(Reading time: 11 - 22 minutes)

21. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ஹாய் friends.. chillzee அவார்ட்ஸ் அன்னௌன்செமென்ட்க்கு  அப்புறம் உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு... எனக்கு ஆல் rounder award கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ... chillzee காதல் உறவே தொடர் லே எழுதினது ஒரு ஆர்வதுலேதான்... அதுக்கு எனக்கு கிடைச்ச response மற்றும் encouragement ரெண்டும்தான் என்னை தொடர்ந்து எழுத தூண்டிச்சு.. & நானும் மத்தவங்களுக்கு respond பண்ணனும் அப்படின்ற எண்ணத்த கொடுத்துச்சு.. அதா என்னாலே முடிந்த வரை follow பண்றேன்.. என்னோட எல்லா எழுத்துக்களுக்கும் ஆதரவு கொடுத்து படிக்கிறவங்க, படிச்சு கமெண்ட் போடுறவங்க , வாய்ப்பு கொடுத்த chillzee , எந்த விதமான சந்தேகம் கேட்டாலும் தெளிவு படுத்தும் chillzee டீம், என்னை encourage செய்யுற சீனியர் writers, friends எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள்.. தொடர்ந்து படிச்சு நிறை, குறைகளை சுட்டி காட்டுங்க..

ராகுல் நிஷா இருவரின் மகிழ்ச்சியை பார்க்கும் போது சுபத்ராவிற்கு சந்தோஷமாக இருந்தது..

அர்ஜுன்க்கு மனதுக்குள் “இங்கே பாருடா.. நமக்கு பின்னாடி லவ் பண்ண ஆரம்பிச்சவன் எல்லாம் லவ் சொல்லிட்டான். நமக்குதான் நேரம் கூடி வர மாட்டேங்குது.. என்ன செய்ய நம்மாளு டிசைன் அப்படி..” என்று உள்ளுக்குள் ஏக்க பெருமூச்சு விட்டான்.

ராகுல் நிஷா இருவரும் அப்போ அப்போ தங்கள் தனி உலகத்திற்குள் சென்றாலும், பெரும்பாலும் நால்வருமாக தான் பேசிக் கொண்டிருந்தனர்.

நிஷா அர்ஜுனிடம் “அண்ணா , நீங்க போக போறது ஜம்மு தானே.? அங்கே உள்ள வொர்க் பத்தி சொல்லுங்க..” என்று கேட்டாள்.

“ஆமாம்.. ஜம்முலேயே மூணு பட்டாலியன்ஸ் இருக்கு. எல்லாமே வேற வேற district .. “

“அப்படினா ரெண்டு பேரும் வேற வேற இடத்துக்குதான் போவீங்களா?”

“இப்போ எங்களுக்கு ஜம்மு பட்டாலியன் தான் ரிப்போர்ட் பண்ணனும். அங்கே போனதுக்கு அப்புறம் மாறும்னு நினைக்கிறேன்.”

“அங்கே போனா communication எல்லாம் எப்படி இருக்கும் கேப்டன்ஜி..” இது சுறா..

“ஹேய்.. கேப்டன்  எல்லாம் வேண்டாம்.. அர்ஜுன்னு சொல்லு.. “

“அது எப்படி கேப்டன்.. ? நீங்க எங்க சீப்.. உங்கள எப்படி மரியாதை இல்லாமல் சொல்றது.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“நாம காம்பஸ் குள்ளே இருக்கும்போது கேப்டன் சொன்னா போதும். வெளியில் நாம friend மாதிரி கூப்பிடு.. இப்போ நிஷா எல்லாம் அழகா அண்ணன்னு மாத்திகிட்டா இல்லியா?”

“ஜி.. மேடம் இப்போ காதலுக்கு மரியாதை செய்துட்டு இருக்காங்க.. அதுனாலே உறவுக்கு மரியாதை செய்ய ட்ரைனிங் எடுக்கறாங்க.. நாம எல்லாம் ப்ரீ bird. இப்போதைக்கு சிக்கிக்கிறதா இல்லை.. அதுனாலே நமக்கு அந்த ட்ரைனிங் எல்லாம் வேண்டாம்.

“அப்போ நானும் இனிமே பார்க்கிற இடத்திலே சேனான்னு உன்னை கூப்பிடவா?”

“சேனா வா.. அப்படின்னா..?”

“ஹ்ம்ம். soldier ஓட ஹிந்தி வோர்ட்.. நான் கேப்டன்.னா நீ சேனா தானே..”

