(Reading time: 12 - 23 minutes)

"ன்னடி ரொம்ப பண்ற?"-என்று மீண்டு்ம் அவன் கை ஓங்க,அவன் கரத்தை தடுத்து இப்போது தெரிந்தே அவன் கன்னத்தில் அறைந்தாள் நிர்பயா.யாவரும் கதி கலங்கி நின்றனர்.

"இன்னொரு முறை என்னை நெருங்க நினைத்தால்,எரித்து சாம்பலாக்கிடுவேன்.இனி இந்த வீட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...நான் இந்த வீட்டோட வாரிசும் இல்லை."

"அம்மூ!"

"பேசாம இருங்க!"

"............."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்..

"இனி யாரும் பேச கூடாது!நான் யார் பேச்சுக்கும் அடங்கி போறவள் இல்லை.அழிக்க பிறந்திருக்கேன்.தப்பை மட்டும் செய்துட்டு இருக்கிறவங்களை அழிப்பதற்காக பிறந்திருக்கேன்.நான் அவமானப்படும் போது மௌனம் சாதித்த யாருக்கும் என்னை தடுத்து நிறுத்துற அதிகாரம் கிடையாது."

"ஏ..என்னடி நீ என்ன அந்த துர்கா தேவியா?அழிக்க பிறக்க..?"

"ஆமா..!ஒரு தவறை தடுத்து நிறுத்துற ஒவ்வொரு பொண்ணும் ஆதிசக்தி தான்!இதுவரைக்கும் நான் அனுபவித்த வேதனை எல்லாத்துக்கும் இன்றையோட முடிவு கட்டுறேன்!விட மாட்டேன்!இனி யாரும் என் பார்வையிலிருந்து தப்ப முடியாது!நான் திரும்பி வருவேன்.உங்களோட மரணமா வருவேன்.அன்னிக்கு எல்லாரும் என்னை பார்த்து கதி கலங்கி நிற்பீங்க!நான் வருவேன்!"-என்று அவள் திரும்ப,கண் கலங்கியப்படி அதிர்ச்சியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தார் வைத்தியநாதன்.அவளை பார்த்தவளின் மனம் தனது கண்ணீரை சிந்த ஆரம்பித்தது.

"தாத்தா!"-என்று ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டாள் நிர்பயா.அவர் விழிகள் வடிய ஆரம்பித்தன.

"வாம்மா!போகலாம்!"-என்றவரை தடுத்தார் பல்லவி.

"அப்பா!"-என்று ஒரு வார்த்தை தான் உதிர்த்திருப்பார்,வைத்தியநாதனின் கரம் ஓங்கி அவரை அறைந்தது.

"வாயை திறக்காதே!இனி நீ என் பொண்ணே இல்லை.மரியாதையா போயிடு!இவ என் பேத்தி!இவளை எப்படி வளர்க்கணும்னு எனக்கு தெரியும்!இவ காலில் வந்து நீங்க விழுற நிலை வரும்!நான் வர வைப்பேன்.நீயும் தண்டனையில இருந்து தப்ப முடியாது பல்லவி.போயிடு!"-என்றவர் நிர்பயாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.