(Reading time: 7 - 14 minutes)

மெல்ல அதை நெறுங்கியவன்,அதன் கதவை திறக்க,அவன் மீது ரத்த வெள்ளத்தில் சாய்ந்தாள் நிர்பயா.அவனுக்கு உயிரே ஒடங்கி போக,ஒரு நொடி ஸ்தம்பித்து பேனான்.

"அம்மூ..!ஏ..அம்மூ!இங்கே பாருடி!ஏ..!"-கதறினான் ஜோசப்.பலனில்லை.

"கடவுளே..!"-என்று அவளை தூக்க முனைந்தவன் அப்போது தான் கவனித்தான் அவள் தலையில் பலமான காயம் ஏற்பட்டிருந்ததை!அவளது செங்குருதி கையில் படர,அவன் மனம் திக்கென்று ஆனது.

"ஐயோ!"-என்று அவசர அவசரமாக அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனையை நோக்கி விரைந்தான் அவன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"ன்ன தைரியத்துல இதை என்கிட்ட இருந்த மறைத்த?"-தனது துணைவியின் இரு புஜங்களையும் இறுக பற்றி வினவினார் வைத்தியநாதன்.

"என்ன மன்னிச்சிடுங்க!நிர்பயா தான் சொல்ல கூடாதுன்னு சத்தியம்.."

"வாயை மூடு!ஒரு வார்த்தை இனி பேசுன,உன்னை கொன்னுடுவேன்.யார் அவ??என் பேத்தியை சபிக்க?இந்த நிமிஷம் சொல்றேன்.என் பொண்ணு பல்லவி செத்துட்டா!யார் முக்கியம்னு போனாளோ அவனுக்காகவே அவ வாழட்டும்!அவளை தலை முழுகிடு!இப்போ என் பேத்தி எங்கே இருக்கான்னே தெரியலையே..!எல்லாத்துக்கும் காரணம் அவ தான்!அவளை கொன்று புதைத்தால் தான் என் ஆத்திரம் அடங்கும்!"-என்றவர் தன் கைத்துப்பாக்கியை எடுக்க,அவரது கைப்பேசி அவரை தடுத்தது.

"ஹலோ!"

"தாத்தா!நான்..ஜோசப் பேசுறேன்!"-தழுதழுத்து பேசியவனின் குரல் வைத்தியநாதனையும் அச்சமூட்ட,

"என்னப்பா?என்னாச்சு?"என்றார்.

"அம்மூ..அம்மூ..!அம்மூக்கு ஆக்ஸிடண்ட் ஆயிடுத்து!"-என்று அவரது சிரத்தில் பாறாங்கல்லாய் தூக்கி போட்டான் ஜோசப்.

"மலர் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கேன்.சீக்கிரம் வாங்க தாத்தா!எனக்கு பயமா இருக்கு!"

"இதோப்பா!இதோ உடனே வரேன் கண்ணா!"-என்றவர் உடனடியாக இணைப்பை துண்டித்தார்.

"என்னாச்சுங்க?"

"ஹனிக்கு ஆக்..ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சி!உடனே,ஹாஸ்பிட்டல் போகணும் வா!"-என்றவர் தன் துணைவியை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.

ருத்துவமனையில்..

உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள் நிர்பயா.அவள் படும் அவதிகளை காண சகிக்காதவன் விழிகளில் கண்ணீர் வழிந்தோடியது.

"எக்ஸ்யூஸ்மீ!நீங்க தானே மேடமை அட்மிட் பண்ணது?"

"ஆமா சிஸ்டர்!"

"நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?"

"ஹஸ்பண்ட்!"-தயங்காமல் கூறினான் அவன்.

"சார்!இந்த பேப்பரில் ஒரு சைன் பண்ணுங்க!"

"அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?"

"சொல்ல முடியாது சார்.பிளட் பயங்கர லாஸ் ஆகி இருக்கு!தலையில பயங்கர அடி வேற!டாக்டர் செக் பண்ணிட்டு இருக்காங்க."-என்று பதற்றமாக அவர் கூற,இவனது.இதய சுவாசம் எகிறியது.

அதே அச்சத்தோடு கையெழுத்திட்டான்.

சில நிமிடங்களில் மருத்துவர் வெளியே வந்தார்.

"டாக்டர்!"

"ஜோசப் சார்!ஸாரி..!டூ ஸே திஸ்!உங்க வொய்ப்க்கு நடந்தது ஆக்ஸிடண்ட் மாதிரி தெரியலை.அட்டம்ட் டூ மர்டர் மாதிரி தெரியுது!தலையில பயங்கர அடி!ரத்தம் நிற்கவே இல்லை.பிழைக்கிற வாய்ப்பு பத்து சதவீதம் தான்!கடவுளை வேண்டிக்கோங்க!எங்களால முடிந்ததை செய்றோம்!"-என்ற பதிலில் ஆடி போனான் அவன்.நிலை தடுமாறியவனை தாங்கினான் எட்வர்ட்.

"அண்ணா!"

"............."

"அண்ணிக்கு எதுவும் ஆகாது பாருங்க!அவங்க திரும்ப வருவாங்க!மனசை தளரவிடாதீங்கண்ணா!"-இயன்றவரை தேற்றி பார்த்தான் எட்வர்ட்.ஜோசப் மனம் அவனது ஆறுதலை ஏற்பதாக இல்லை.

உயர்ந்த அன்பென தாயின் அன்பை குறிக்கின்றோம்!ஆனால்,அக்கருத்தை விலக்கி இங்கு நிகழ்ந்த நிகழ்வினை காணுங்கள்!பொய்யாக ஒரு கற்பனையை உருவாக்கி இது வெளியிடப்படவில்லை.பாரத தேசம் மற்றும் உலகின் பல தேசங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன.

ஒருவரின் இதயத்தை காயம் செய்தும்,அவரை தற்கொலைக்கு தூண்டுவதும் ஒன்றே!!தனது தனிப்பட்ட இச்சையானது நிறைவேறாமல் போகும் என்றால்,மனிதனானவன் சற்றும் சிந்திக்காமல் அதற்கு காரணமானவரை தண்டிக்க முயல்கின்றான்.ஒரு வரத்தை இழந்தவன் அது உசிதமானதா?இல்லையா?என்பதை சிந்திக்க முயலுவதில்லை..!இதில்,ஆண் பெண் என்ற பேதமில்லை.மனம் வெறுத்து பிறரை தூற்றும் மனிதன்,மற்றவரின் வாழ்வை குறித்து சிறிதும் கவலை கொள்வதில்லை. அவனுக்கு வேண்டியது எல்லாம் ஒன்றே!!தனது மன நிம்மதி!!பிறரின் மனதை வருத்தி கிடைக்கும் வக்கிரமான நிம்மதி..!

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.