“ஐயே.. சேனா.. சோனா ன்னு ..நல்லாவே இல்லை.. ப்ளீஸ் அப்படி எல்லாம் அந்த சோடாபுட்டி, கைமா முன்னாடி கூபிட்ட்ரா தீங்க ஜி. ரெண்டும் ஒட்டி தள்ளிடும்..”

“அப்போ ஒழுங்கா என்னையும் கேப்டன் கூப்பிட கூடாது.. ஓகே வா..?”

“ஹ்ம்ம் .. சரி கேப்டன் .. சாரி .. சாரி .. சரி அர்ஜுன்.. போதுமா” என்றபடி முனகினாள்.

அர்ஜுனோ “ சப்பா.. இதுக்கே இப்படி கண்ணை கட்டுதே.. இன்னும் இவகிட்ட லவ் சொல்றதுக்குள்ளே நான் என்ன எல்லாம் செய்யனுமோ.. ஆண்டவா நீதான்பா காப்பாத்தனும்..”  என்று மனதினுள் எண்ணினான்.

இவர்கள் வழக்கடித்துக் கொண்டிருக்க ராகுல் நிஷா இருவரும் கண்ணால் பேசிக் கொண்டு இருந்தனர்..  அதை பார்த்த சுபத்ரா

“அடி நிஷா.. இங்கே அவ அவ தொண்டை தண்ணி வத்த சண்டை போட்டு இருக்கா.. நீ என்னடா னா டூயட் பாடிட்டு இருக்கியா . என்ன பாட்டு ?

“கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக... “

அந்த பாட்டுதானே.. “ என்று சண்டை பிடிக்க..,

ராகுல் “ஹேய்.. சூப்பர் தங்கச்சி.. கரெக்ட் ஆ கண்டு பிடிச்சிட்டே...எப்படி மா எப்படி..?”

“அண்ணா... இப்படி நீயே வலிய வந்து சிக்கறியே.. நான் போட்டு வாங்கினா.. நீயே மசால் வடைக்கு ஆசைப்பட்டு வந்துட்ட.” என்று மீண்டும் இருவரையும் ஓட்டினாள்.

ஏனோ எப்போ ராகுலை அண்ணா என்று சொல்ல ஆரம்பித்தாலோ, அவளை அறியாமல் அவனை ஒருமையில் அழைக்க ஆரம்பித்து விட்டாள்.

இந்த நெருக்கம் அர்ஜுனிடமும் வர வேண்டும் என்பதற்கு தான் அவளை பேர் சொல்லி கூப்பிட மல்லுகட்டி நின்றான் அர்ஜுன்.. உள்ளூர பயம்தான் ராகுலை ஒரு வழி பண்ணிய மாதிரி தன்னையும் அண்ணா என்று கூப்பிட ஆரம்பித்து விடுவாளோ என்று.. அவன் நல்ல நேரம். அவளுக்கு அந்த மாதிரி தோன்றவில்லை. ஆனால் அவள் அதை பத்தி யோசிக்கவும் இல்லை.

அதற்குள் ராகுலை காப்பாற்றும் விதமாக “ஹேய்.. சுபத்ரா. கேட்ட கேள்விய மறந்துட்டு டாபிக் மாத்திட்ட பாரு..?”

“ஹ்ம்ம். ஆமாமா.. அங்கே உள்ளவங்க communication பத்தி சொல்லுங்க அர்ஜுன்..”

“எனக்கு தெரிஞ்ச வரை எல்லாமே சிக்னல் transmeter தான் இருக்கும். அதாவது ஜம்முலே மட்டும் மூணு கேம்ப் இருக்கு இல்லியா... terrorist இல்லைனா enemy contry நம்ம communication department trap பண்ணுவாங்க.. அவங்க அப்படி பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாத படி இருக்க , coding மாதிரி தான் இருக்கும்.. “

“ஒஹ் அப்படின்னா எல்லாருக்கும் அந்த மெசேஜ் புரியாது இல்லியா.. ?”

“ஆமாம்.. அதுனாலே ஒவ்வொரு பட்டாலியன் லேயும் ஒரு translator இருப்பாங்க.. அவங்க மூலம்தான் மெசேஜ் எல்லோருக்கும் தெரிய வரும்..”

“அதுக்கு தனியா எதுவும் படிக்கணுமா அர்ஜுன்.”

“இல்லை.. இப்போ எல்லா கம்ப்லேர்ந்தும் சில பேர் செலக்ட் பண்ணி , அவங்களுக்கு ஸ்பெஷல் ட்ரைனிங் கொடுப்பாங்க..  கொஞ்ச நாள் வேற வேற இடத்துலே வொர்க் பண்ணிட்டு, நல்ல ட்ரைனிங் ஆனவுடனே BSF லே போஸ்டிங் கொடுப்பாங்க..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.