(Reading time: 10 - 20 minutes)

விவனோ அதுவரைக்கும் பூரித்திருந்த ரியா முகம் காரில் ஏறவும் விழுந்து போனதை கண்டவன்…சரி வழக்கம் போல ஒரு சாண் என் பக்கத்துல வர்றதும் அடுத்து ஒரு அடி சறுக்கி விலகிப் போறதும் போல…இப்பவும் அவ தன்னோட கூட்டுக்குள்ள போய்ட்டா…. என நினைத்துக் கொண்டான்….

அதில் அதே நேரம்….அவன் மொபைல் சிணுங்க…

அழைப்பை ஏற்ற அவன் என்ன பேசினான் எனக் கூடா கவனிக்காமல் மனதுக்குள் சிதறிக் கிடந்த ரியா

“ரியு..” என அவன் அழித்து எதையோ சொல்ல முயன்றதையும் கவனிக்காமல்…..காரை அப்போதுதான் அவன் வீட்டில் நிறுத்தி இருக்க….வேக வேகமாக இறங்கி அவளது அறைக்குள் போய் கதவை பூட்டிக் கொண்டே படுக்கையில் சென்று விழுந்தாள்…

அறை வாசலில் சற்று நேரம் நின்று பார்த்த விவன் அவளிடம் சொல்லாமலே எங்கோ கிளம்பிச் சென்றுவிட்டான்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

ரியாவுக்கு அடுத்து விழிப்பு வந்தது எதோ சடீர் படீர் என வெடிக்கும் சத்தத்தில்தான்…எழும்பி உட்கார்ந்தவளுக்கு மெல்ல புரிகின்றது இவள் அதுவரை தூங்கி இருக்கிறாள் என….ஃஸ்ட்ரெஸ் அதிகமாகுறப்ப அதிலிருந்து தப்பிக்க தூங்கிடுறாதானே…

காதில் விழும் ஊய்…ஊய்…என்ற சத்தம் காற்றினுடையது என புரியும் போதுதான்…புயல் எச்சரிக்கை நியாபகம் வருகிறது…

கூடவே வருகிறது அவளது தாலி மற்றும் அதில் பார்த்த ரத்தம்…

அவ்வளவுதான் ஒரு கை அதாக தாலியைப் பற்ற…அடுத்து வேக வேகமாக விவனை தேடினாள் அவள்…

என்ன தேடி என்ன…வீட்ல இருந்தாதானே பார்வையில விழுவான்…

வீட்டு வாசலுக்கு வந்தால் வெளியே மழை வானம் பிளந்ததுபோல் கொட்டிக் கொண்டிருக்க….

சடீர் படீர் சவ்ண்டிற்கு காரணம் என்ன என அறிவித்தபடி முறிந்த மரங்கள் விழுந்து கிடக்க….

ஒற்றை நொடியில் புயலின் கோரம் உச்சத்தில் புரிந்தது…

போர்டிகோவில் விவன் கார் இல்லாமல் “ஐயோ இந்த நேரத்துல வெளியில போயிருக்கான்…” என அடுத்த புரிதல் கதற சொன்னது…

இவளைப் பார்க்கவும் வாசலை ஒட்டி போர்டிகோவில் அமர்ந்திருந்த செக்யூரிட்டி….

“சார் வந்துடுவாருமா.. பயப்படாதீங்க….குழந்தைக்கு  ஹாஸ்பிட்டல் போகனும்னதும் போகத்தான வேண்டி இருக்கு…” என ஆறுதலாக ஏதோ சொன்னார்.

என்ன குழந்தை? என்ன ஹாஃஸ்பிட்டல்? எப்ப போனார்? என எதையெல்லாமோ கேட்க மனம் பதறிக் கொண்டு வந்தாலும்….கேட்க முடியுமா என்ன?

வீட்டு செக்யூரிட்டியிடம் போய் தன் கணவனை பற்றிக் கேட்டால் எப்படி இருக்குமாம்?

அந்த செக்யூரிட்டி விவனைப் பத்தி என்ன நினைப்பார்? இவளப் பத்தியும்தான் என்ன நினைப்பார்…? அதஓடு அவரிடம் போய் இவள் பயத்தை காண்பிப்பதா?

ஆக முடிந்தவரை முகத்தை இயல்பாக்கி..”ஆமா அவங்க இந்த காத்து கொஞ்சம் அடங்கவும் வந்துடுவாங்க…நீங்க சேஃபா இருங்க….வேணும்னா உள்ள வந்து உட்காருங்க” என வீட்டு எஜமானியாய் …விவனது மனைவியாய்…எதையோ சொல்லி வைத்தாள்…

உள்ளுக்குள்ளோ இன்னும் துள்ளி ஆடுகிறது பயம்…

“இல்லமா இங்க ஒன்னும் ப்ராப்ளம் இல்ல…ஆஃபீஸ்ல நம்ம ராஜன் சார் இருக்கார்….உங்களுக்கு எதுவும் வேணும்னா உடனே செய்து கொடுக்க சொல்லிட்டு போய் இருக்கார் சார்….எதுவும் வேணுமாமா? ராஜன் சார கூப்டவா…?” செக்யூரிட்டி கேட்க..

வெட்டிங் அப்ப இந்த ராஜனை பார்த்திருக்கிறாள் இவள்…விவனோட பி ஏ…. அவனோட ஆல் இன் ஆல் ஆள்… ஆக இவங்க ரெண்டு பேர்ட்டயும் விஷயம் சொல்லி, இவளுக்காக இங்க வச்சுட்டு போன விவனுக்கு இவளுக்கு விஷயத்தை சொல்ல கூட முடியல…. அதாவது பிடிக்கல…அப்படின்னா என்ன அர்த்தம் ….?

என ஏறிக் கொண்டு வருகிறது…. அவன் அம்மணி ரூம் வாசல்ல காத்து கிடந்தது எல்லாம் பொண்ணுக்கு தெரியாதே…

இவள விவன் என்னதா நினைக்கிறான்?

வீட்டு செக்யூரிட்டியவிட கூட இவளுக்கு அவன் மனசுல ரொம்ப தூரமாதான் இடம்…

அதாவது இவ கொஞ்சம் முன்னால புரிஞ்சுகிட்டதுதான் 100% சரி…

கண்டிப்பா விவனுக்கு இவள பிடிக்கல…..அவன் இவள மதிக்கவும் இல்ல…. இந்த மேரேஜ் கண்டிப்பா சொசைட்டிகான டிராமா..வேஷம்….

குற்ற உணர்ச்சி பீறிட….கொட்டப்பட்ட கொதி அமிலமாய் தன்மானம் தன்னையே எரிக்க….தாகப்பட்ட பாலைவனமாய் “ஐயோ” என இவள் மனம் தகிக்க…

இதெல்லாம் முழுதாய் இரண்டு நிமிடம் கூட தொடரவில்லை…

அதற்குள் அடுத்த சடீர் படீரோடு காம்பவ்ண்ட் சுவரின் அருகிலிருந்த பெருமரம் வேரோடு பெயர்ந்து தடாலென தரையில் சாய…

சர்வமும் ஒருங்க அப்படியே அரண்டு போய் நின்றுவிட்டாள் ரியா…

இந்த காத்துல வெளிய போய்றுக்கான் விவன்…!!!!! அது மட்டும்தான் அந்நேரம் அவள் மனதில் வந்த ஒரே உணர்வு…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.