(Reading time: 12 - 23 minutes)

"ங்கே ஓடுற நீ?நான் உன்னை விட மாட்டேன்!"-என்று புள்ளிமானாய் அதை துரத்தினாள் நிர்பயா.

ஒரு அழகிய ஒரு ரோஜா மலரில் அமர்ந்தது.

அதை தீண்ட செல்வதற்குள் அது பறந்து வந்து அவளது இதழை தீண்டிவிட்டு அவளை சுற்றி பறந்தது.

பெண்மைக்கே உரிதான அந்த நாணம் அவளது மனதில் தூண்டப்பட,அவள மனதில் ஒரு வித பயிர்ப்பு!!தலை குனிந்து நின்றவள்,சுதாரித்து கொண்டு அதை மீண்டும் பார்க்க,சட்டென அப்பூச்சியை பற்றி கசக்கி,கொன்றான் அந்த கொடூரன் கார்த்திக்.

"ஆ..!"-அலறிவிட்டாள் நிர்பயா.அவளது விழிகள் கசிய ஆரம்பித்தன.

கேள்வியாக அவனை பார்த்தாள் அவள்.அவன் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

டுத்த சில நாட்களில்..

தான் இலக்கியத்தை பயில விரும்புவதாக விருப்பத்தை தெரிவித்தாள் நிர்பயா.இது பல்லவிக்கு பெரும் ஏமாற்றம்!

அவள் மருத்துவராக வேண்டும் என்பது அவரது கனவு!!அதற்குரிய திறமை இருந்தும் அவள் விரும்பியதோ இலக்கியத்தை!!

இருந்த போதிலும் மனதினை தேற்றிக் கொண்டார்.ஆனால்,சங்கரனின் பதில்!!

"உன்னை மேலே படிக்க சொல்லி யார் சொன்னா?நான் படிக்க வைக்க போறேன்னு சொன்னேனா?நீ படித்ததெல்லாம் போதும்!அடுத்த வருஷம் கார்த்திக் படிப்பை முடித்திடுவான்.அவனை கல்யாணம் பண்ணிட்டு பொண்ணா அடக்கமா குடும்பத்தை பார்த்துக்கிற வழியை பாரு!"-அவளது மனதை ஒடுக்கினர் சங்கரன்.

கோடிக்கணக்கில் பணம்...ஆனால்,ஆணவத்தின் பெயரால் ஈன்ற புதல்வியின் விருப்பத்தை ஈடு செய்ய மறுக்கிறார்.கார்த்திக்கின் விழிகள் ஏளனத்தோடு அவளை துளைப்பதை அவள் கவனிக்காமல் இல்லை.

அவளுக்கான ஆறுதலை நல்க ஒருவர் கூட அங்கில்லை.என்ன செய்வாள் அந்தப்பேதை??கண்ணீர் வடித்தாள்.கதறி அழுதாள்.பலனில்லை.

ன்றிரவு...

தனிமையில் அமர்ந்திருந்தவளை சீண்டினாள் ஸ்வேதா.

"காலேஜ்ல பயங்கர வொர்க்ணா!ஆனாலும்,தினமும் போயிட்டு வராம இருக்க முடியலை.பாவம்..!நிறைய பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கலை!"-ஒடுங்கிய மனதில் காயத்தை பெருக்கினாள் அவள்.

"உனக்கென்ன?இன்னும் ஒரு வருஷத்துல கல்யாணம்!கல்யாணம் முடியுற வரை வெயிட் பண்ணுவியா?இல்லை..."-அவள் பேச்சு நிர்பயாவை உடலை கூச வைத்தது.

அவள் பேசாமல் எழுந்து செல்ல எத்தானிக்க,அவளது கரத்தை பற்றி தடுத்தான் கார்த்திக்.

"விடுங்க!"

"எங்கே போற?என்னை பார்த்ததும் வெட்கம் வந்துடுச்சா?"

"ப்ளீஸ்..உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன்!இது மாதிரி பேசாதீங்க!"-கண்ணீர் வடித்தாள் அவள்.

"ப்ச்...என்ன நீ?சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்க போறோம்!நான் தானே பேசுறேன்!"-என்றவன் தனது வக்கிர புத்தியை அவளிடம் வெளிப்படுத்த நெறுங்கினான்.அங்கிருந்து.புன்னகைத்தப்படி சென்றுவிட்டாள் ஸ்வேதா.

"விடுங்க!"-என்று திமிறியவளின் கரம்,தெரியாமல் அவனது கன்னத்தில் அறைந்தது.அச்சமயம் முதலில் துடித்தவளும் அறைந்த அக்காரிகை தான்.ஒரு பெண் தன்னை அறைந்துவிட்டாள் என்ற கோபம்,கார்த்திக்கை தூண்டிவிட,அவன் அவளது கன்னத்தில் திருப்பி அறைந்தான்.அதை கேசத்தை இறுகப் பற்றியவன்,அவளை இழுத்துக்கொண்டு சென்று நடு கூடத்தில் தள்ளினான்.எதிரிலிருந்து சோபாவில் தாக்கப்பட்டு நிர்பயாவின் நெற்றியிலிருந்து காயம் வழிந்தோடியது.

அங்கு அனைவரும் திரண்டனர்.ஒருத்தரும் அவனை தடுக்கவில்லை.ஈன்ற தாயும் கண்ணீர் வடித்தாளே தவிர எவரும் தடுக்கவில்லை.மீண்டும் அவளது கேசத்தை பற்றியவன்,அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

"ஆ...!"-அவளது அலறல்,எண்திசையிலும் ஒலித்தது.விபரீதமாகும் நிகழ்வை கண்ட விசாலாட்சி,உடனடியாக வைத்தியநாதனுக்கு அழைப்பு விடுத்தார்.

"என்னடி?ரொம்ப தைரியம் வந்துடுச்சா?"-என்றவன்,அவளது கழுத்தை நெறித்தான்.

காண்போர் எவருக்கும் இதயம் துடிக்க மறுக்கும் அக்கொடூரத்தால்!வேலையாட்கள் யாவரும் தலைக்குனிந்து கொண்டனர்.

அனைவர் முன்னிலையிலும் அவளது நடவடிக்கையை குறை கூறினாள் லட்சுமி.நிர்பயா கண்ணீரோடு தன் தாயை பார்க்க,அவர் தலைகுனிந்துக் கொண்டார்.இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்று நிலையில் தள்ளப்பட்டாள் அவள்.இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்ற நிலையில் மனம் தனது விஸ்வரூபத்தை வெளிப்படுத்தும் அல்லவா??

கார்த்திக்கின் பிடி இறுக,ஒரு கட்டத்தில் அவனது கரத்தை தட்டிவிட்டாள் நிர்பயா.சூழ்ந்திருந்தவருக்கெல்லாம் அடுத்த அதிர்ச்சி!!

கார்த்திக்கை நோக்கி தனது ஆட்காட்டி விரலை உயர்த்தி காட்டினாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.