(Reading time: 27 - 54 minutes)

தன் பின் கவிழையா அவனுடைய ஆபீஸ்யில் செக்ரட்டரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அன்று அவன் எதிர்பார்த்த பிசினஸ் டீலிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டது.

அவள் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் மேற்கொண்ட ஒப்பந்தம் இன்று வெற்றியை அவனுக்கு அளித்தது.

மஹிந்தனுக்கு, கவிழையா அவனுக்கு கிடைத்த பொக்கிஷமாக மனதிற்கு பட்டது . மற்றொருவரின் நிழல் கூட அவளை நெருங்க விட அவன் தயாராக இல்லை.

அப்படிப்பட்டவளின் மேல் ஒருவன் இடிக்க வந்ததை அவனாள் மன்னிக்க முடியவில்லை. ஆனால் அவன் அறியவில்லை, தன்னுடைய செயல் அவளுக்கு எவ்வளவு துன்பத்தைகொடுக்கும் என்பதை அவன் யோசிக்கவில்லை.

தான் கல்யாணம் செய்யப்போகும் ஐஸ்வர்யாவிற்கு எவனோ ஒருவன் முத்தமிட்டதை பார்க்கும் போது அவனை கொல்லவேண்டும் என்ற வெறி அவனுக்கு கிளம்பியிருக்க வேண்டும் ஆனால் அதில் அவன் கோபம் கொள்ளலாமல் இருந்தது அவள் மேல் அவனுக்கு இருந்த பற்றில்லாத தன்மையை மஹிந்தன் உணர்ந்து. அக்கல்யாணத்தை நிறுத்த முயற்சிசெய்திருக்க வேண்டும்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

மீட்டிங் ஹாலை விட்டு வெளியே வந்த மஹிந்தனுக்கு கவிழையாவுடன் தன் மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. எனவே ழையா என்ற அழைப்புடன் அவள் கைகோர்க்கும் நோக்குடன் நெருங்கினான் மஹிந்தன்.

அதனை பார்த்த கவிழையா, ஒரு ஸ்டெப் தள்ளிநின்று கொண்டு இதுபோல் என்னை தொட்டு பேசுவது கையை பிடிப்பது போன்ற செயலை எந்த இடத்தில் செய்ய முற்பட்டாலும் என் அடியால் உன் கன்னம் பழுத்துவிடும் என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதைக் கேட்ட மஹிந்தன் கொஞ்சம் சத்தமாக சிரித்தான். பின்பு உன்னால் முடியும் விஷயத்தை மட்டும் பேசனும் பேபி என்று கூறினான் .

பின்பு தன் முகத்தில் கொஞ்சம் கடுமையுடன் ழையா நான் இன்று மகிழ்ச்சியான மூடில் இருக்கிறேன் ஆதலால் நீ பேசியதை நான் பொறுத்துக்கொள்கிறேன் .என்னுடன் பேசும் பொழுது வார்த்தைகளை அடக்கி பேச கற்றுக்கொள் என்றான்.

மேலும், நீ என்னுடையவள் என்பதனை அக்செப்ட் செய்து கொள்வதற்கு உனக்கு ஒரு மாதம் நான் டைம் கொடுக்கிறேன். அதற்க்குள் என்னை ஏற்க உன்னை தயார் படுத்திக்கொள் என்றான்.

மறுநாள் பூங்காவில் வனித்தாவுடன் அமர்ந்திருந்தாள் கவிழையா. என்னடி கவி பக்கத்த்து தெருவில் இருந்த என்னை கூப்பிட காரில் வந்திருக்கிறாய். எங்கோயோ என்னை கூப்பிட்டுப்போகப் போகிறாய் என்று பார்த்தால் என்வீட்டுப்பக்கதில் உள்ள பூங்காவிற்கு கூட்டிவந்துள்ளாய். காரில் வைத்து என்னிடம் பேசவேண்டாம் என்று கடிந்தாய் இங்கு வந்தாலும் கவலையோடு அமர்ந்திருக்கிறாய் என்னடீ விஷயம், என்றாள் வனித்தா.

தன் தோழி தன்னிடம் அப்படி கேட்டதும் தன்னை அடக்க முடியாமம்ல் விம்மி அழுத கவி தான் வேலையில் சேர்ந்தது முதல் நேற்று ஹோட்டலில் நடந்ததுவரை அவளிடம் கூறினாள்

அவள் கூறியதைக் கேட்ட வனித்தா, “உன்னை வைத்துக் கொள்ளவும் அந்த ஐஸ்வர்யாவை கட்டிக்கொள்ளவும் நினைக்கிறான் போல அந்த மஹிந்தன்” என்று கூறி அவனிடம் இருந்து எப்படி தப்பிக்கப் போகிறாய் கவி? என்று கேட்டாள்.

அதற்கு கவிழையா அதுதான் இப்பொழுது எனக்கு பெரும் யோசனையாக இருக்கிறது வணி .எனக்கு அவன் கொடுத்த ஒரு மாதத்துக்குள் இதில் இருந்து எப்படியும் வெளிவர வேண்டும் .

ஆனால் எப்படி என்று தெரியவில்லை. இன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் உன்னிடம் என்மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்துவிட்டு இதில் இருந்து தப்பிக்க ஏதேனும் யோசனை உன்னிடம் கேட்கலாம் என்று நினைத்தேன்

ஆதலால், நான் என் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணி வீட்டு வாசலுக்கு வந்தாள் எங்கிருந்துதான் நான் ஹோட்டலில் பார்த்த அந்த மஹிந்தனின் ஆட்கள் வந்தார்களோ தெரியவில்லை, என் ஸ்கூட்டிக்கு வழிவிடாமல் மறைத்துக்கொண்டு நிற்கிறார்கள்.

நான் அவர்களிடம் எதற்கு வழிமறிக்கிறீர்கள் என்று கேட்டால். மேடம், “நீங்கள் எங்கே போக வேண்டியது என்றாலும் காரில்தான் போகவேண்டும் என்று சார் கூறியுள்ளார்” என்று அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் கார் என் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது.

என் ஸ்கூட்டியை வழிமறித்து அவர்கள் பேசுவதை பார்த்த என் குடும்பமே வெளியே வந்துவிட்டது.

அவர்களிடம் என் அப்பா ஏன் என் மகளின் வண்டியை வழி மறிக்கிறீர்கள் என்று கேட்டார் .

அதற்கு அவர்கள் என் அப்பாவிடம் மஹிந்தன் சாப்ட்வேரின் செக்ரட்டரி போஸ்டில் உள்ள எங்கள் கவிழையா மேடத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்படி எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் ஸ்கூட்டியில் செல்வது பாதுகாப்பற்றது. எனவே அவர்கள் எங்கு போவது என்றாலும் காரில் போகும்படி பார்த்துகொள்ளுமாறு எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.