“சரி .. சரி .. ஊருக்கு கிளம்பியாச்சா ..? உங்க அம்மா, அப்பாவ பார்க்க போறே.. ரொம்ப ஹாப்பியா இருக்கியா..?”
“எஸ் பாஸ்.. எல்லாத்தையும் விட எனக்கு மிக பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா.. இந்த காஞ்ச ரொட்டிலேர்ந்து விடுதலை. விடுதலை.. “
“அதுதானே பார்த்தேன்.. என்னடா இன்னும் வரலையேன்னு.. சரியான சாப்பாட்டு ராமி ஆச்சே..”
“போதும் கேப்டன்.. ரொம்ப ஓட்டாதீங்க... “
“அது எல்லாம் நீதானே குத்தகைக்கு எடுத்து இருக்க.. “
“கேப்டன்.. நாங்க எல்லாம் கிளம்பிடுவோம்.. நீங்க இங்கேதானே இருப்பீங்க.. நீங்க எங்கள காண்டக்ட் பண்ணுவீங்களா ? இல்லை உங்களுக்கு லெட்டர் மாதிரி எதுவும் அனுப்பலாமா..?“
“இல்லைமா.. நானே உங்ககிட்ட சொல்லனும்னு நினைச்சேன்.. எனக்கும் , ராகுல்க்கும் promotion வந்துருக்கு .. ரெண்டு பேரும் காஷ்மீர் regiment போக போறோம்.. சீப் கமாண்டோ “
“வாவ்.. congrats கேப்டன்.. ரொம்ப சந்தோஷமான விஷயம்” என்றவள் பின் சற்று யோசனையோடு “அங்கே எல்லாம் ஹை ரிஸ்க் ஏரியா இல்லையா.. ? “ என்று வினவினாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“ஆமாம்.. ஹை ரிஸ்க் ஏரியா தான்.. அதோட அங்கே communication செக்யூரிட்டி ரொம்ப அதிகமா இருக்கும். தேவை இல்லாம யார்கிட்டயும் நாங்க தொடர்பு வச்சுக்க கூடாது. ”
“ ஒஹ்.. அப்போ நாம திரும்ப எப்போ மீட் பண்ணலாம் கேப்டன் “
மனதினுள் சந்தோஷபட்டலும் வெளியில் எதையும் காண்பிக்காமல் “ஏன் சுபத்ரா?” என்று மட்டும் கேட்டான்..
“அது.. உங்கள என்னோட higher ஆபீசர் என்பதை விட நல்ல friend ஆ தான் பார்க்கிறேன்.. அதோட உங்க கல்யாணம் அப்போ வந்து உங்க வருங்கால மனைவி கிட்ட நல்ல போட்டு கொடுக்கலாம்னு நினைச்சேன்.. இப்போ உங்கள காண்டக்ட் பண்றது கஷ்டம் போலவே..”
“கவலை படாதே.. உன் மெயில் id மட்டும் கொடு.. எனக்கு கல்யாணம்னா கண்டிப்பா அது நீ இல்லாம நடக்காது .. அதனாலே நீ வந்து என்ன செய்யணுமோ செஞ்சிக்கோ “ என்று பொடி வைத்து பேசினான் அர்ஜுன்.
சுராவிற்கு அது எல்லாம் புரியவில்லை ..
“சூப்பர் ஜி.. கல்யாண பத்திரிகைய ஸ்கேன் பண்ணி அனுப்பி விடுங்க.. நான் எங்கே இருந்தாலும் வந்து கலக்கிடுறேன்..” என்றாள்.
அவளின் ஆர்வம் பார்த்து சிரித்தவன் , வேறு ஒன்றும் சொல்ல வில்லை.
மறுநாள் எல்லோரும் அவரவர் சொந்த ஊருக்கு கிளம்பினர். முதல் நாள் பார்ட்டி முடிந்ததிலிருந்து நிஷா அதிகம் பேசாமல் ஏதோ யோசனையிலே இருந்தாள்.
சுராவும் முதலில் கவனிக்கவில்லை. ட்ரைன் ஏறிய பின்தான் கவனித்தாள். இதற்கு இடையில் ஸ்டேஷன் சென்ற போது அங்கே ராகுல், அர்ஜுன் இருவரும் வந்ததை பார்த்து அவர்களிடம் பேச சென்றாள்.
“கேப்டன் எங்கள வழியனுப்ப வந்தீங்களா? ரொம்ப தேங்க்ஸ் கேப்டன்..”
“ஆஹா.. நினைப்புதான்.. நாங்களும் லீவ் லே போறோம் சுபத்ரா.. இந்த லீவ் முடிஞ்சவுடன் நாங்க நேரா காஷ்மீர் தான் போக போறோம். சோ.. வீட்டில் எல்லோர் கூடவும் கொஞ்ச நாள் ஸ்பென்ட் பண்ண போறோம்..”
தன் மூக்கின் நேராக விரலை நீட்டி “இந்த அவமானம் உனக்கு தேவையா சுறா?” என்று தன்னைத்தானே கேலி செய்து பேசியவள்
“இதுக்கு எல்லாம் இந்த சுறா கவலைப்படமாட்டா.. சுராவின் சேவை ..மக்களுக்கு தேவை.. “ என்று டயலாக் பேசினாள்..
“ஜி .. என்னதான் இருந்தாலும் என்னை மாதிரி ஒரு கிரீன் sand ஆ நீங்க கலாயிசுருக்க கூடாது.. மீ பாவம். “
“யாரு நீ? நீ செய்யற சேவையால மக்கள் தான் பாவம் மா. ஏதோ இந்த ஒரு வருஷமா உன்னை துரத்தி விட்டு உங்க ஏரியா வாசிகள் எல்லாம் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்களாம். இப்போ நீ வரேன்னு சொன்னவுடனே .. நிறைய பேர் வீடு மாறி போயிட்டு இருக்கங்களாம் .”
“ச்சே.. இந்த விஷயம் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா.. ?” என்று வளவளத்தவள்,
“நீங்க எந்த கோச் சார்.. ?”
“நாங்க ஜெனரல் compartment தான் மா.. நீங்க .. ?”
“நாங்க லேடீஸ் compartment சார்..”
“ஒகே டேக் கேர்.. இறங்கும்போது பார்க்கலாம்..”
அவர்களிடம் வம்பு வளர்த்து விட்டு வந்த பிறகு தான் நிஷாவின் அமைதியை கவனித்தாள். அவளிடம் என்னவென்று கேட்க , முதலில் கொஞ்ச நேரம் சுறா பேசியதையே கவனிக்காதவள், அவள் பிடித்து உலுக்கவும்
“என்ன சுபத்ரா ?”
“அது சரி.. நீ எந்த உலகத்துலே இருக்கே.. ? நான் அப்போ பிடிச்சு உன் பேர ஏலம் விட்டுட்டு இருக்கேன்.. நீ திரும்பியே பார்க்கல”
“சாரி டா.. நான் கவனிக்கல..”