ட்ரைனிங் முடிய இன்னும் ஒரு வாரமே இருந்தது. ராணுவ வீரர்கள் என்பதால் இவர்களுக்கு முன்பதிவு செய்வதில் சலுகைகள் உண்டு. எனவே எல்லோரும் அவரவர் சொந்த ஊருக்கு டிக்கெட் எடுத்து வைத்தனர்.
அந்த வாரம் தங்கள் வீட்டிற்கு பேசிய சுபத்ரா, தான் வருவதை சொல்ல அவள் அம்மா, அப்பா, வருண், மகிமா அனைவருக்கும் மிகுந்த சந்தோசம்.
இந்த நேரத்தில் அங்கிருந்த அவர்களின் batch எல்லோரும் சேர்ந்து farewell பார்ட்டி மாதிரி ஏற்பாடு செய்து இருந்தனர். முழுக்க முழுக்க அந்த batch மட்டுமே என்பதால், அவர்கள் சீனியர்களுக்கு தெரியாமல் surprise ஆக வைத்து இருந்தனர்.
அந்த வெள்ளிகிழமை அன்று காலை வழக்கம் போல் பயிற்சி முடித்த பின் , ட்ரைனிங் டாப் வந்தவர்களுக்கு மெடல் வழங்கப்பட்டது. பிரிகடியர் அனைவருக்கும் வாழ்த்து கூறி விட்டு , அவரவர்களின் போஸ்டிங் ஆர்டர் வீட்டிற்கு வந்து சேரும் என்று தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சி முடிந்த பின், trainee சார்பாக மேடை ஏறிய சுபத்ரா, எல்லோருக்கும் நன்றி தெரிவித்து விட்டு, அன்று மாலை ஏற்பாடு செய்து இருக்கும் பார்ட்டிக்கு அனுமதி கேட்டு, பின் அழைப்பு விடுத்தாள்.
பிரிகடியர் சரி எனவும், எல்லோரும் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தார்கள். அன்றைய பார்ட்டியில் வழக்கம் போல் ஆட்டம், பாட்டு என்று அமர்க்களப்பட்டது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
கடைசியாக சுபத்ராவின் பேச்சு ஆங்கிலத்தில் தான் ,
“ஹாய் friends, எஸ் இனிமேல் friends தான். இத்தனை நாள் நாம எல்லோரும் trainee யா இருந்தோம். இனிமேல் நாமும் இந்திய ராணுவத்தில் ஒரு பகுதியா பணியாற்ற போறோம். சோ எல்லோருமே friends. இந்த பார்ட்டி நாம ட்ரைனிங் முடிச்சதுக்கு மட்டும் இல்லை. நம்மள ஒரு soldier ஆ உருவாக்கின நம்ம trainerக்கும் சேர்த்துதான். அவங்களோட முழு கவனமும் நம்ம பயிற்சியில் வைத்து , தேவையான இடத்தில கண்டிப்பு, தண்டனை எல்லாம் கொடுத்து இன்னிக்கு ஒரு soldier ஆ உருவாக்கி இருக்காங்க.. அவங்களுக்கு ஒரு தேங்க்ஸ் .. ஆண்களால் மட்டும் தான் முடியுமா.. பெண்களும் ராணுவத்தில் சேருவோம் என்ற ஒரு மனப்பான்மையில் தான் நம்மில் நிறைய பேர் இங்கே சேர்ந்து இருக்கிறோம். நம்மால் முடியுமா, நாம் எப்படி இதை face பண்ண போகிறோம் என்ற கேள்விகள் நமக்குள் இருந்து இருக்கிறது. ஆனால் இங்கே வந்த இத்தனை நாட்களில் அந்த மாதிரி எந்த வித்தியாசமும் நமக்கு தெரியல. அதோட சில பிரக்டிகல் difficulties பெண்களுக்கு வரும்போது அவங்களோட கஷ்டங்கள் புரிந்து, பொறுமையா guide பண்ணின எல்லாருக்கும் நன்றிகள். எங்களாலும் முடியும்ன்னு தன்னம்பிக்கை கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்.
மேலும் இங்கே தங்கி இருக்கிற ஆர்மி ஆபீசர்ஸ் குடும்பங்களும் உங்களில் ஒருவரா எங்களை நினைச்சு முக்கியமான நாட்களில் எங்க குடும்பங்கள மிஸ் பண்ணும் நேரங்களில் துணையா இருந்து எங்களை சந்தோஷபடுத்தி இருக்கீங்க .. உங்களுக்கும் தேங்க்ஸ்..
நாம எல்லோரும் ஒரே regiment லே பணியாற்றுவோமா என்று தெரியாது. ஆனால் இந்த batch என்று சொல்லும்போது ஒரு சந்தோஷம் மனசில் தோணும். உங்க எல்லோர் கூடவும் இருந்தது மறக்க முடியாத நினைவுகள்... தேங்க்ஸ்..
என்னடா பார்ட்டிக்கு கூப்பிட்டுட்டு இப்படி vote of தேங்க்ஸ் சொல்லிட்டு இருக்காளேன்னு திட்டாதீங்க மக்களே.. சும்மாவே வாயாடும் நான், இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்ண முடியுமா.. அதுதான் ஏதோ நமக்கு தெரிஞ்ச நாலு நல்ல விஷயத்தை உங்களுக்கு சொல்லலாமேன்னு நினைச்சேன்.. நாலு விஷயம் தெரியும்னு சொன்னவுடனே என்னை நாயகன் வேலு நாயக்கர்க்கு cousinநு நினைக்காதீங்க. நான் இன்னும் களத்தூர் கண்ணம்மா கமல்தான். நான் சொன்னது புரியாதவங்களுக்கு இதோ அதோட CD போட போறேன் வித் சப் டைட்டில் ஓட.. பார்த்துட்டு என்னை துரத்தாதீங்க... போய் பார்ட்டிய என்ஜாய் பண்ணுங்க.. இதோட நான் அப்பீட் ஆகுறேன்... வர்ட்டா”
என்றபடி இறங்க, எல்லோரும் அவளை துரத்தினார்கள்.
அவளின் பேச்சை கேட்டு அர்ஜுன், ராகுல் இருவரும் மனம் விட்டு சிரித்தார்கள். இவர்களும் இதை மாதிரி நிறைய பார்ட்டிகள் பார்த்து இருக்கிறர்கள் என்றாலும் எல்லாருமே மிலிடரி discipline என்ற விஷயத்தை மாற்றாமல் தான் கொடுத்து இருக்கிறர்கள். அதிலும் சந்தோஷம் இருக்கும் என்றாலும் இந்த அளவிற்கு முழு சந்தோஷம் இருந்தது இல்லை. காலேஜ் farewell பார்ட்டி போல் இருந்தது.
ஆட்டம் எல்லாம் முடித்து விட்டு சாப்பிட போகும்போது அர்ஜுன் சுபத்ரா அருகில் சென்று
“என்ன சுபத்ரா ... இன்னிக்கு நீ பேசினது எல்லாம் யார் எழுதி கொடுத்தா? கூகுள் கடவுளா?“ என்று வம்பிழுக்க
சுறாவோ ரோஷமாக “கேப்டன் ஜி .. எல்லாம் என்னோட சொந்த வார்த்தைகள் ஆக்கும். நானே மூளைய கசக்கி பேசினேன்.. “
“அதுதான் சுறா .. கேட்டேன் .. உனக்குதான் மூளையே கிடையாதே.. எப்படி இவ்ளோ அறிவா பேசினே ?”
“ஜி.. “ என்று சிணுங்கினாள்.