மூங்கில் குழலானதே – 17 - புவனேஸ்வரி
இப்பிரபஞ்சத்தில் மனிதனால் வரையறுத்து சொல்ல முடியாத விஷயங்கள் எத்தனையோ! அதில் ஒன்று தான் மரணம்!
மரணம், வாழ்க்கையில் வெற்றியெனும் கனியின் சுவை அறிந்தவனுக்கு இது சுமையான தண்டனை. அதேபோல, வாழ்க்கையில் தோல்வி என்று வேம்பினை சுவைப்பவனுக்கு இது சுகமான வரம்.
எல்லா பிரச்சனைகளுக்கும் மரணம் தீர்வில்லைதான்! மரணமே பிரச்சனையாய் தோன்றுவதும் நடப்பதுதான். அதேபோல மரணம் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
உதாரணத்திற்கு, ஏதோ ஒரு கொடிய நொயில் வாடி தனது கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கும் மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். வாழும் காலத்தில் அவன் பிடித்து வைத்திருந்த கௌரவமும்,வைராக்கியமும், மரணம் நெருங்கும் தருவாயில் தவிடுபொடியாகிவிடுவது ஏன்? யாரிடமும் தலைக் குனியாத வாழ்க்கை வாழ்ந்தவன் கூட, தனது இறுதி நொடியில் சிரம் தாழ்த்தி பணிவதன் சாராம்சம் என்ன? சிந்திக்கிறேன் சகிதீபன்!
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
தன்னருகில் சுயநினைவே இல்லாமல் விஷ்வானிகா படுத்திருந்த கோலம், மைத்ரேயியை உலுக்கியது.
“வினி..வினி..என்னம்மா ஆச்சு?”என்று அவளது கன்னத்தை தட்டிட,வினியின் கன்னங்கள் லேசாய் ஜில்லிட்டன. அனிச்சையாய் அவளது சுவாச துடிப்பை பரிசோதித்தாள் மையூ.
“ஒண்ணுமில்லடா..உனக்கு ஒண்ணுமே இல்லை!”என்றவள் உடனே அவ்வறையிலிருந்து வெளிவந்தாள். அபியுடன் ஜாகிங் முடித்துவிட்டு அப்போதுதான் வீட்டினுள் நுழைந்தான் சகிதீபன்.மைத்ரேயியின் தவிப்பை உணராதவன், தூரத்தில் இருந்து அவளை பார்த்ததுமே உல்லாசமாய் உணர்ந்தான்.
“அஹெம்..அஹெம்..” தொண்டையை செருமிக் கொண்டு தன் இருப்பை உறுதிபடுத்தினான் அபிநந்தன். ஆனால் அதை சகி கவனித்தால் தானே? மீண்டும் “அஹெம் அஹெம்” என்றான் அபி.
“என்ன அண்ணா?”
“நான் உன் அண்ணாடா? ஞாபகம் இருக்கா அது உனக்கு?”
“ ஹும்கும் ஞாபகம் இல்லாமல்தான் அண்ணான்னுகூப்பிட்டேன்னா?”
“ஹ்ம்ம்.. வார்த்தையில இருக்குற புத்திசாலித்தனம் செயலில் இல்லையே தம்பி.”
“அப்படி என்ன பண்ணிட்டோமாம்?”
“இப்படி அண்ணன் முன்னாடியே சைட் அடிப்பது ஞாயமா? எதையும்மறைச்சு வைக்கிற பழக்கமே இல்லையா சகி உனக்கு?”
“எதுக்கு மறைக்கனும்? சரியோ, தப்போ நீங்களும் கல்யாணம் பண்ணி, அப்பான்னு ப்ரொமோஷனும் வாங்கிட்டீங்க.. ஆனா நான்? இன்னும் ஐ லவ் யூ கூட சொல்லல! சரி,தம்பி தான் இவ்வளவு கஷ்டபடுறானே! அவனுக்காக நாமளே கல்யாணம் பேசி வைப்போமான்னு பொறுப்பு இல்லாமல் என்னையே கலாய்க்கிறீங்களே!” என்று சகி சோகமாய் சொல்லவும்,சட்டென சிரித்துவிட்டிருந்தான் அபி,
“ இதை உன் வாயால கேட்கனும்னு தான் வெயிட் பண்ணேன் தம்பி! அதான் நீயே சொல்லிட்டியே! இப்போ பாரு”என்ற அபிநந்தன்,”மயூ” என்று அழைத்தப்படி வீட்டிற்குள் ஓட,
“ஐயோ..டேய் அண்ணா!” என்று அவனை துரத்திக்கொண்டு ஓடிவந்தான் சகிதீபன்.இரு ஆண்களின் வேகமுமே மையூவின் கண்ணீர்துளியைக்கண்டு காணாமல் போனது.
“மாயா ஏன் மா அழுவுற? கெட்ட கனவு கண்டியா? வீட்டுக்கு ஃபோண் பண்ணனுமா?மனசு சரி இல்லயா?”என்று சகிதீபன் அக்கறையாய்வினவிட, ஒரு அதட்டல் போட்டான் அபி.,
“டேய் கொஞ்சம் நீநிதானமா இருடா!நீபாட்டுக்கு இப்படியெல்லாம் கேள்வி கேட்டா பாவம் அந்த பொண்ணு என்ன பதில்சொல்லும்?”என்று அவன் பரிந்து பேசவும், இருவருக்கும் பதில் சொல்லாமல் விஷ்வானிகாவின் அறைக்கு ஓடினாள் அவள்.
மருத்துவமனை!
எப்போதடா விஷ்வானிகா விழிகளை திறப்பாளென்ற எதிர்ப்பார்ப்புடன் மொத்த குடும்பமும் அங்கு காத்திருந்தனர். வினியின் ஒரு பக்கம் அமர்ந்து சாரதா அவளது தலை கோதிவிட, இன்னொரு பக்கம்,அவளது கையை தனது உள்ளங்கையில் பொத்தி வைத்துக் கொண்டான் சகிதீபன்.
கிழக்கும் மேற்கும் கை கோர்த்து இருக்கும் அழகை கண்டு அவனது இருவிழிகளே கண்ணீர் மழை பொழிந்தன. ஊரில் உள்ள யார் யாரோ பிரச்சனையை தீர்த்து வைக்கத் தெரிந்த எனக்கு,என் மகளின் மனம் புரியாமல் போய் விட்டதே என்று அரற்றி கொண்டிருந்தார் வேணு.
மகனை அதட்டும் மனநிலை இல்லாமல் அருண்தாத்தாவும் சோகமேஉருவாய் இருந்தார். அபிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அவனது கையைப் பிடித்துக் கொண்டாள் நந்திதா. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்தும் புரியாமலும் சாரதாவின் தோளை பற்றினாள் மைத்ரேயி.
“அம்மா..”
“சொல்லு மயூ!”