(Reading time: 27 - 54 minutes)

வன் தன்னை விழாமல் காத்த இதம் மறைந்து, அவன் தன்னை பிடித்து கோபமாக முறைத்து அடக்கி, விடாமல் பிடித்து கொண்டு இருந்ததில் கலவரம் ஆனாள் .

அந்த நேரம் கதிர் உடன் வந்த நான்கு பேரில் இருவர் முகம் அவளுக்கு பார்த்த முகமாக இருந்ததை பார்த்து யோசனையானவள் தன் தெருவில் காவல் காப்பதுபோல் சுற்றி வருபவர்கள் அவர்கள் என்பதை உணர்ந்தாள்.

மஹிந்தன் தன்னுடன் பாதுகாவலுடன் வந்த கதிரிடம் நீ போனில் சொன்னது போல் இவன் அஜய்யின் நண்பன் மட்டும்தானா அல்லது ஐஸ்வர்யாவிற்கும் நண்பணா? என்று கேட்டான் .

ஐஸ்வர்யா என்ற பெயரை கேட்டதும் கவிழையாவிற்கு, ‘நான் மஹிந்தனின் வருங்கால மனைவி’’ என்று தன்னிடம் புன்னகையுடன் கைநீட்டியா ஐஸ்வர்யாவின் முகம் நினைவு வந்தது .

அதனால் அடுத்தவளின் மணாளன் தன் கையை பற்றி இருப்பதை ஜீரணிக்க முடியாமல் தொடந்து தன் கையை விடுவிக்க முயற்ச்சிசெய்து கொண்டே மஹிந்தனுடன் மீட்டிங் ஹாலை அடைந்தாள்.

வாசலில் அவள் கையை விட்டவன் கவிழையாவை பார்த்து என்னை திரும்ப திரும்ப கோபப்படுத்துகிறாய். நீ என்னுடையவள் அதை புரிந்துகொள்ள முயற்ச்சிசெய்.என்று கூறி ஒரு நிமிடம் தன் கைகளை மூடி கோபத்தினை கட்டுப்படுத்தியவன் உள்ளே கிளைண்ட் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். சோ! ரிலாக்ஸ் என்று கூறி உள்ளே சென்றான்.

கவிழையாவிற்கு அச்சூழ்நிலையில் மூச்சு முட்டுவதுபோல் இருந்தது அவனுடன் உள்ளே நுழைந்தவள் குறைந்த குரலில் நான் ரெஸ்ட்ரூம் போகவேண்டும் என்று மஹிந்தனிடம் கூறியதும் அவன் அது இருந்த பக்கம் கை காட்டினான்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

கவிழையாவிற்கு ரெஸ்ட்ரூம் உள் வந்ததும் அழுகையை அடக்க முடியாமல் அழுவதற்கும், யோசிப்பதற்கும் நேரம் இப்பொழுது இல்லை என்று தன்முகத்தில் தண்ணீர் விட்டு அலம்பி தன்னை சிறிது அமைதிப்படுத்திக்கொண்டு வெளியில் வந்தாள்.

பார்ட்டி ஹாலில் இருந்த ஐஸ்வர்யாவிற்கு அஜய் மதுபானத்துடன் போதை அதிகரிக்கும் வஸ்த்துவை அவள் அறியாமல் கலந்து கொடுத்தான்.

ஐஸ்வர்யாவிடம் மஹிந்தனுக்கு கவிழையா மேல் உள்ள ஈடுபாட்டை கூறியவன் ,’’மஹிந்தன் உன்னுடன் நேரம் செலவழிக்க விரும்பமாட்டான்’’ என்று கூறினான்.

அதற்கு ஐஸ்வர்யா அந்த மிடில்கிளாஸ் பெண்னிடம் அப்படியென்ன இருக்கு என்று மஹிந்தன் அவளிடம் குலைகிறான் அஜய். நீ சொல் நான் பெஸ்ட் ஆ? அல்லது அவள் பெஸ்ட் ஆ? என்று கேட்டாள்.

