(Reading time: 7 - 13 minutes)

11. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai

                 

தோ ஒரு உந்துதலில் ராகவனின் வீட்டிற்குள் குதித்திருந்தாள் நிரூபணா. அவளது குறுட்டு தைரியத்தை நிலைகுலைய செய்யவே அங்கொரு ஜீவன் காத்திருந்தது. அவளது இடை உயரத்திற்கு நாய் ஒன்று நிமிர்ந்து நிரூவை பார்த்து நாக்கை நீட்டிக் கொண்டு முறைத்தது. அதன் தோற்றத்தில் அவளுக்கு குலை நடுங்கி, முதுகு தண்டு சில்லிட்டது.

“பயத்தை வெளில காட்டாதே பக்கி.. நீ பயந்தா, அது இன்னும் மெரட்டும்!” என்று தனக்கே அறிவுரையளித்துக் கொண்டவள். ஸ்னேகமான பாவத்துடன்,

“த்து..து” என்று சொடுக்கு போட இப்போது அந்த நாய் குரைக்கவே ஆரம்பித்திருந்தது.

“எரும மாடு! எதுக்கு கட்டி ஊர கூட்டுற?”என்று நாயைப் பார்த்து அவள் திட்டும்போதே, அடுத்த அதிரடி ஆரம்பம். தனது செல்ல நாயின் சத்தம் கேட்டு, ஜாக்கிரதை உணர்வுடன், கையில் துப்பாக்கியை எந்திக் கொண்டு அங்கு வந்தான் ராகவன். அவளை நேராய் சுடுவது போல பொசிஷனில் நின்று கொண்டு,

“அது எரும மாடு இல்ல.. நாய்!” என்றான். குரல்கேட்ட திசை பார்த்தவள்,அவன் நின்ற கோலத்தைக் கண்டதும், “ச்ச.. இது உனக்கு தேவையா நிரூ?” என்றுசொல்லிக் கொண்டாள்.

“மிஸ்டர் ராகவன் ரிலாக்ஸ்.. நான் குற்றவாளி இல்லை!”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“ஆமாஆமா, நீ வீட்டின் பின்பக்கமா சுவர் ஏறி குதிச்சு வந்த நேர்மைவாதி தான்!”

“முன்பக்கமாக வந்து உங்க கிட்ட பேசுறதுக்கு என்னிடம் வலுவான காரணம் இல்லையே!”

“காரணம் இல்லாதவளுக்கு பின் வாசலில் மட்டும் என்ன வேலையாம்?”

“சார்,முதல்ல துப்பாக்கிய கீழே போடுங்க..எனக்கு போலிஸ்,துப்பாக்கி இது எல்லாத்தையும் பார்த்தால் அசௌகரிமாக இருக்கும்”

“இதை எல்லாம் நீ என் வீட்டு பின்வாசலில் குதிக்கிற முன்னாடி யோசிச்சிருக்கனும்!”

“அய்யோ ராமா! இதென்ன பெரிய சீன பெருஞ்சுவரா?இதை தாண்டிட்டேன்னு எத்தனை தடவை சொல்லி காட்டுவீங்க?”

“உனக்கு என்ன வேண்டும்? எதுக்கு அத்துமீறி நடந்துக்குற?”

“நான் அத்துமீறி நடந்துக்குறேனா? வினய் எங்கே? அவனை உங்க டிபார்ட்மண்ட்ல ஒப்படைச்சுட்டீங்களா?”

“..”

“ இந்த மௌனத்துக்கு பதில் என்ன? அப்போ அவன் உள்ளே தானே இருக்கான்? நீங்க என்ன அத்துமீறல்செஞ்ச்கிட்டு இருக்கீங்க? அதை சொல்லுங்க சார்!”

“அது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம்!”

“அப்படின்னுநீங்களே நினைச்சுட்டு போங்க! நான் அவனை பார்க்கனும்!”

“எதுக்கு பொன்னாடை போர்த்தனுமா?”

“நான் யாருன்னு தெரியுமா சார் உங்களுக்கு?”

“தெரியும்! மத்தவங்களைவிட கொஞ்சம் ஜாஸ்தியாகவே தெரியும். நிரூபணா! பெயரிலேயே தொழிலை வெச்சுருக்கும் பொண்ணு. சமயம் பார்த்து பாயுறதுக்காக பதுங்கிவரும் புலி! அர்ப்பணாவின் ஆருயிர் தோழி! வேற ஏதும் சொல்லனுமா?”. ராகவேந்திரனின் கேள்வியின் வாயடைத்து போனாள் நிரூ.

“எப்படி இதெல்லாம் தெரியும்?”

“என் அபியை யாரு நெருங்கி போனாலும், அவங்களுடைய ஜாதகமே என் கையில் இருக்கும்!”

“என் அபியா? இந்த உரிமையை அவ உங்களுக்கு கொடுத்தாளா?”

“அவ ஏன் கொடுக்கனும்? காதல் என்பது உணர்வு! உரிமை போராட்டம் இல்லை!”

“காதலா?”

“நீங்க என்ன இவ்வளவு லேட் பிக் அப் பா இருக்கீங்க? நான் அவளை காதலிக்கிறென்னு இன்னுமா உங்க மரமண்டையில் ஏறல?” என்று நக்கலாய் கேட்டு சிரித்தான் ராகவன். ஒருவழியாய் துப்பாக்கியை கீழிறக்கினான்.

“வினயை பார்க்கனும்னு ஆசைப்பட்டீங்களே! இங்கிருந்தே பாருங்க!”என்று தனது மடிகணினியை காட்டினான் ராகவேந்திரன். அவன் பொருத்தியிருந்த சீசிடீவி காட்சி நேரடியாக தெரிந்தது.

கண்ணாடி சவபெட்டி போன்ற ஒரு பேழையில் படுத்திருந்தான் அவன். அந்த பெட்டியில் நுணுக்கமான அளவில் துவாரங்கள் இருக்க அந்த துவாரங்கள் வழியே அமிலம் (எசிட்) அவ்வப்போது தெளித்து கொண்டிருந்தது. அதாவது அந்த சின்ன கண்ணாடி பெட்டியில் வினயின் உடல் கஷ்டபட்டு மடங்கியிருந்தது. அவன் வலியில்முணகி கொஞ்சம் நகர்ந்தாலும், அமிலம் அவனது ரோமத்தை மட்டுமின்றி சதையையும் பதம் பார்க்கும். அந்த காட்சியை காண முடியாமல் திரும்பி கொண்டாள் நிரூபணா.

“என்ன கொடுமை இது?”

“கொடுமை இல்லை! தண்டனை!”

“அந்த தண்டனையை கொடுக்கநீங்க கடவுளா?”

“நேத்து ராத்திரி இவனும்தான் அபிக்கு இதே வலியை கொடுக்க ஆரம்பித்தான் ! அது மட்டும் சரியாகிடுமா?” தன் விழிகளால் அவளது விழிகளையும், கேள்விகளால் அவளது சிந்தனையையும் துளைத்தான் ராகவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.