(Reading time: 7 - 13 minutes)

த்யன்!  வந்துவிட்டானா? தன்னை தேடி வந்தே விட்டானா? இன்று பரவிய இச்செய்தி அவனை நிழலாய்தொடர்ந்திருக்குமே? நிழல் வேண்டாம்,நான்தான் வேண்டும் என்று வந்து விட்டானா?என தன்னையே கேட்டுக் கொண்டாள் கண்மணி.

அவளுக்கு இணையான தவிப்பில் இருந்தான் சத்யன். காரோட்டிக் கொண்டே அந்த வீட்டினுள் நுழையும்வரை, “ஒருதடவை கூட அழுதிடாதே கண்ணம்மா! என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியாது” என்று சொல்லிக் கொண்டெ தான் வந்தான். அவன் முதலில் கவனித்தது வெற்றியை அல்ல!கண்மணியையும் அவளது கண் மணிகளையும் தான்!

அழவில்லை! என்னவள் அழவில்லை! எதையோ சாதித்து ஓய்ந்தது போல பெருமூச்சு அவனுக்கு! அவனை பார்த்திருந்தவளும் அதே நிலையில்தான் இருந்தாள். செய்தியை படித்த கண்மணியின் மனதில் தோன்றிய முதல் விஷயம், “ இதை எப்படி சத்யன் தாங்கிடுவான் ? என்ன செய்வான்? சில நடிகர்கள் போல, நோ நான் ஜஸ்ட் ப்ரண்ட்ஸ் என்று கூறி நட்பையும் காதலையும் களங்கபடுத்திவிடுவானோ! ”என்பதுதான்.

தன் மனம் வென்றவன்,துணிச்சலாக தன்னை பார்க்க வந்ததில் அவளுக்கு பெரிய நிம்மதி. நிமிர்வும் அவளை ஒட்டிக் கொண்டது.

“சத்யன்…உள்ள வாங்க”என்றாள் இயல்பான குரலில்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“நீ என்னடா மசமசன்னு நிற்கிற? நம்ம வீடுதானே? வாங்கன்னு நீ கூப்பிட மாட்டியா?”என்று அவள் அதட்டல் போட,

“ம்ம் வாங்க” என்று பிடித்தம் இல்லாத குரலில் வரவேற்றான் வெற்றி.

“ரெண்டு பேருக்கும் காஃபி கொண்டு வரேன்.. அதுவரைக்கும் ஒருத்தருக்கொருத்தர் எதுவுமேபேசிக்க கூடாது! “என்று ஆணை பிறப்பித்துவிட்டு ஓடினாள் கண்மணி.எங்கே தன் கனவு பலித்துவிடுமோ என்ற கவலை அவளுக்கு! காஃபி தயாரிக்க எடுத்துக்கொண்ட சில நிமிடங்களிலேயெ என்ன பேச வேண்டும் என்று அவள் முடிவு செய்திருந்தாள்.

புன்னகையுடன் இருவருக்கும் காஃபியை கொடுத்தாள்.

“உங்க ரெண்டு பேருக்கும் தொழில் ரீதியாக அறிமுகம் இருக்கலாம்..ஆனால், நம்ம வீட்டுல நான்தான் அறிமுகப்படுத்தி வைப்பேன்!”என்ற கண்மணி வெற்றியின் அருகில் சென்றாள்.

“சத்யன், இவன் வெற்றி.என்னை பொறுத்தவரை மனுஷன் அனுதினமும் சிரிச்ச முகமாய் இருக்குறதே பெரிய வெற்றி! அந்த வகையில் என் வாழக்கையின் வெற்றி இவன். எனக்கு அம்மா அப்பா இல்லை..அந்த இடத்தை இவன் பூர்த்தி செய்யனும்னு நினைச்சது இல்லை! அவன் அவனாகவே இருந்தான்.. அதனாலேயே மற்ற உறவுகளை தாண்டி இவன் உயர்ந்தே இருக்கான்”என்றாள்கண்மணி. தன் தோழியின் அபிமான பேச்சினில் வெற்றியின் மனம் குளிரத்தான் செய்தது.

“வெற்றி, சத்யனை பத்தி சொல்லுறதுக்கு முன்னாடி என் கேள்விக்கு பதில் சொல்லு!”

“கேளு கண்ணு!”

“நான் ஒரு டாக்டரை கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தால்நீ என்ன சொல்லுவ?”

“அவன் நல்லவனா? உன்னை சந்தோஷமா பார்த்துப்பானான்னு யோசிச்சு பதில் சொல்லுவேன்!”

“ஒரு போலிஸ் ஆஃபிசரா இருந்தால்?

“”அதேதான்! உனக்கு ஏற்றவனா இருக்கனும்!”

“வக்கில்னா?”

“கண்ணு! தொழில்ல என்ன இருக்கு? எவனாக இருந்தாலும், அவன் நல்லவனாக இருக்கனும்..உன்னை உயிராக பார்த்துக்கனும்!”

“அப்போ நடிப்பை ஒரு தொழிலாக பண்ணும் சத்யனை நான் கல்யாணம் பண்ணிக்கனும்னுநினைக்கிறேன் டா!” என்று தன் மனதினை போட்டு உடைத்தாள் கண்மணி!

அடுத்து என்னாச்சுன்னு, அடுத்த வாரம் சொல்லுறேன்.

ஹாய் ப்ரண்ட்ஸ்.. புதுசா வேலையில சேர்ந்திருக்கேன்.அதனால் நிறைய வேலைகள் இருக்கு. அதுக்குநடுவில் எழுத நேரம் போதாததால் அப்டேட்ஸ்கொஞ்சம் சின்னதா இருக்கு.. சில நாள் பொறுத்துக்கோங்க..சீக்கிரம் வரேன்.. பாய் பாய்..

-வீணை இசைந்திடும்-

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.