(Reading time: 27 - 54 minutes)

ப்பொழுது என் குடும்பத்தாரிடம் எப்படி உண்மையை சொல்ல வேண்டும் என் தினறி நான் என்னைப் பெற்றவர்களிடம் நான் வனித்தாவை பார்த்துவிட்டு வந்த பிறகு உங்களிடம் கூறுகிறேன் என்று கூறி ,காரில் ஏறி உன்னை பார்க்க வந்துவிட்டேன் என்றாள் கவிழையா.

மேலும் நான் வேலைக்கான ஒப்பந்தத்தை கவனிக்காமல் நானாகவே வேலையைவிட்டு நின்றால் ஐம்பதுலட்சம் கொடுப்பதற்கு ஒத்துக்கொண்டுள்ளது போல கையெழுத்திட்டு விட்டதையே எனது பெற்றோரால் தாங்கிகொல்ல முடியவில்லை. மஹிந்தனைப் பற்றி அவர்களுக்கு தெரிந்தால் என்ன செய்வார்களோ என்று பயமாக இருக்கிறது என்று கூறினாள்.

அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் போது அவர்களைத்தேடி அங்கேயே ஈஸ்வரன் வந்துவிட்டார்.

கவி என்ற அழைப்பதை பார்த்து திரும்பிய கவிழையா அப்பா உங்களுக்கு எப்படி நாங்கள் இங்கு இருப்பது தெரிந்தது என்று கேட்டாள்.

அதற்கு ஈஸவரன் உன்னை தேடிவரும் வழியில் பூங்கா வாசலில் நீ வந்தகாரை பார்த்து உள்ளே வந்தேன், என்றவர் என்ன பிரச்சனை என்று கேட்டார்.

தன் தந்தையிடம் தான் மஹிந்தனை சந்தித்தது முதல் நேற்று நடந்ததுவரை அனைத்தையும் கூறினாள் கவி.

மகள் கூறியதைக் கேட்ட ஈஸவரன் இடிந்துபோய் அமர்ந்துவிட்டார். பின் தன்னை சிறிது திடப்படுத்திக்கொண்டு நம்மால் அவர்களிடம் மோதி தப்பிக்கும் படி ஆள் பலமும், பண பலமும் இல்லை. .இது பெண் பிள்ளை பற்றிய விபரம் இதை நான் வெளியில் சொல்வதால் உனது திருமண வாழ்கையில் பிரச்சனை வரும். அதனால் நம்மால் இதை வெளியில் சொல்லவும் முடியாது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்..

மேலும் அவன் சொல்லியுள்ள இந்த ஒரு மாதத்தில் நாம் எப்படியாவது இதில் இருந்து தப்பிக்க வழி கண்டறிய வேண்டும். உனக்கு எதுவென்றாலும் இந்த அப்பா துணை இருப்பேன் என்றார்.

இப்பொழுதே உன் அம்மாவிடம் இதை நீ சொல்ல வேண்டாம். நான் நேரம் பார்த்து உன் அம்மாவிடம் சொல்லிக் கொள்கிறேன் என்றார்

இனி உன்னிடம் அவன் முறை தவறி பேசினாலோ அல்லது தவறாக நடக்க முயன்றாலோ உடனே நீ வேலையை விட்டு வந்துவிடு கவி. நான் ஒரு மாதத்திற்குள் என் தலையை அடமானம் வைத்தாவது ஐம்பது இலட்சம் ரூபாய்க்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

அவர் சோர்வுடன் எழுந்து, நீங்கள் இருவரும் பத்திரமாக வாருங்கள் நான் முன்னாள் போகிறேன் என்றார்.

சோர்வுடன் நடந்து போகும் தந்தையை பார்த்த போது கவிழையாவின் துக்கம் அதிகரித்தது.

கதிர் மஹிந்தனுடன் அவனுடைய ரெசார்டில் உள்ள கடல் பார்த்து அமைந்திருந்த மேற்கூரை மட்டும் உள்ள டீ டேபிளிள் எதிர்எதிரில் உள்ள இருக்கையில் உட்கார்ந்திருந்தனர்.

கதிர் குழப்பத்தில் இருந்தான் ஆனால் மஹிந்தன் கனவுகள் சுமந்த மலர்ந்த முகத்துடன் இருந்தான்.

மஹிந்தன் கதிரிடம் இப்ப என்ன ஆச்சு என்று இப்படி உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டான் .

அதற்கு கதிர் இங்க பாரு மஹிந்தன், நான் உனக்காக உன் பிசினஸ்க்காக என்ன வேண்டும் என்றாலும் செய்கிறேன் ஆனால் இனி பெண்களிடம் அதுவும் உன் வாழ்க்கையில் பங்கெடுக்க என்று நீ தேர்ந்தெடுத்திருக்கும் ஐஸ்வர்யா, கவிழையா இருவர் விசயத்தில் மட்டும் என்னை ஈடுபடுத்தாமல் விட்டுவிடு என்றான்.

அதற்கு மஹிந்தன் ஐஸ்வர்யாவை நான் தான் தவறுதலாக தேர்ந்தெடுத்தேன். ஆனால் என் ழையாவை எனக்கு அடையாளம் காட்டியவன் நீ தான் கதிர் என்றான்.

நீ சொன்னது போல் ஐஸ்வர்யா உன்னுடைய தவறான் தேர்வு என்று தெரிந்தும் நீ ஏன் அவளுடனான உன்னுடைய கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்யவில்லை மஹிந்தன், என கேட்டான் .

அதற்கு மஹிந்தன் கதிரிடம் நான் ஐஸ்வர்யாவுடனான கல்யாணத்தை நிறுத்தினால் என் குடும்பத்தின் முதல் அடையாளமான எஸ்.வி.என் மோட்டார் கம்பெனி என் குடுப்பத்தைவிட்டு வேறு ஒரு குடும்பத்திற்கு சென்றுவிடும்.

உனக்கே தெரியும் கதிர் இப்பொழுது எனக்கு பல தொழில்கள் இருந்தாலும் என்னை அடையாளம் கூறுபவர்கள் எஸ்.வி.என் மோட்டார் கம்பெனியின் வாரிசு என்றுதான் கூறுவார்கள் என்றான்.

அதற்கு கதிர் நீ சொல்வது சரிதான் உன் குடும்பத்தின் அடையாளம் அது. ஆனால் அன்று ஐஸ்வர்யா அந்த அஜய் உடன் என்று கூறி முதல் நான் ஹோட்டல் சோழாவில் நடந்த அத்தனையும் கூறினான் .

என்னால் ஐஸ்வர்யாவை தடுத்து வீட்டிற்கு அனுப்ப முடியவில்லை என்றான் .மேலும் அந்த அஜய் அவளை தன் உடன் அழைத்துச்சென்றது நல்லதல்ல. இது போன்ற செயல்களை, கல்யாணத்திற்கு பிறகும் தொடர்ந்து செய்தால் உன் குடும்ப கௌரவம் தான் பாதிக்கும் என்றான்.

அவன் கூரியதைகேட்ட மஹிந்தன் என்னால் ஐஸ்வர்யாவை எப்பொழுதுமே மனைவியாக ஏற்று கொள்ள முடியாது. அவளுக்குத் தேவை ஒரு மல்டி மில்லினரின் மனைவி என்ற அந்தஸ்து. எனக்குத்தேவை என் குடும்ப அடையாலமான எஸ்.வி.எம். “தட்ஸ் ஆல்” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.