“அம்மா நீங்க உள்ள போங்க…நீங்க நிக்காதிங்கம்மா..” செக்யூரிட்டியின் வார்த்தையில் ரியா ஒரு சத்தற்ற நடையில் வீட்டுக்குள் திரும்பிவிட்டாலும்…
உயிரெல்லாம் விவன் ஜபம்…!!
‘கடவுளே இவன் எங்க போனான்?? அவன சேஃபா திரும்ப கொண்டு வந்துடுங்க…’
சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவள்…அடுத்து அவனை மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றாள்….ஆனால் ரிங்க் தான் போகவே இல்லை…
அவன் மொபைல்க்கு என்ன ஆச்சு…? ஆக்சிடெண்ட் எதுவும் நடந்து அதுல அவன் மொபைல்….. இப்படியாய் எதுவோ தோன்ற
படபடத்துக் கொண்டும் அலையடித்துக் கொண்டும் வரும் மனதில் மெல்ல தோன்றுகிறது…..புயல்ல டவர் வொர்க் ஆகலைனா சிக்னல் இருக்காது…..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஆதித்யா சரணின் "சிவன்யா" - விறுவிறுப்பான திகில் தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
அது கொஞ்சமே கொஞ்சம் ஆறுதல் சேர்க்க….
அடுத்து அவசர அவசரமாய் அவன் அறையில் மெடிகல் ஃபைல் எதாவது கிடைக்கிறதா என தேடத் தொடங்கினாள்…
யார் குழந்தைக்காக விவன் ஹாஃஸ்பிட்டல் சென்றிருக்கிறான் என புரியவில்லை என்றாலும்…குழந்தைய ஹாஃஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகனும்னா பொதுவா இங்க வீட்ல போற ஹாஃஸ்பிட்டல்க்கு தானே கூட்டிட்டுப் போய்றுப்பான் என்ற நினைவில் அவனது அறை டிரா..அலமாரி என எல்லாவற்றையும் குடைந்தாள்….
சில ஆப்பம்ஸ்…சாரோட சில ட்ரோபீஃஸ்…..மெடல்ஃஸ் எல்லாத்துக்கும் பிறகு எதொ ஒரு மெடிகல் ஃபைல் அவளுக்கு கிடைக்க…..அதிலிருந்த ஹாஃஸ்பிட்டல் ரிஷப்ஷன் நம்பரை அழைத்து…அங்கிருந்து பீடியாட்ரிக் செக்ஷன் எக்டென்ஷன் வாங்கி…
அபத்தமாய் பட்டாலும்…அழைப்பை ஏற்றவரிடம்…” என் பெயர் ப்ரியா…என் ஹஃஸ்பண்ட் விவன்னு நேம்…ஒரு குழந்தைய கூட்டிட்டு வந்திருக்காங்க….மொபைல் சிக்னல் இல்ல….ப்ளீஃஸ் அவங்கட்ட பேசனும் ..” என விசாரித்தாள்…
“ஒன் மினிட் மேம்.. பார்த்து சொல்றேன்” என்ற ரிப்ளைக்கு சில நிமிடங்கள் பின்…
“ஹலோ…” என காதில் விழுந்தது கண்மணியின் மாமியார் சுடர் ஆன்டியின் குரல்….
“
ஹலோ…” என்ற காதில் விழுந்த குரலில் இவள் அடையாளம் கண்டு “அம்மா …எப்டி இருக்கீங்க…?” என இவள் முடிப்பதற்குள்… அவர் முழு விஷயத்தையும் கொட்டிவிட்டார்…
“தாயி நல்லா இருக்கியால்ல? நாங்க நல்லா இருக்கோம்….நம்ம மின்னு குட்டிதான் பயங்காட்டிடா…….ஒரே மார்சளி……பிள்ளைக்கு மூச்சுவிட முடியல….விடிகலையிலேயே உன் அண்ணனும் மணியும் எதோ வெளிநாட்டுக்கு போறாங்கல்லாமா…..அதுக்கு பிறகுதான் ஜுரம் கண்டுட்டு….காத்தும் மழையுமா இருக்கவும் பயந்துட்டோம்…என்ன செய்யன்னு கேட்கதான் மாப்ளைய கூப்ட்டோம்….தம்பி கிளம்பி வந்துட்டாப்புல…”
இந்த பதில் போதாதா ரியாவுக்கு முழு நிம்மதி தர….ஆனால் போதவில்லை…..அடுத்து உரையால தொடர…..கடைசி வரைக்கும் விவன்ட்ட பேசனும் என சொல்ல இவளுக்கு மனமில்லை… சுடர் ஆண்டியும் கொடுக்கவில்லை…
பேசி முடித்திருந்தனர் இருவரும்…
அவன் பத்திரமாயிருக்கிறான் என தெரியவும் வந்துவிடும் நிம்மதி என நினைத்திருக்க…வந்தது பத்தா பாக்கியாய் நிற்க…
அவனை பார்த்தால் மட்டுமே தீரும் என்கிறது ஒரு உணர்வு…
என்ன செய்யலாம் என ரொம்பவும் யோசிக்காமல் மனதில் வருகிறது அவனது ஆல்பம்…
அவனது அறை பெட்டிலேயே சென்று அமர்ந்தவள்…..அதைத்தான் அடுத்து ஒவ்வொன்றாய் பார்க்க ஆரம்பித்தாள்…
நேரம் செல்வது தெரியாமல் ஆல்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு….மழை நின்றது புரியும் போது….வீட்டு வாசலில் ஹாரின் சத்தம்…
ஓட்டமும் நடையுமாய் விவனை எதிர் நோக்கி சென்றவளுக்கு அவனும் ஏமாற்றம் தரவில்லை….
போரிகோவில் திரும்பி நின்றது அவனது கார்.
காரின் கதவை திறந்து கொண்டு இறங்கியவன் சற்று கூர்மையாய் நொடி நேரம் இவளை கவனித்தவன்….
இவள் மலர்ந்திருந்த முகம் காணவும் தானும் மலர்ந்தான்…
சரியாய் அந்த நொடி புரிகிறது ரியாவுக்கு…
இவள் விவனை விரும்புகிறாள்!!!!!!!
Friends குட்டி எப்பி தான்….அடுத்த வருஷம் அழகா ஆரம்பிப்போம்…. Wish you all a Happy New year.
தொடரும்
{kunena_discuss:1063}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.