(Reading time: 12 - 23 minutes)

"சுப்ரியாவை நினைத்து வேதனைப்படுறேன்.அவளோட மொத்த கனவுகளையும் எப்படி சீரழித்திருக்கான் அந்தப்பாவி!அவனை சும்மா விட கூடாது."

"நிச்சயம் விட மாட்டேன் அம்மூ!கவலைப்படாதே!"-என்றவன் அவளை இறுக்கமாக அணைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

இந்தக் கதையை எழுத துடித்த மாத்திரத்தில் முதலில் காதலின் பங்கு இதில் அவசியமாக இருக்காது என்றே எண்ணினேன்.ஆனால்,நெடும் பெரும் பயணம் தன்னில் காதல் இல்லாமல் சுவாரசியம் இராது என்னும் நிதர்சனமே வெளிச்சம்!!

ஆம்..!அதிகாலையில் சூரியன் உதிக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி!!ஆனால்,சூரிய கதிரொளிக்கு வெளிச்சம் நல்க வேண்டும் என்ற தலைவிதி கிடையாது.ஆனால்,இன்று பகற்பொழுதில் விழிகள் காணும் இலக்குகள் யாவற்றுக்கும் ஆதாரம் சூரியனின் கிரணங்கள் ஆகும்!!அதன் ஆதாரம்,உலகின் மீது ஆதவன் கொண்ட காதலாகும்!!அறிவியல் ஆயிரம் விளக்கங்களை சமர்பிக்க தயாராக இருக்கலாம்.ஆனால்,அறிவியலின் ஆதாரங்களுக்கெல்லாம் மூலாதாரம் ஒரு விளக்க இயலாத மர்மம் என்பதே நிதர்சனம்.காதலும் மர்மமே!!இதுவரை குறித்த இருவருக்கு இடையே மட்டும் காதல் மலரானது,எப்படி தன் இணையை சரியான முறையில் கண்டறிகிறது என்பது மர்மம் அல்லவா??

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"ழாதே லட்சுமி!நான் என்னால நிச்சயம் இதை விட்டுவிட மாட்டேன்!"

"அவ பழி வாங்கிட்டாம்மா!அண்ணனை அரஸ்ட் பண்ணி நல்லாவே பழி வாங்கிட்டா!"-ஏற்றிவிட்டாள் ஸ்வேதா.

"பேசாம இரு ஸ்வேதா!இப்போ நிர்பயாவை பழிக்கிறது புத்திசாலித்தனம் இல்லை.அவ பிரதாப்பை பெயில்ல எடுக்க முடியாத அளவுக்கு கேஸை ஸ்டாராங் ஆக்கி இருக்கா!"-அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில்,

"மருத்துவ மாணவி சுப்ரியா வழக்கில் கொலையாளி கண்டுப்பிடிப்பு!இன்னும் ஆறு நாட்களில் தீர்ப்பு!உண்மை வெற்றி பெறுமா?"-என்ற செய்தி ஔிப்பரப்பானது.

"சுப்ரியா கேஸ்ல கொலையாளியை அரஸ்ட் பண்ணிட்டோம்!கொலையாளியை கண்டுப்பிடிக்க உதவுனது சுப்ரியா கேஸை எடுத்து இருக்க அட்வக்கேட் ஜோசப் சார் தான்!நிச்சயமா கொலையாளிக்கான தண்டனை கிடைக்கும்!மாற்றமில்லை.."-பேட்டி கொடுத்தாள் நிர்பயா.

"சுப்ரியா கொலை எ வெரி ப்ளாண்ட் மர்டர்!ரொம்ப கொடூரமா கொலை நடந்திருக்கு!நிச்சயமா பிரதாப்கான தண்டனை இனி அடுத்தவங்க தப்பு செய்யாத மாதிரி இருக்கும்!"-செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தான் ஜோசப்.

"ஐயோ!என் பையன்!"-முகம் வெளிப்பட்ட படி சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட மகனை கண்டதும் கண்ணீர் வடித்தார் லட்சுமி.

"அந்த நிர்பயாவை..!"

"ஜெயிக்கணும்னா நிச்சயம் அதிகாரத்தால முடியாது!அன்பால தான் முடியும்!"-முடித்து வைத்தான் கார்த்திக்.

"என்ன சொல்ல வர!"

"பல்லவி அத்தை தான் இதற்கு பகடைக்காய்.அவங்களை வைத்து தான் அவளை தரைமட்டமாக்க முடியும்!"

"எப்படி?"

-தொலைக்காட்சியில் தெரிந்த நிர்பயாவின் புகைப்படத்தை கூர்மையாக பார்த்தான் கார்த்திக்.

எட்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தார் பல்லவி.இனியும் தாமதிக்காமல் தங்களுக்கு அதை விளக்கவே விழைகிறேன்!!

ள்ளி படிப்பை முடித்த நிர்பயாவின் மனம் முழுதும் ஜோசப்பின் நினைவுகளே வியாபித்திருந்தன.

உண்மையில் அவன் போய்விட்டானா??இனி அவனை சந்திக்கவே இயலாதா??என்றெல்லாம் சிந்திப்பாள்.

திடீரென்று ஏன் அவனை குறித்து சிந்திக்கிறோம் என்று தலையில் கொட்டிக் கொள்வாள்.

அதனால்,அவளது கவனம் அடிக்கடி தனிமையை நோக்கி சென்றது.

பள்ளியில் சிறந்த மதிப்பெண் எடுத்து தேர்ந்திருந்தாள் அவள்.

மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்று சிந்தித்த சமயத்தில் தான் நிகழ்ந்தது அந்த விதை!!அவள் வாழ்வை மாற்ற துடித்த விதை!!

கார்த்திக் கவனம் முழுதும் நிர்பயாவின் மேலே இருந்தது.

அவள் எங்கு சென்றாலும் முன் வந்து நிற்பான்.யார் அவளோடு பேசினாலும் கண்டிப்பான்.அவனது பார்வை அவளுக்கு முதலில் சந்தேகத்தை தரவில்லை.

ஆனால்,அவனது எண்ணம் தவறானது என்பதை அவளுக்கு கூறியதெல்லாம் அவனது நடவடிக்கை தான்...!

ன்று...!

தோட்டத்தில் சுற்றி திரிந்த பட்டாம்பூச்சியை தீண்டும் பொருட்டு அதை பின் தொடர்ந்தாள் நிர்பயா.

அது அவளுக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.