அதற்கு அஜய் அவளுடன் நெருக்கமாக அமாந்து, ஸ்வீட்டி “நீதான் பெஸ்ட்” என்று கூறி சிரித்தான்.

அப்பொழுது கிளைண்டிடம் பேச்சுவார்த்தையில் இருந்த மஹிந்தனுக்கு வந்த போன் வெளிச்சத்தை பார்த்தவன் கதிர் என்ற பெயரைப்பார்த்து அவர்களிடம் ஒன் மினிட் என்று கூறி மை செக்ரட்டரி ப்ரொசீட் பர்தர் இன்பர்மேஷன் டு யூ என்று கிளையண்டிடம் கூறினான்.

அவன் விட்டுச்சென்ற இடத்தில் இருந்து கவிழையா மீதி பேச்சுவார்த்தையை மேற்கொண்டாள்.

சற்று தள்ளி நின்று கொண்டு கவிழையா பேசுவதை கவனித்துக்கொண்டே தன் போன் ஐ அட்டென் பண்ணி சொல் கதிர் என்றான் .

கதிர் சொன்னதைகேட்ட மஹிந்தன் சிறு குரலில் கதிரிடம் ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அனுப்பிவை கதிர் என்னால் இப்பொழுது அங்கே வர முடியாது. டீலிங் முடிந்தபின்னால் தான் என்னால் வெளியில் வர முடியும் என்று கூறி போனை வைத்துவிட்டு பிசினஸ் டீலிங்கில் கலந்து கொண்டான்.

பார்ட்டி ஹாலில் ஐஸ்வர்யாவின் முன் நின்றிருந்த கதிரைப் பார்த்து கோபத்துடன் நீ யார்? என் நண்பன் மீது கைவைக்க என்று போதையுடன் கூறினாள் ஐஸ்வர்யா .

அதற்கு கதிர் “மேடம்” மஹிந்தன் ஸார் என்னிடம் உங்களை வீட்டில் விட சொல்லியதால் தான், நான் இங்கு வந்தேன் என்றான்.

அதற்கு ஐஸ்வர்யா, என்ன உங்கள் மஹிந்தனுக்கு திடீர் என்று என் மேல் அக்கறை என்று குழறியபடி கூறி “நோ ஐ காண்ட் அக்செப்ட் யுவர் சர்வீஸ்” என்று கூறினாள்.

“ அஜய் வா போகலாம் என்று அழைத்தாள் ஐஸ்வர்யா “ அவளின் இடையில் கைகொடுத்து அனைத்ததுபோல் கூட்டிச்சென்ற அஜயை தடுக்க வழியில்லாமல் நின்றான் கதிர்.

மீட்டிங் ஹாலில் பிசினஸ் டீலிங்கை வெற்றிகரமாக முடித்ததில் மஹிந்தனின் மனநிலை சந்தோஷமாக இருந்தது. அவ்வொப்பந்தம் அவனது பிசினஸ் உலகில் ஒரு பெரிய அந்தஸ்த்தை பெற்றுததரும் என்பதினால் தான் அவன் அதில் அதிக சிரத்தை காண்பித்தான்.

கவிழையாவை என்று அவனுடயவள் என்று முடிவெடுத்தானோ, அன்றுதான் அந்த டீலிங் பற்றிய முதல் செய்தி அவனுக்கு கிடைத்தது.

ஐஸ்வர்யா உடன் அவனுக்கு செய்த நிச்சயதார்த்தத்தன்று மிகவும் மனஉளைச்ச்சலில் இருந்தவனுக்கு கதிர், கவிழையா பற்றி கூறியபோது ழையா அவளுடையவள் என்று மஹிந்தன் முடிவெடுத்ததும் அவன் போனில் இந்த டீலிங் பற்றிய முதல் அறிவிப்பு அவனுக்கு கிடைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.