(Reading time: 10 - 20 minutes)

13. அதில் நாயகன் பேர் எழுது - அன்னா ஸ்வீட்டி

Athil nayagan per ezhuthu

வளது முகத்தைப் பார்த்தபடியே செயினை அணிவித்த விவனது முகம் மலர்ந்திருந்தது…. காரணமில்லாமல் இல்லை….அவனையே முகமுகமாய் பார்த்திருந்த அவனது மனைவியின் முகத்தில் அத்தனை பூரிப்பும் நிறைவும்…. ஒரு புன்னகை  கூட அவள் முகத்தில் இல்லை என்றாலும் இளகி இருந்தது அவளது முகம்…. கனிந்திருந்தது காதலும் பெண்மையும்…

திருமண மேடையில் அவளுக்கு தாலி அணிவித்த போது அவன் அவளை நேருக்கு நேராய் பார்க்கவே இல்லை… என்ன இருந்தாலும் அவள் முகத்தில் வேதனை சாயலும் வெறுப்பின் அறிகுறியும் இருக்கும் என்ற நினைத்திருந்த அவன் அதைப் பார்க்க மனமற்று அவள் பார்வையை தவிர்த்திருந்தான்….

இப்போது இப்படி அவளைப் பார்க்க அவனுக்குள் நிறைவின் அலைகள்….

அடுத்தும் மிசர்ஸ். ஆதிரன் ரியாவுக்கு கொடுக்கவென கொண்டு வந்திருந்த பூசரத்தை இவன் கையில் கொடுத்து இவன் மனைவிக்கு வைத்து விட சொல்ல….

ஒன்றுமே சொல்லாமல் திரும்பி நின்று தன் தலையை காண்பித்தாள் இவன் மனைவி….

சின்ன ரசனையுடன் வெகு சிரத்தையாய் அதை அவளுக்கு வைத்துவிட்டான் அவன்…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அதே நேரம் ரியாவோ ஏதோ மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்…. லாஜிக் இல்லாத மேஜிக் ஃபியரில் இதெற்கெல்லாம் தலையாட்டியவள்தான் அவள்….

ஆனால் அவன் இவள் பார்வையை தாங்கியபடி தாலி அணிவித்ததில் முதலில் அவளுக்கு பிறந்தது உரிமை உணர்வே…. அவன் இவளை முழுமனதாய் ஏற்பதாய் ஒரு நிறைவு….எங்கோ அவளது உணர்வு எல்லைக்குள் அவன் நெருங்கிவிட்டதாய் ஒரு புரிதல்….

அடுத்தும்  ஹேர்பின்னுக்கும் அது குத்தும் இவளது பின்னல் முடிக்கும்  வலித்துவிடக்கூடாதென அவன் பூப்போல பூச்சூடிய விதத்தில் ஒரு ஏகாந்த நிலை…

அதில் இது போதாதென அந்த ஆதிரன் “இப்ப இவன் கையப் பிடிமா நீ” என்றார்….

எதற்கு சொல்கிறார் என புரியாமல் எதோ காரணம் போலும்…இல்லனா இப்டி எதுவும் முறை போல இவங்க பக்கம் என ஒரு எண்ணத்தில்….இவள் மறுக்காமல் அவன் கையைப் பற்ற….”செயின் திரும்பி வர்ற வரைக்கும் இந்த கைய விட்டுடாதமா…” என அவர் வாய்விட்டு சிரிக்க…

சிறு வெட்கம் வந்தாலும்….அடுத்து அவனது கையைவிடவும் எதோ தடுக்க…. பிடின்னு சொன்னவர் கேலியா சொன்னாரா இல்ல சீரியஸா சொன்னாரான்னு தெரியலையே….

ஆக அவனது கையை பிடித்தபடி அங்கிருந்து கிளம்பினாள்.

ஆனால் அவர்களது காரை அடையவும்….தனது மணிக்கட்டு பகுதியை பற்றியிருந்த இவளது கையை மிக மெல்ல….மிக மிக இயல்பாய் அவன் பிரித்து எடுத்துவிட்டு….வழி அனுப்ப வந்திருந்த ஆதிரன் தம்பதியரைப் பார்த்து கை கூப்பியபோது….

சரக்கென உருவ குத்தியது ஒரு உணர்வுக் கத்தி இவளது இதயத்தில்….மளமளவென சரிந்து விழுந்தது அவள் சஞ்சரித்து வந்த மாயலோகம்…

தெற்கத்திய முறைப்படி விடை பெறும் போது கை கூப்பவென அவன் இவள் பிடியை விலக்கி இருக்கலாம் என அறிவு சொல்லிக் கொண்டாலும்…. சட்டென தோன்றும் உணர்வு வேறாக இருக்கிறது….

‘அவர்கள் முன்பாக மட்டுமே ஒரு அன்யோன்ய தம்பதியாக தங்களை காண்பித்துக் கொள்ள அவன் நினைக்கிறான்..’

காரில் கிளம்பியபின்பும் அவள் மனம் அதில்தான் அடித்துக் கொண்டிருந்தது….

இவள்தான் அவனை மாத்தி புரிந்து கொண்டதோ…? சொசைட்டியோட கொத்தும் நாக்குகளிடம் இருந்து பிறக்க இருக்கும் குழந்தையை காப்பாத்த மட்டுமே இந்த கல்யாணம் என அவன் சொல்லத்தானே செய்தான்…

கல்யாணத்தப்ப கூட இவள் முகம் பார்த்து அவன் எதுவும் செய்யலையே…

ஏன் அதுக்கு முன்ன ஏழு நாளும் கூட இவளப் பார்க்க வரலையே அவன்…?

தங்கச்சி வீட்டுக்காக மேரேஜ்னு சொன்னானே…!!

ஒரு வேள குழந்தைய காட்டி இவ அவன மிரட்டினா கண்மணி லைஃப் அஃபெக்ட் ஆகும்னு அவன் நினச்சிருப்பானா இருக்கும்…

பர்ஸ்ட் நைட்ல இவளா போய் அவன் மேல விழுந்தப்ப கூட விலகித்தானே போனான் அவன்…?

மயக்க மருந்து கொடுத்து குழந்தைய தந்தவன் செய்ற வேலையா அது?

அவ்வளவுதான் குத்துப்பட்டுப் போனது இவளது பெண்மை……

அப்டின்னா இவ குழந்தை விவனோடது இல்ல…

இவ மேலயும் அவனுக்கு வேற எந்த நோக்கமும் இல்ல….

இப்படி நினைக்க நினைக்க சுருண்டு போனாள் அவள்…

அவன் மனசில என் மேல என்ன மரியாதை இருக்கும்…????

எதோ ஒரு குழந்தய காட்டி அவன மிரட்டி கல்யாணம் செய்துட்டதானே  அவன் நினைப்பான்…

மூச்சடைத்துப் போனது அவளுக்கு…. அடுத்து எதையும் நினைக்க முடியாமல் அப்படியே போய் அவளது அறை படுக்கையில் விழுந்தாள்..

அழுகை வெடித்துக் கொண்டு வந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.