்பா.. ஆனால் தாங்க முடிஞ்ச வலிதான்”என்றான் தமிழ்.

“அப்பறம் ஏன்டா நீ இன்னும் தூங்கல?”

“அதான் சொன்னேனே தூக்கம் வரலன்னு..”

“அதான் ஏன்னு கேட்குறேன்ல?”

“தெரியலப்பா” சலிப்பாக கூறினான் தமிழ்.

“ ஒவ்வொரு மனுஷனுக்கும் அவனுடைய உடம்பை பத்தி தெரியும்…தெரியனும் .. தெரிஞ்சுக்கனும்.. பசியோ காய்ச்சலோ, சோர்வோ எதுவாக இருந்தாலும் நம்மனால சரியா புரிஞ்சுக்க முடியும்..அதுவும் நான் டாக்டர் எனக்கு என்னையே நல்லா தெரியும்னு சொல்லுவியே, இப்போ என்னாச்சு?”

“..”

“ட்ரீட்மண்ட்க்கு எந்த ஹாஸ்பிட்டல் போன? உங்க ஹாஸ்பிட்டல் இல்லையோ?”

“இல்லப்பா வேற ஹாஸ்பிட்டல்தான்! ஏன் கேட்குறிங்க?”. பலமாய் யோசிக்கத் தொடங்கினார் சுதாகர். அதன்பின்,

“சோ யாரோ ஒரு பொண்ணுதான் உன் தூக்கம் போனதுக்கு காரணம் ..ரைட்டா?” என்றார். தமிழின் விழிகளில் மின்னல் வெட்டியது.. இருப்பினும் அதை ஒத்துக்கொள்ள மனமில்லை அவனுக்கு.

“ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லப்பா..”

“பொண்ணு டாக்டரா? இல்ல  நர்சா?”

“அப்பா..” என்று அழுத்தமாய் அழைத்தான் தமிழ்.

“இது பாரு தமிழ்.. நான் ஏற்கனவே சொன்னது சொன்னதுதான்.. இந்த வீட்டு மருமகள் கண்டிப்பா டாக்டர் அல்லது நர்ஸ் தான்! ஒரே ப்ரொபஷன்ல இருந்தால்தான் அவ உன்னை புரிஞ்சுப்பா” என்று வழக்கம் போல மகனிடம் சொல்லும் விஷயத்தை மீண்டும் கூறினார் சுதாகரன். பொதுவா அவர் அப்படி சொல்லும்போது சிரித்தபடி தோளை உலுக்கி கொள்வான் தமிழ். இதுவரை அவன் மனமெனும் கோட்டைக்குள் யாரும் ப்ரவேசித்தது இல்லை.. அவனுக்கு இன்னொரு பெண்ணின் இதயத்தை ஆட்சி செய்ய விரும்பியதில்லை.

அதனால், சுதாகரன் சொல்லும் கூற்றை சரியென்றும் தவறென்றும் அவன் விவாதித்தான். முதன்முறையாய்!!

“ கம் ஆன் அப்பா.. நீங்க கூட தான் பிசினஸ் பண்ணுறிங்க.. அம்மாவும் பிசினஸா பண்ணாங்க? டீச்சரா தானே இருந்தாங்க?”

“ரைட்டுதான் தமிழ்.. ஆனால் எனக்கு 9-5 வேலை.. அதுவும் நானே முதலாளி ..சோ எனக்குன்னு நிறைய டைம் இருந்தது.. என்னை புரிஞ்சுக்குறதும் என்னோடு வாழுறது உன் அம்மாவுக்கு கஷ்டமா இல்லை! ஆனா நீ டாக்டர்.. உன் வேலை எப்பவும் ஒரே மாதிரி இருக்காது!”

“நீங்க சொல்லுற ஸ்டேட்மண்ட்ல நிறைய அர்த்தம் வருதுப்பா.. அதுல முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா எனக்கு குடும்பத்தையும் வேலையையும் பேலண்ஸ் பண்ண தெரியலன்னு உங்களுக்கு தோணுது!”

“தமிழ்!!!”

“அதட்டாதீங்கப்பா.. யோசிச்சு பார்த்தால் உங்களுக்கே புரியும்.. நான் கல்யாணம் பண்ணிக்கிறது ஒரு அழகான வாழ்க்கையை வாழுறதுக்கு தான்.. இந்த வீட்டில் இன்னொரு எம் பி பி எஸ் கேண்டிடேட் ஐ சேர்க்குறதுக்கு இல்லை.. எனிவே, இப்போ இந்த பேச்சுக்கு எந்த அவசியமும் இல்லை.. என்னமோ சொல்லனும்னு தோனிச்சுன்னு சொன்னேன்.. இதையெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்க வேணாம்!” என்று ஆதரவாய் தந்தையின் கரத்தை அழுத்தினான் தமிழ். மகனின் ஸ்பரிசத்தில் ஆவேசம் தணிந்தார் சுதாகரன்.

“இது பாரு தமிழ், நீ எங்களுக்கு ஒரே பையன் .. உன் சந்தோஷத்தை மீறி எதையும் நாங்க செய்ய போறது இல்லை.. உன் வாழ்க்கையை சரியாக வடிவமைக்க வேண்டிய பொறுப்பு உன் கையில இருக்கு.. சோ நீதான் எப்பவும் விழிப்பா இருக்கனும்.. உன் குணத்துக்கும் வாழ்வியலுக்கும் எதிர்மாறான ஒரு பொண்ணை நீ விரும்பாதவரை உன் வாழ்க்கை நல்லா இருக்கும்டா” என்றபடி எழுந்தார் அவர். இரண்டடி வைத்து அவனைவிட்டு நகர்ந்தவர் என்ன நினைத்தாரோ, மீண்டும் திரும்பி வந்து அவன் தோளை தட்டிக் கொடுத்தார். (இவ்வளவு பாசக்கார அப்பா இப்போ ருத்ரமூர்த்தியா ஆகிட்டாரே! டோண்ட வர்ரி அங்கிள் சீக்கிரமே உங்களை சேர்த்து வைக்கிறேன்!)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.