(Reading time: 6 - 12 minutes)

னக்கு இங்க என்ன நடக்குதுன்னு புரியல!என்ன ஆச்சு வினிக்கு?”

“..”

“இவ்வளவு அழகான குடும்பத்தை பிரியவும் மனசு வருமா ?” அவள் கேள்வியில், சாரதா மட்டுமல்ல.. அனைவருமே நிமிர்ந்தனர். என்ன சொல்வதாம்? இந்த குடும்பம், இதைவிட அழகாய் இருந்த நாட்களைப் பற்றி சொல்லவேண்டுமா? விஷ்வானிகாவை தலைக்கீழாக மாற்றிய அந்நாளைப் பற்றி சொல்ல வேண்டுமா?”

சந்தோஷமே உருவாய் இருந்த குடும்பம், சோகத்தின் மறு உருவாய் இருப்பதற்கு தான் மட்டும்தான் காரணம் என்று நினைக்கும் வினியை என்ன செய்வது?

யார் பதில் சொல்வது? என்ற குழப்பத்தில் அனைவரும் இருக்க,சகியின் கை பற்றுதல் லேசாய் இறுக்கமானது.விஷ்வானிகா,கண் விழிக்க போகிறாள் என்பதை உணர்ந்துகொண்டான் அவன்! விளைவு? இமைக்கும் நொடியில் அபியின் கரங்களை தன் கைகளுக்கு பதிலாய் மாற்றிவிட்டு அந்த அறையில் இருந்தே வெளியேறினான் சகிதீபன். அவனது ஒவ்வொரு செயலையும் ஆழ்ந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் மைத்ரேயி.

“அப்பா…!” முதலில் விஷ்வானிகா அழைத்தது அவரைத்தான்.மகளின் பக்கம் ஓடி வந்தார் வேணு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“வினிம்மா”

“அப்பா..”

“பயமுறுத்திட்டியே டா! இது சரிதானா?”

“..”

“ஏற்கனவே ஒரு உயிர் போனது போதாதா?”

“..”

“நீயும் போயிட்டா என்னாகுறது?”

“..”

“இந்த வீட்டின் உயிர் நாடிம்மா நீ! இதை இன்னும் எப்படித்தான் உனக்கு புரிய வைப்பேன்னு தெரியல.! ஆனா,இதுதான்மா உண்மை..”

“..”

“உன்ன கெஞ்சி கேட்குறேன்மா.. இனிமே இப்படி கனவிலும் யோசிக்காத .. அதுக்கு பதிலா என்னை கொன்னு போட்டுரு!”என்றார் அவர்.

அவரது உருக்கமான பேச்சில் அனைவருமே, உருகின, கல் நெஞ்சக்காரனாய் அங்கு வந்தான் சகி.

“ கொஞ்சல் எல்லாம் முடிச்சாச்சா? இப்படி பேசினா மட்டும் இவ தற்கொலை முயற்சி பண்ணிக்காமல் இருப்பாளா?”

“சகி!!”

“என்னை அதட்டாதீங்கப்பா! நானா  தற்கொலை முயற்சி பண்ணேன்?நான் அவ்வளவுகோழை இல்லை!முதுகெலும்பு இல்லாத பூச்சி இல்லை!”

“சகி!!”

“அண்ணா,யாரும் என்னை அதட்டுற வேலை வெச்சுக்காதீங்க..என்னால இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது!”என்றவன் விஷ்வானிகாவை நெருங்கி வந்தான்.

“உனக்கு சாகணும் அவ்வளவுதானே?

“..”

“நானே பெஸ்ட்டு விஷமாய் வாங்கி தரேன்..உன்ன மாதிரி ஒரு கோழையை என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை” என்றான். சாதுமிரண்டால் காடு கொள்ளாது.அதற்கான முழு அர்த்தத்தைஇன்றுதான் நேரடியாக கண்டனர் அனைவரும்.

“நந்து, மாயா ரெண்டுபேரும் கிளம்புங்க.. நந்து ஒன்னுமே சாப்பிடல..மாயா நீங்களூம் ஹாஸ்டல் போகனும்ல?கிளம்புங்க”என்றான் சகி. பார்வையாலேயே விஷ்வானிகாவிடமிருந்து விடைப்பெற்றாள்மைத்ரேயி.

தனது வீட்டில்,நந்திதாவை இறக்கிவிட்ட சகி, மைத்ரேயியுடன் கிளம்பிட,

“எதுக்கு இவ்வளவு நாடகம் கீதன்?” என்றாள்.

அதற்கு கீதன் என்ன சொல்றார்னு அடுத்த எபிசோட்ல சொல்லுறேன்..

ஹாய் ப்ரண்ட்ஸ்.. புதுசா வேலையில சேர்ந்திருக்கேன்.அதனால் நிறைய வேலைகள் இருக்கு. அதுக்குநடுவில் எழுத நேரம் போதாததால் அப்டேட்ஸ் கொஞ்சம் சின்னதா இருக்கு.. சில நாள் பொறுத்துக்கோங்க..சீக்கிரம் வரேன்.. பாய் பாய்..

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.