(Reading time: 9 - 17 minutes)

23. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ன்று இரவு ட்ரைனில் நிஷா அவள் குடும்பத்தோடு ஊருக்கு செல்வதாக இருந்தது. சுபத்ரா வீட்டினர் அவர்கள் வீட்டில் தங்கி இரண்டு, மூன்று நாட்கள் சுற்றி பார்த்துவிட்டு செல்லும்படி கூறியதற்கு நிஷாவேதான் திரும்பி வரும்போது வருவதாக சொல்லி இருந்தாள்.

ஆனால் தற்போது ராகுல் நினைவில் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள். ராகுல், அர்ஜுன் இருவரும் இன்னும் பதினைந்து நாட்களில் கிளம்பி காஷ்மீர் செல்ல வேண்டும். நிஷா, சுபத்ராவிற்கோ போஸ்டிங் ஆர்டர் எப்போது வரும் என்று தெரியாத நிலை.

நேற்று வரை எப்படியோ, ராகுலின் அன்பை அறிந்த பிறகு அவனிடம் சொல்லாமல் செல்ல முடியவில்லை. ராகுல் போன் நம்பர் கொடுத்து இருந்தாலும் , இன்று காலை வரை நேரில் பார்த்திருப்பதால் போனில் பேச வேண்டிய அவசியம் நேரவில்லை. இப்போது முதலில் நிஷாவிற்கு தானாக  ராகுலிடம் பேச தயக்கமாக இருந்தது.

நிஷா, சுறா இருவரும் ஓய்வெடுக்க சென்றாலும், கொஞ்ச நேரம் தூங்கிய நிஷாவின் தூக்கம் ராகுலின் நினைவால் கலைந்து விட்டது. என்ன செய்வது என்ற யோசனை வேறு..

சுறா நன்றாக தூங்கி எழுந்தவள் , நிஷாவின் முகத்தை பார்த்து விட்டு,

“ஹேய்.. நிஷா .. என்னடி ஆச்சு.? அண்ணா கூட டூயட் பாடிட்டு தூக்கத்துக்கு டூ விட்டுட்டியா?” என்று சொல்லிக் கொண்டு “அட.. அட.. சுபா.. என்னமா தமிழ் எதுகை மோனைலே துள்ளி விளையாடுற.. கூடிய சீக்கிரம் கவிதாயினி ஆயிடுவே போலிருக்கே...இல்ல நிஷா “ என்று வேறு கேள்வி கேட்டாள்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“அடியேய்.. நீ பேசும்போதே ஸ்பெல்லிங் mistake விடுற ஆளு.. இதிலே கவிதாயினி பட்டம் வேற.. அடிங்க.. என்னை கொலைகாரி ஆக்காத சொல்லிட்டேன்..”

“அட.. போம்மா.. உனக்கு பொறாமை.. சுறா.. யு டோன்ட் வொர்ரி.. நீ பிச்சு உதறு..”

“ஹேய்.. வெறி ஏத்தாத.. “

“சரி.. சரி.. விடு.. என்ன விஷயம்.. உனக்கு இல்லாத மூளையை கசக்கி என்னமோ யோசிச்ட்டு இருந்தியே.. ?”

மீண்டும் அவள் முறைக்கவும் “சரிம்மா.. சொல்லுமம்மா..” என,

நிஷா ராகுலிடம் தான் இன்றே ஊருக்கு கிளம்பும் விஷயத்தை சொல்லாததை சொன்னாள்.. அதோடு தன் தயக்கத்தையும் சொன்னாள்.

“ஏண்டி.. இதுக்கு எல்லாமா தயங்குவாங்க.. “

“உனக்கு வந்தா தெரியும்..”

“இந்த அச்சம், மடம் , நாணம் இது எல்லாம் நம்மள பார்த்து சுனாமிய பார்த்த எபக்ட்லே ஓடிபோயடும்..”

“எங்களுக்கும் காலம் வரும் .. சுறா மேடம்.. அப்போ இந்த டயலாக் நான் நியாபகபடுத்தறேன்..”

“அப்போ பார்க்கலாம்.. சரி இப்போ என்ன செய்ய போறே.?”

“அதுதாண்டி எனக்கும் புரியல..”

தலையில் அடித்துக் கொண்டு யோசித்தவள் “ஹேய்.. வேணா நம்ம கேப்டன் விஜயகாந்த் கிட்ட பேசி பார்க்கலாம்.. அவர் எதாவது மொக்கை ஐடியா கொடுப்பார்..”

“ஏய்.. என் அண்ணன் உனக்கு விஜயகாந்த்.. அதுவும் மொக்கை ஐடியா.. கொடுப்பரா .. உன்னை எல்லாம்.. சரி விடு.. நீ கொடுத்த இந்த ஐடியா ஓகே.. நான் இப்போவே பேசறேன்..”

“இத பார்ரா.. அவங்க அண்ணன் சொன்னதுக்கு இந்தம்மா கும்மி அடிச்சுட்டு இருக்காங்க.. எப்படியும் என்கிட்டதாண்டி மவளே வரணும்.. அப்போ பார்கிறேன்.. என்ற படி நிஷா பேசுவதை பார்த்து இருந்தாள்.

நிஷா போனில் அர்ஜுன் நம்பர் அடித்தவள், அவன் எடுக்கவும்

“ஹலோ ..அண்ணா.. நிஷா பேசறேன்..”

“சொல்லு நிஷா.. சுபத்ரா வீட்டிற்கு போய் நல்ல ரெஸ்ட் எடுத்தீங்களா?”

“ஆமாம் அண்ணா.. நீங்க ரெஸ்ட் எடுத்தீங்களா?”

“எஸ் மா.. சொல்லும்மா.. என்ன விஷயம்?”

“அது... நான் இன்னிக்கு நைட் ஊருக்கு கிளம்பறேன் .. அதான் உங்க கிட்ட சொல்லிடலாம்ன்னு பண்ணினேன்.. அப்பா கிட்ட .. அப்புறம் எல்லோர் கிட்டயும் சொல்லிடுங்க..” என்று ராகுல் பேர் சொல்ல தயங்கி எல்லோரிடமும் என்றாள்.

அதை புரிந்து கொண்ட அர்ஜுன் “அப்படியா.. ராகுல்க்கு தெரியுமா ?” என்றான்.

“இல்லைனா தெரியாது..” என்று தயங்கினாள் நிஷா..

அவளின் தயக்கத்தை உணர்ந்த அர்ஜுன் “நீ கட் பண்ணுமா.. நான் கொஞ்சம் கழித்து கூப்பிடுறேன்..” என்றான்..

அவள் போனை வைக்கவும் , “என்னடி .. உன் பாசமலர் என்ன சொன்னார்.. ?” என வினவினாள் சுறா..

“கொஞ்சம் கழித்து பேசறேன்னு சொல்றாறடி.. “

“சரி   வெயிட் பண்ணுவோம் ..”

நிஷாவிடம் பேசி வைத்த அர்ஜுன் ராகுல்க்கு போன் செய்தான்..

ராகுல் போன் எடுத்து “சொல்லுடா.. மச்சான்..?”

“டேய்.. நிஷா இன்னிக்கு நைட் ஊருக்கு போறாளாம்.. உனக்கு தெரியுமா ?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.