(Reading time: 18 - 35 minutes)

ப்போ அப்பாவும் உங்களை மாதிரிதானே ஃபீல் பண்ணி இருப்பார்ம்மா? அப்பறம் ஏன் என்கிட்ட அந்த மாதிரி சொன்னார்?”

“எந்தமாதிரி?”. சற்றுமுன் தனது தந்தையிடம் பேசியதை அன்னையிடம் பகிர்ந்து கொண்டான் தமிழ்.

“ஹ்ம்ம் .. உன் அப்பாவுக்கு உன் மேல ஓவர் பாசம் தமிழ்.. அதான் உளருறார்.. நீ இதை மனசுல போட்டு யோசிச்சுகிட்டுத்தான் தூங்காமல் இருக்கீயா?” என வினவினார் அவர்.

“ம்ம்..”

“எல்லாத்துக்கும் மனசுதான் காரணம் கண்ணா.. மனசு சொல்லுறதை கேளு..மனசு எப்பவுமே சரியாகத்தான் பேசும்.. ஒருவேளை அது தவறாக பேசினாலும், உன்னால் எதையும் சமாளிக்க முடியும்னு நம்பு..”

“..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ தமிழ்.. வாழ்க்கை ஒரு டிசைன் இல்ல.. இதுதான் வாழ்க்கைன்னு ஒரு டிசைன் இருந்திருந்தால், இந்நேரம் எல்லா ஸ்கூல்லயும் அதையே பாடமா நடத்தி இருப்பாங்களே.. எவ்வளவு கவனமாக இருந்தாலும், வாழ்க்கை நம்மை அப்பப்போ தள்ளிவிடும்” என்று அவர் சொல்லவும் தனது காலை பார்த்தான் தமிழ். அவனது பார்வையைத் தொடர்ந்தவர்,

“டேய்.. இந்த தள்ளி விடுறது இல்லை!” என்று சிரித்தார்..

“ம்ம்ம் எனக்கு புரியுதும்மா” என்றான் தமிழும் புன்னகையுடன். அவன் நெற்றியில் முத்தமிட்டார் மனோன்மணி.

“நீ நல்ல பையன் கண்ணா.. உன் வாழ்க்கையும் நல்லா இருக்கும்.. எதை பத்தியும் யோசிக்காமல் தூங்கு!” என்றவர் அவன் உறங்கும்வரை தட்டிக் கொடுத்தபடி பேசிக்கொண்டு இருந்தார். அன்னையின் மடியில் சரணடைந்தவன் தற்காலிகமாய் யாழினியின் நினைவுகளில் இருந்து விடுபட்டான்.. (எல்லாம் சில மணி நேரங்கள் தான்! அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்டுருவேனா தமிழ்? )

ட்ரிங்.. ட்ரிங்.. ட்ரிங்.. (என்னாச்சுன்னு அடுத்த எபிசோட்ல சொல்லுறேன்)

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.