(Reading time: 11 - 22 minutes)

சுறா.. “செல்லம் .. நீ மாறவே இல்லைடா.. நான் கூட உனக்கு first ஸ்டாண்டர்ட் லேர்ந்து பாடம் நடத்தனும்மோ ன்னு யோசிச்சேன்.. நீ என்னோட சிஷ்யை நு prove பண்ணிட்ட.. ஐ லைக் யு.. டார்லிங்..” என்று அவளை கொஞ்சினாள்.

அர்ஜுன் மனதுக்குள் “ இங்கே பாருடா .. லவர் கிட்ட சொல்ல வேண்டிய டயலாக்கை friend கிட்ட கடலை போட்டுட்டு இருக்கா.. “ எண்ணியபடி சென்றான்.

பார்கிங் அடையவும் மிதுனை எதிர்பார்த்து நின்றவர்கள் , அர்ஜுன் அப்பாவை பார்த்தவுடன் ஆச்சரியம் அடைந்தார்கள்..

அர்ஜுன் வேகமாக அவர் அருகில் வந்து “டாடி.. என்ன நீங்க வந்து இருக்கீங்க..? “ என்று வினவினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“ஒன்னும் இல்லை கண்ணா.. வழக்கமா நீ morning லே தான் வருவா.. அப்போ உன்னை என்னலே பிக் up பண்ண முடியாது.. அம்மாவையும் தனியா அனுப்ப முடியாது.. ஆனால் இன்னிக்கு நீ நைட் ட்ரைன் லே வரன்னு சொன்னவுடனே, உங்க அம்மா நச்சரிப்பு உன்னை வந்து அழிச்சுட்டு போகணும் நு.. இந்த வாட்டி நீயும் ஊருக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சா.. சரின்னு நானே வந்துட்டேன்.. உங்க அம்மா வீட்டில் waiting..”

“சோ ஸ்வீட் டாடி... அம்மா உன்ன நல்ல டரில் வாங்கறாங்களா.. இப்படி இளைச்சு போட்டீங்க..”

“டேய்.. மகனே.. உங்க அம்மா நீ இல்லன்னு நல்ல சாப்பாடே கண்லே காமிக்க மாட்டேங்குறா.. எப்ப பாரு கஞ்சி, சாலட் ன்னு இலை தழையா போடுறா..” என்று அவர் வருத்தப்பட்டார்.. அவருக்கு சுகர் இருப்பதால் diet உண்டு.. அதைதான் அவர் கிண்டல் செய்தார்.

மகனோ “டாடி. இந்நேரம் உங்களுக்கு கொம்பு முளைசுருக்கனுமே.. காணும் .. “ என,

“டேய்.. ஒட்டுரியா.. வீட்டுக்கு வா பேசிக்கலாம் “ என்னும்போதுதான் நினைவு வந்து சுபா & கோ வை அறிமுகபடுத்தினான் அர்ஜுன்..

“அப்பா.. இவங்க சுபத்ரா, நிஷா .. ட்ரைனிங் கேம்ப் லே ட்ரைனிங் முடிச்சுட்டு ஊருக்கு வந்து இருக்காங்க.. இவங்க சுபத்ராவோட அப்பா, இவர் நிஷாவோட அப்பா.. & வருண் மகிமா அவங்க friends” என எல்லோரயும் அறிமுகபடுத்தினான்.

“ஹேய்.. நீங்கதான் first women parade லீட் பண்ணினது இல்லியா.. & நீங்க அந்த கலாம் சார் மாடல் பண்ணினீங்க ...ரைட்.. உங்கள சந்திச்சது ரொம்ப சந்தோஷம்” என்று கூற, இருவரும் அவருக்கு நன்றி கூறினார்கள்.

“சார்.. உங்கள பத்தி நிறைய கேள்விப்பட்டு இருக்கேன்.. இப்போதான் நேர்லே மீட் பண்ற சந்தர்ப்பம் கிடைச்சது.. ரொம்ப சந்தோஷம்..” என்று கிருஷ்ணனும் கூற, எல்லோரும் சற்று பேசிக் கொண்டு விடை பெற்றார்கள்.

அப்போதுதான் மிதுன் அருகில் வந்தான் “ஹேய்.. மிதுன் என்னடா இவ்ளோ நேரம் எங்கே இருந்த?”

“ஷப்ப.. இப்போவது என்னை பார்த்தீங்களே.. ? நானும் கிட்டத்தட்ட பத்து நிமிஷமா பார்த்துட்டு இருக்கேன்.. ஒருத்தரும் திரும்பி பார்க்கல.. டூ bad” என்றான்..

“சரிடா.. போகலாம் வா..” என்று ஒருவழியாக கிளம்பினார்கள்..

மிதுன் வந்த காரில் ராகுல் ஏற, தன் அப்பா வந்த காரில் luggage வைத்த அர்ஜுன் “அப்பா , நான் ராகுல ட்ராப் பண்ணிட்டு வரேன் பா.. நீங்க முன்னாடி போங்க..” என்றான்

“டேய் அர்ஜுன்.. நீ அப்பா கூட போடா.. உனக்காக இவ்ளோ தூரம் வந்து இருக்கார்.. என்னை மிதுன் ட்ராப் பண்ணட்டும்.. நீ அப்பா கூட போ .. என்றான்..

அர்ஜுன் அப்பாவோ “ஹேய்.. ராகுல் உங்கள் பிளான் அதுதானே ... அப்படியே continu பண்ணுங்க.. நான் வீட்டுக்கு போறேன்.. அர்ஜுன் அங்கே தானே வரபோறான்.. அப்புறம் என்ன..?”

“அங்கிள் ..ஆன்டி வருத்தப்பட மாட்டாங்களா..?”

“அது எல்லாம் நான் சொல்லிகறேன்.. உன்னை ட்ராப் பண்ண போயிருக்கன்னா அவங்க ஒன்னும் சொல்லமாட்டங்க.. சோ யு guys proceed” என்று கிளம்பினார்,

அர்ஜுன் .. “அப்பா . பார்த்து போங்க.. நான் சீக்கிரம் வந்துறேன்...” என்றபடி மிதுன் காரில் ஏறினான்.

“ஹேய் மிதுன் .. என்னடா track ஓட்ட ஆரம்பிச்சுட்ட போலே..”

“ஹேய்.. அர்ஜுன் என்னடா சொல்ற..”

“அதாண்டா மகிமா கிட்ட பேசிட்டியா ?”

“எப்படி கண்டு பிடிச்ச.. ?”

“அதான் நான் உன்ன பாக்கிற வரைக்கும் ஓரமா நின்னு அவள சைட் அடிச்சத பார்த்தேனே.. சரி பவம் பையன்.. disturb பண்ண வேண்டாம்ன்னு பார்த்தா .. என்னை ஓட்டுற நீ..” என்றான்..

“ஹி.. ஹி.. அப்படி எல்லாம் இல்லைடா.. நான் அப்புறம் detail ஆ பேசுவோம்” என்று பேச்சை முடித்தான் மிதுன்.

மழை பொழியும்

Episode 20

Episode 22

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.